Header Ads

Tamil Mokka SMS 2013 (Boopathy Murugesh)

உலகில் உள்ள மொத்த ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் இருப்பதாக உலக வங்கி கூறியுள்ளது.

இதுக்கு சுவிஸ் வங்கி என்ன சொல்லுது?

--------------------------------------------------------------------------------------------------------

தாண்டவம் படத்தில் வர மாதிரி கல்யாணத்துக்கு பிறகு,பேசணுமாம்,பழகணுமாம்,காதலிக்கனுமாம் அப்பறம் தான் எல்லாமாம்.

நீ வேணா அனுஷ்காவா இருக்கலாம்,நான் விக்ரம் இல்ல....எஸ்.ஜே.சூர்யா :-P

---------------------------------------------------------------------------------------------------------

கொங்கு தனி மாநிலத்தை உருவாக்குவோம் - பெஸ்ட்ராமசாமி.

தனி நாடா உருவாக்குங்க,நானும் (கோயம்புத்தூர்)வெளிநாட்டில் வேலை பார்க்குறேன்னு பரமக்குடில பொண்ணாவது தருவாங்கே :-P

-------------------------------------------------------------------------------------------------------

நான் இங்கிலீசில் கொஞ்சம் வீக்கு,எழுத்து கூட்டி வாசிக்க லேட் ஆகத் தான் செய்யும்.

உனக்கு கஷ்டமா இருந்தா நீ தமிழ் வார்த்தைகள் உள்ள டீசர்ட் போடு.
-----------------------------------------------------------------------------------------------------

காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயார் - டி.ராஜேந்தர்.

அப்போ நரேந்திர மோடி வாழ்க்கை :-(
---------------------------------------------------------------------------------

ஒலிம்பிக்ல 'துப்பாக்கி சுடுதலை' எடுத்துட்டு 'தோசை சுடுதல்' வச்சா இந்திய பெண்கள் அணி பதக்கத்தை அல்லும்.

தொடர்ந்து ஒருவாரமா தோசை...தொட்டதுக்கெல்லாம் தோசையா :-(

-------------------------------------------------------------------------------------------------------

இன்பாக்ஸில் 'பியுட்டி' இருக்கலாம்,
பேஸ்புக்கே 'ட்யூட்டி'யா இருக்க கூடாது :-)

நிஜ வாழ்க்கைக்கு கொஞ்சம் அதிகமாக மெனெக்கெடனும்,குறிப்பா நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------

கோவிலில் அழகான ஆண்டி தனியா நின்னா கொஞ்சம் பொறுமையா தேடுங்க,அவங்க பொண்ணும் பக்கத்தில் தான் எங்கயாவது தான் நிக்கும்.

கிடைக்கலைனா விட்ருங்க,ரொம்ப நேரம் தேடதிங்க அவங்க புருசனும் அங்க தான் நிப்பாரு.

------------------------------------------------------------------------------------------------------------

I Miss you'ன்னு சொன்னா.

I Mrs you'ன்னு ரிப்ளே அனுப்பிட்டேன்.

கான்பிடண்ட் பாஸ் கான்பிடண்ட் :-)

-------------------------------------------------------------------------------------------------

கெயில் நிறுவனம் யார் பேச்சையும் கேட்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது- கருணாநிதி

கேப்டன் வீரட் கோலி பேச்சை கூட கேக்கலையா தலைவா,வெஸ்ட்இண்டிஸ்க்கே திரும்ப அனுப்பி விடனும் அவனை :-
------------------------------------------------------------------------------------------------------

அறிவை அழிக்கும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தாதீர்கள் - இஸ்ரோ விஞ்ஞானி வேண்டுகோள்.

இனி ராக்கெட் விட பீர் பாட்டில் கேட்டு வீட்டு பக்கம் வா...அப்போ இருக்கு உனக்கு.

---------------------------------------------------------------------------------------------------

பேஸ்புக்ல டாக் (Tag) பண்ணி லைக் வாங்குனவன விட திட்டு வாங்குனவன் தான் அதிகம்.

உங்களுகெல்லாம் வேற வேலையே இல்லையா.

-------------------------------------------------------------------------------------------

ஐ.பி.எல்'ல 'சியர் லீடரை' பார்க்கும்போது என் நான்காம் வகுப்பு 'கிளாஸ் லீடர்' சரண்யா தான் நியாபகம் வருது.

அந்த பொண்ணும் இப்படி தான் செம ஆட்டம்,பேசுனேன்னு என் பெயரை எழுதி அடிவாங்கி கொடுக்கும் :-(

-----------------------------------------------------------------------------------------------------------

ஒரு அட்டை 'கத்தி'யாகலாம்,அத்தை 'சித்தி'யாக முடியாது.

நெவெர்...நான் உனக்கு அண்ணனும் இல்ல,நீ எனக்கு தங்கச்சியும் இல்ல.

---------------------------------------------------------------------------------------------------------

கல்லூரி காதலில் பசங்க தான் மாஞ்சு மாஞ்சு லவ் லெட்டர் எழுதுவாங்க,பொண்ணுங்க அதிகபட்சமா ரெக்கார்ட் நோட் மட்டும் தான் எழுதி தருவாங்க.

அவதானிப்பு :-)

-----------------------------------------------------------------------------------------------------------

அமெரிக்காவில் குண்டுவெடிப்பு - கத்தாரில் பூகம்பம்.

உலகை யார் முதலில் அழிக்கிறோம் என்பதில் மனிதனுக்கும் இயற்கைக்கும் போட்டி :-(

----------------------------------------------------------------------------------------------------------

எதற்கும் அடிமையாகி விடாதீர்கள்.

முக்கியமாக அன்பிற்கு.

------------------------------------------------------------------------------------------------------

ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம்? - செய்தி.

தோனிக்கு முன்னாடி இவிங்க ஹெலிக்காப்டர் ஷாட் அடிச்சுருவாங்கே போல :-(

------------------------------------------------------------------------------------------------------

அதிமுகவில் கட்சி நிர்வாகிகள் கருத்தை கூற முடியுமா? -மு.க.ஸ்டாலின்.

தல வாக்கிங் போன நம்ம ஆளுங்க ரெண்டு பேரை காணோம் தல.
-----------------------------------------------------------------------------------------------------

கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கொடியேற்றும் காலம் வரும் - திருமாவளவன்.

ஆமா மழைகாலம் வந்தா கோட்டைகுள்ள கொடி கட்டுங்க துணி காயப்போடலாம் :-P

--------------------------------------------------------------------------------------------------

பேஸ்புக் வெப்சைட்டை டெவெலப் பண்றவன் கூட தொடர்ந்து இந்த பக்கத்தை இவ்வளவு நேரம் பார்த்துட்டு இருக்க மாட்டான்.

திங்கக்கிழமை அதுவுமா தீயா வேலை செய்றிங்க :-)

------------------------------------------------------------------------------------------------

எப்பவும் சண்டை போடும் சக்கை பிகருடன் ஒத்துபோவதை விட,

எப்பவும் பாசமா இருக்கும் ஒரு சப்பை பிகருடன் செத்து போகலாம் :-)

---------------------------------------------------------------------------------------------------

ச்சீ...நீயெல்லாம் அண்ணன்,தம்பி கூட பிறக்கல?
உன் அப்பாவும் ஒரு ஆம்பள தானே...? :-(

---------------------------------------------------------------------------------------------------

இப்போதெல்லாம் பேருந்தில் இரண்டு பயணச்சீட்டு வாங்குகிறேன்,
இதயத்தில் நீயும் இருப்பதனால்.

அடடே...!

---------------------------------------------------------------------------------------------------

நண்பன் சோகமா வந்து சொன்னான்,
"மச்சான் என் ஆளு தொட்டதுக்கு எல்லாம் சண்ட போடுறாடா"
.
.

நான் பொறுமையா கேட்டேன்,
"அது இருக்கட்டும்,நீ எங்கடா தொட்ட?"
.
.

இப்ப என்ன தப்பா கேட்டுட்டேன்?சாயங்காலம் சரக்குக்கு கரெக்ட் பண்ணி வச்சுருந்தேன் பயபுள்ள கோச்சுட்டு போய்ட்டான் :-(
--------------------------------------------------------------------------------------------------------

நீ கெட்டவன்.
நான் மட்டுமா கெட்டவன்,நீயும் தான் கெட்டவன்.

நீ என்ன கிழிச்ச?
நான் கிழிச்சது இருக்கட்டும்,நீ என்ன கிழிச்ச?

பெரும்பாலான பேஸ்புக் அரசியல் சண்டைகள் இவ்வாறே நடக்கின்றன,இப்ப தான் நோட் பண்ணேன் :-)

-------------------------------------------------------------------------------------------------------------

No comments