Header Ads

life sms in tamil (Boopathy Murugesh)


கத்தி குத்து பட்டவன்கூட தூங்கிவிடுவான், ஆனால்
பசியோடு இருப்பவனால் தூங்கமுடியாது !!

-------------------------------------------------------------------------
கூட்டணியில் இருப்பதால்தானே மிரட்ட முடிகிறது:
கருணாநிதி # அதாவது , சுருட்ட முடிகிறது

-----------------------------------------------------------------------------------------------------


#பேச்சு வழக்கில் "நேரம் இருந்தால் பார்க்கலாம்" என்ற சொற்றொடர் நாம் அறிந்ததே,அதே போல புதிதாக இப்பொழுது ஒரு சொற்றொடர் இந்த நூற்றாண்டில் இணைந்துள்ளது.
.
.
.
.
.
.
"கரண்ட் இருந்தா பார்க்கலாம்"

----------------------------------------------------------------------------------------------------

நான்:அன்பே...! ஒரு காதல் கவிதை எழுதி உன்னை டேக் பண்ணவா?

அவள்:வேணாம்.

நான்:ஏன் என்னை பிடிக்கலையா?

அவள்:இல்ல உங்க ப்ரெண்ட்ஸ் அதுல மொக்க கமெண்ட் போட்டு என்னை அசிங்க படுத்துவாங்க.

அப்போ இங்க உள்ள பொண்ணுங்க பயப்படுறது என் காதலுக்கு இல்லை,கமெண்டுகளுக்கு தான்...சிலரை ப்ளாக் பண்ற நேரம் வந்துருச்சு :-)

--------------------------------------------------------------------------------------------------------
#லவ் பண்ற புள்ளைன்னு அது போடுற எல்லா ஸ்டேடஸ்க்கும் லைக் போட கூடாது,ஒரு நாள் கல்யாண போட்டோ போடலாம் அதுக்கும் தெரியாம லைக் போடுற நிலைமை வரும் :-(

----------------------------------------------------------------------------------------------------------

#நீ கீழே விழும்போது தலையில் அடிக்க ஒரு எதிரியின் கை வருகிறது என்றால்,உன்னை தாங்கி பிடிக்க நூறு நண்பர்களின் கைகள் வர வேண்டும்.

அதுவே விழும்வரை நீ வாழ்ந்த வாழ்விற்கான அர்த்தம்.

----------------------------------------------------------------------------------------------------------

உனக்கு லைக்கு போட தெரியாது,
கமெண்ட்டு போட தெரியாது.
டேக்-கு மட்டும் பண்ண தெரியுமோ?

(எங்க இருந்து தாண்டா வரிங்க நீங்க எல்லாம்?)

--------------------------------------------------------------------------------------------------------

#ஒரு அரசியல் ஸ்டேடஸ் போட்டா அதில் கமெண்ட் போடுற 86 பேரில் 76 பேரு 66Aன்னு கமெண்ட் போட்டா நல்லாவா இருக்கு?

தரித்தினியம் பிடிச்ச பக்கிகளா.ஓடிருங்க.

-------------------------------------------------------------------------------------------------------


#தமிழகத்தில் இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் அரசு ஊழியர்கள் மின்சார வாரியத்தினர் மட்டுமே,நைட்டு 12 மணிக்கு ஒருத்தரு அலராம் வச்சு எந்திருச்சு போய் கரண்டை புடுங்கி விட்டுறார்.

இந்தா இப்ப போயிரும் :-(


----------------------------------------------------------------------------------------------

#காலைல பைக் ஸ்டார்ட் ஆகல,ஒரு மூனு கிலோ மீட்டர் உருட்டிட்டு போய் ஒரு மெக்கானிக்ட்ட கொடுத்துட்டு சொன்னேன்,"இப்ப தான்'னே புதுசா சர்விஸ் பண்ண பைக்,என்னனு தெரியல ஸ்டார்ட் ஆகல".

அவரு கொஞ்ச நேரம் சில விசயங்களை செக் பண்ணிட்டு சொன்னாரு,
.
.
.
.
.
.
.
.
.
"தம்பி புதுசா சர்விஸ் பண்ண பைக் இல்ல,புது பைக்'காவே இருந்தாலும் பெட்ரோல் இல்லைனா ஸ்டார்ட் ஆகாதுப்பா"

எண்ணெய் நிறுவனங்கள் ஒழிக,இந்திய அரசு ஒழிக :-(

---------------------------------------------------------------------------------------------------

#சிலர் பகலில் போடும் ஸ்டேடஸ்க்கு எல்லாம் நான் நைட்டு வந்து லைக் போட்டுறேன்,ஆனான் நான் நைட் போடுற ஸ்டேடஸ்க்கு அவங்க பகலில் வந்து லைக் போடுவதில்லை.

நீதி:நல்லவங்க நைட்டில் தான் பேஸ்புக் வாறாங்க.

(24 மணி நேரமும் இருக்கவங்க-அவிங்க ரெம்ப நல்லவிங்க)


-----------------------------------------------------------------------------------------------------

#ட்விட்டரில் என்னைய ஒரு பொண்ணு ரொம்பநாளா பாலோ பண்ணுதுன்னு மெயில் வருது.

ஒருவேள அவ லவ்வை சொல்ல நினைக்கிறாளோ?

இருக்காதா பின்னே,அவளும் பெண் தானே :-)

---------------------------------------------------------------------------------------------------------

#தேமுதிக என்பது ஆலமரம்: பிரேமலதா.

அதான் ஒரே பஞ்சாயத்தா இருக்கா :)

-------------------------------------------------------------------------------------------------

#இத்தாலி சென்ற கொலைகார மாலுமிகள் திரும்ப வர மாட்டார்கள் என அறிவிப்பு.

இப்ப ஏன்யா கத்திகிட்டு இருக்கீங்க?உங்களுக்கு என்ன இத்தாலிகாரங்க தான வேணும்?

எனக்கு தெரிஞ்சு ஒரு இத்தாலி குடும்பம் இருக்கு,ஆனா கொலைகாரர்கள் இல்லை கொள்ளைக்காரர்கள் :P

------------------------------------------------------------------------------------------------------
#நீ பேசுற இங்கிலீஸ்லயே தெரியுது நீ பேக் ஐ.டின்னு,நானா கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுரதுகுள்ள நீயா போயிடு :(

---------------------------------------------------------------------------------------------------------
#ஐஸ்வரியா என்ற அழகான பெயரை ஐஸ் 'வரியா' என்று பிரித்து கூப்பிடுபவன் அய்யோக்கியன்,அத்தகையவர்களை இந்த சமுதாயம் இனம் காண வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------

எப்பவும் சிடு சிடுன்னு இருக்கனும்ன்னும் அவசியமும் இல்லை,

எப்பவும் சிரிச்சுகிட்டு இருக்கனும்ன்னும் அவசியமும் இல்லை.

இயல்பா இருங்க...இரவு வணக்கம்.

--------------------------------------------------------------------------------------------

செருப்பு பழசா ஆயிடுச்சு,காங்கிரஸ் கொடியோட மாணவர்கள் போராடுற இடத்துக்கு போகப்போறேன்

ஐ ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி :-)

-------------------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண்.
-வாழ்கையில்.

ஒவ்வொரு ஆணின் தோல்விக்கு பின்னும் ஒரு பெண்.
-காதலில்.

எப்படியோ மகளீர் தின வாழ்த்துக்கள் :-)

---------------------------------------------------------------------------------------------


#ஒரு பொண்ணு "ஹேப்பி"ன்னு மட்டும் தான் ஸ்டேடஸ் போட்டுச்சு,அதுக்கு 40 பேரு லைக் போட்டு "ஹேப்பி தீபாவளி"ன்னு கமென்ட் போட்டு முடிச்சு வைக்கிறாங்கே.

நல்லா வருவிங்க தம்பிகளா...!

-----------------------------------------------------------------------------------------------------------


No comments