Showing posts with label Insulting SMS in tamil. Show all posts
Showing posts with label Insulting SMS in tamil. Show all posts

Insulting SMS in tamil

ஆபிசுக்கு போன் பண்ணி,"ஹலோ,கொஞ்சம் பெர்சனல் வேலை இருக்கு,நான் இன்னைக்கு ஒரு மணிநேரம் லேட்டா தான் வருவேன்"

எதிர் முனையில்,"நீ வழக்கமாவே ஒரு மணி நேரம் லேட்டா தான் வருவ,வந்து சேரு.."

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்
=======================================================================
சிவகார்த்திகேயன் ஹன்சிகா கூட நடிச்சதுக்கே பொறாமைல இந்த பொங்கு பொங்குறானுங்களே, நல்லவேளை இந்த மாதிரி சமூகத்தில் நான் நஸ்ரியாவை கல்யாணம் பண்ணலாம்ன்னு இருந்தேன்...

தேங் காட்...
====================================================================
பசங்க சச்சின்,தோனின்னு சட்டைய கிழிச்சுட்டு சண்டை போட்டுக்குறத பார்த்திருப்பிங்க,ஆனால் இந்த பொண்ணுங்களுக்கு ஒரு மேட்சில் சச்சின் நல்லா விளையாண்டா அன்னைக்கு சச்சின் தான் ஹீரோ,ஒரு மேட்சில் தோனி நல்லா விளையாண்டா அன்னைக்கு தோனி தான் ஹீரோ,ஒரு மேட்சில் கோலி நல்லா விளையாண்டா அன்னைக்கு கோலி தான் ஹீரோ.

இந்த லிஸ்டில் இசாந்த் சர்மா கூட வந்துருக்காரு... கிரிக்கெட்டிலே இப்படி இருக்க பொண்ணுங்கள ஒரே பையனை லவ் பண்ணுன்னு சொன்னா எப்படி?
========================================================================
தாய் கருவறையில் வைத்து பாதுகாத்ததை போல உன்னை காதலித்தேனே...!

ஒரு அறை கூடவா இல்லை உன் வீட்டில் என்னுடன் போனில் பேச?

#எப்ப கேட்டாலும் பக்கத்துல அப்பா இருக்காராம்
====================================================================
இப்போதெல்லாம் மழை பெய்தால் விவசாயிகளை விட அதிக சந்தோசப்படுவது 'மின்சார வாரியம்' தான்..

"மின் கம்பிகள் பராமரிப்பு"ன்னு காரணம் சொல்லி மூன்று நாள் மொத்தமா கரண்டை புடுங்கிடலாம்ல.
----------------------------------------------------------------------------------------------------------
18+

திருமாவுக்கு மோதிரம் சின்னம் கிடைத்ததன் மூலம் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கும் - கருணாநிதி.

அப்போ ராகுல் காந்திக்கு கடைசிவரை 'கை' சின்னம் தானா?
========================================================================
சோனியா என்னிடம் இரண்டு மணிநேரம் பேசினார் - கார்த்திக்.

"மன்மோகன் என்னிடம் சிங் இரண்டு நிமிஷம் பேசினார்"ன்னு சொல்லிருந்தா ஆச்சர்யத்தில் ஒரு 10 ஓட்டு கிடைச்சுருக்கும்...
------------------------------------------------------------------------------------------------------------
முதல்வர் அம்மாவுக்கு கரெண்டு கொடுக்குறதுல பிரச்சனை,
அவளோட அம்மாவுக்கு எனக்கு பொண்ணு கொடுக்குறதுல பிரச்சனை.

முதல்ல ஆளை மாத்துறோம்,அப்பறமா ஆட்சிய மாத்துறோம்...
------------------------------------------------------------------------------------------------------------
மழை வந்தால்...

முன்பெல்லாம் வானை பார்த்துக்கொண்டு ஓடுவார்கள்,
இப்போதெல்லாம் போனை பார்த்துக்கொண்டு ஓடுகிறார்கள்...

பேஸ்புக் கவிஞர்கள் ராக்ஸ்
----------------------------------------------------------------------------------------------------------

Love failure Association

காதலியுங்க அது ஒன்னும்
தப்பு இல்லை...
காதலுக்காக காத்திருங்க
தப்பு இல்லை...
கையை அறுத்துக்குங்க அதுவும்
தப்பு இல்லை.... ஏன் தற்கொலை கூட
பண்ணிக்குங்க
அது கூட தப்பில்லை....
ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க
தகுதியானவங்களா இருக்கணும்...!
தகுதி இல்லாத ஒருத்தங்களுக்காக
நீங்க உங்களை வருத்திக்கிறதும்
காத்திருக்கிறதும் முட்டாள் தனம்..
அந்த முட்டாள் தனத்த ஒரு போதும்
பண்ணாதிங்க...
ஒருத்தர்கொருத்தர்
அனுசரிச்சு போகலன்னா அந்த
காதலே அர்த்தமற்றதாகி விடும்.
அது ஒரு தலை காதலா கூட
மாறிடும்.
பரஸ்பரம் ரெண்டுபேருக்கும்
பிடிச்சிருந்தா தான் காதல்...
ஒருத்தங்களுக்கு
பிடிச்சிருந்தா அது வெறும் நேசம்
நேசத்தை காதல்ன்னு நினைச்சு நீங்களே குழப்பிங்காதிங்
க.
நேசத்தை காதல்ன்னு நினைச்சு கற்பனை வானில்
சிறகடிச்சுப் பறக்காம
நடைமுறைக்கு சாத்தியமானதான்ன
ு எதார்த்தமா சிந்திச்சுப் பாருங்க.
உங்களை பிடிக்காதவங்களுக்காக உங்கள
நீங்கள் வருத்தி வாழுறத விட
உங்கள பிடிச்சவங்களுக்காக உங்க
தனித்துவத்தோட வாழ்ந்து பாருங்க
அதுதான் வாழ்க்கையின் சந்தோஷம்...!
அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...!

-------------------------------------------------------------------------------------
உண்மையான அன்பில் தான் அதிக கோவங்களும் கட்டுபாடுகளும்
இதை புரிந்து கொள்பவரை விட பிரிந்து செல்பவர் தான் அதிகம்.....
---------------------------------------------------------------------------------------------------
அன்பும் மரியாதையும்
கேட்டுப் பெற வேண்டியவை
அல்ல..கொடுத்துப் பெற
வேண்டியவை......!!!!
---------------------------------------------------------------------------------------------------
உண்மையான அன்பிற்கு மட்டுமே
உன் கண்ணீர்துகள் தெரியும்
நீ மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும் கூட . !
-----------------------------------------------------------------------------------------------
அன்பு குறைந்தால் குற்றம் அதிகரிக்கிறது...
அன்பு அதிகமானால் அதுவே ஒரு குற்றமாகிறது...
விரும்பினவர்கள் விரும்பாமல் போவதும்
விரும்பினவர்கள் விலகி போவதும் அன்பு
அதிகமாவதால் மட்டுமே..!
-------------------------------------------------------------------------------------------------
சோகம்
மட்டுமே வாழ்க்கை கிடையாது. !
சுகமாகவே என் நாளும்
வாழ்ந்து விடவும் முடியாது. !
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி
இருட்டினால் தான்..!
நம்மால் பல
நொடிகள் வெளிச்சத்தில் வாழ
முடியும். . !
---------------------------------------------------------------------------------------------
உங்களின் நேசம் உண்மையானது எனில்,உங்களை பிரிந்து சென்று சந்தோஷமாக இருப்பேன் என்று நினைக்கிற உங்களின்
நேசத்துக்குரியவரை எந்த தொல்லையும் செய்யாது விட்டு விடுங்கள்...!

நேசம் பண்டமாற்று கிடையாது.நான் நேசித்தால் நீயும் நேசிக்கவேண்டுமென
எண்ணுவதும்,தொல்லை கொடுப்பதும் நேசம் ஆகாது...!

அவர் உங்களுக்கு அன்பு கொடுக்கிறாரோ இல்லையோ,உங்களை ஆயிரம்
வழிகளில் புண்படுத்தினாலும் எந்த வித கோபமும்,பழிவாங்குகிற எண்ணமும் இல்லாமல் நீங்கள் உறுதியாக நேசித்து கொண்டே இருப்பதுதான்
உண்மையானது...!
------------------------------------------------------------------------------------------------------------
நீ கட்டிய தாலிக்காக
உன்னுடன் வாழவில்லை
உன் இதயத்தால் கட்டப்பட்டதால்
உன்னுடன் வாழ்கிறேன்
தாலி வெறும் கயிறு தான்
துடிக்கும் உன் இதயத்திற்கு முன்னால்.
-----------------------------------------------------------------------------------------------------
நீ யாருக்காக வாழ்கிறாயோ
அவருக்காக அனைத்தையும்
விட்டுகொடு..உனக்காக யார்
வாழ்கிறாரோ அவரை
யாருக்காகவும் விட்டு
கொடுக்காதே.....!!!
--------------------------------------------------------------------------------------
மனைவியை அல்லது காதலியை வாடி போடி என்றும்..
வாமா போமா என்றும்
வாடா போடா என்றும் பா என்றும்
செல்லம் குட்டி என்றும்
அழைப்பது அனைத்து ஆண்களின்
வழக்கமாக இருக்கிறது.
இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் தன்
துணையை அழைக்கிறோம்
என்று அநேகம்
பேருக்கு தெரிவதில்லை.
(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்)
இதற்க்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம்
இருக்கிறது.
மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக
நினைத்து,
பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக
நினைத்து,
டா என்று அழைப்பது அவர்களை தன்
தோழனுக்கு நிகராக
நினைத்து(தனக்கு நிகராகவும்
நினைத்து தான்)
அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற
அடிப்படையில்,
குட்டி என்றுஅழைப்பது குழந்தைக்கு நிகராகவும்
செல்லம் என்று அழைப்பது தன்னுடைய
அன்புக்கு நிகராகவும
அழைக்கிறார்கள்...
ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய
மனைவி மற்றும் காதலியிடம்
மட்டுமே உபயோகபடுத்த வேண்டும்.
அதனால் தான் நான்
பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை.
அந்த எழுத்து என் மனைவிக்கானது..
அதை நான் மற்ற பெண்களிடம்
பயன்படுத்தவிரும்பவில்லை...
மேலும் டா என்ற வார்த்தை தன்னுடைய
மனைவி மற்றும் காதலியிடம்
மட்டுமே உபயோகபடுத்த வேண்டும்.
அதனால் தான் பிற பெண்கள்
என்னை டா என்று அழைப்பதை நான்
விரும்புவது இல்லை. அது என்
மனைவி மட்டும் என்னை அழைப்பதற்கான
வார்த்தை. அதை நான் பிற பெண்களிடம்
இருந்து கேட்க விரும்பவில்லை...!!
---------------------------------------------------------------------------------------------------
உண்மையான அன்பில் தான்
அதிக கோபங்களும் கட்டுபாடுகளும்..
இதை புரிந்து கொள்பவர்களை விட
பிரிந்து செல்பவர்கள் தான் அதிகம்...
-----------------------------------------------------------------------------------------------
என்றாவது ஒரு நாள்
என்னை காணநேர்ந்தால்
(KALLARAYIL) உன் கணவனிடம்
அறிமுகபடுத்து இவன் தான் என்னால்
சாகடிக்கப்பட்டவன் என்ற.!
---------------------------------------------------------------------------------
உன்னை நேசிப்பதைபோல்
நேசித்ததில்லை யாரையும்
இதுவரை...!!
நேசிக்கபோவதுமில்லை யாரையும்
இனிமேலும் ..!!
நேசித்தலையே நேசிக்க ஆரம்பித்தேன்
உன்னை நேசிக்க தொடங்கியவுடன்....!!
-------------------------------------------------------------------------------------------------
சண்டை போட்ட கடிகார முட்கள்
திரும்பவும் ஒன்று
சேர ஒரு மணி நேரமாகும் ...!
ஆனால்
உன்னை விட்டு பிரிந்து ஒரு நொடி கூட
என்னால் இருக்க முடியாது
---------------------------------------------------------------------------------------------------
இவ் உலகில் யாரையும்
எல்லை மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த
அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ
சந்தித்திருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்
வேறு எதையும் எதிர்
பார்த்து விடாதே,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே....!
---------------------------------------------------------------------------------------------------------
ஒருவரிடம் உண்மையான
அன்பை வைத்து பிரிந்தவர்களுக்
கு தான் தெரியும் உண்மையான
அன்பு என்னவென்று...!!!
-----------------------------------------------------------------------------------------------------
நீ யார் யார்
மனதுக்கு சொந்தமோ எனக்குத்
தெரியாது. .
ஆனால் என் மனதுக்கு நீ மட்டும் தான்
சொந்தம் ..
----------------------------------------------------------------------------------
என்னை விட நல்ல நண்பனை
நீ கண்டுபிடித்தால் என்னைக்
கடந்து செல்
நான்
உன்னை தடுக்கமாட்டேன்
ஆனால்,
அவன் உன்னை விட்டு விலகிச் சென்றால்
பின்னால் திரும்பி பார்..
அங்கே உனக்காக நான் இருப்பேன்..!
.
அப்போதும் நல்ல நண்பனாய
-------------------------------------------------------------------------------------------
இவ்வுலகில் எனக்கு மிகவும் பிடித்த
இடம் உன் இதயம் தானடி..ஆனால்
இதுவரை நான் அங்கு சென்றதில்லை..
ஏனெனில் நீ அதற்கு அனுமதித்ததில்லை
---------------------------------------------------------------------------------------------------
காரணம் சொல்ல படாத
பிரிவுகள் தான்...தாங்க
முடியாத வலிகளை தந்து
போகின்றது........!!!!!

Insulting SMS in tamil

காதலித்த பெண்ணை மறப்பது அவ்வளவு கடினமான காரியமில்லை, காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும். ஒருகாலத்தில் சொர்க்கமாக தெரிந்த பேஷன் டிவி இப்போது மொக்கையாக தெரிவது போல
------------------------------------------------------------------------------------------------------------
'பெண்' என்பது வெறும் சதை அல்ல - நீ
உணர்த்தி சென்றுவிட்டாய் அதை மெல்ல...

#மகளிர் தின வாழ்த்துக்கள்...!
------------------------------------------------------------------------------------------------------

"மாப்பிள்ளை குடிகாரனா இருந்தா பெண் கிடைக்காது" என்று சொல்லும் தரகருக்கு அந்த இளைஞன் எப்படி சொல்லி புரியவைப்பான்....

ஏற்கனவே ஒரு பெண் கிடைக்கததால் தான் அவன் குடிகாரன் ஆனானென்று...
----------------------------------------------------------------------------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் இழுபறி,திருமாவளவன் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் பின்வாசல் வழியாக வெளியேறினார். - செய்தி.

அந்தப் பக்கம் பாதாளக் கிணறு...இது வந்த பாதை...
----------------------------------------------------------------------------------------------------
நேற்று நண்பன் போன் பண்ணி "என்னடா பண்ற?"ன்னு கேட்டான்.

"கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் தனியா நிக்கிறேன்"ன்னு சொன்னேன்.

"சொல்லவே இல்ல...வெற்றி பெற வாழ்த்துக்கள்டா"ன்னு சொன்னான்.

"பைக் பஞ்சர் டா...பக்கத்துல கடையும் காணோம் மேட்டுப்பாளையம் ரோட்ல தனியா நின்னுட்டு இருக்கேன்டா"ன்னு சொன்னேன்.

பேசிட்டு இருக்கும்போதே போனை வச்சுட்டான் இடியட்.

----------------------------------------------------------------------------------------------------------

தமிழகத்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் "நமக்கொரு அவமானம் என்றால் சொந்தங்கள் சிரிப்பார்கள்" என்ற டயலாக்கை கேட்டிருப்பீர்கள்.

நமக்கொரு அவமானம் என்றால் சிரிப்பவர்களை எப்படி சொந்தமாக கருத முடியும்?

---------------------------------------------------------------------------------------------------------
"தம்பி ஐடி பீல்டில் இருக்கீங்க,கொஞ்சநாள் அமெரிக்க பக்கம் போயி சம்பாரிச்சுட்டு அப்பறம் வந்து கல்யாணத்தை பத்தி யோசிங்க"ன்னு உறவினர் ஒருவர் வீட்ல எல்லோர் முன்னாடியும் அட்வைஸ் பண்ணாரு.

"ரஜினி சினிமாவுல அமெரிக்கா போயி சம்பாரிச்சு வயசாகி இந்தியா வந்தா அவருக்கு ஸ்ரேயா கிடைக்கும்,நாம நிஜ வாழ்க்கையிலும் அதே மாதிரி பண்ணனும்ன்னு நினச்சா ஸ்ரேயா இல்ல ஆயா கூட கிடைக்காது"ன்னு சொன்னேன்.

முதலில் இவிங்கள எல்லாம் வீட்டுக்குள்ள விடக்கூடாது
----------------------------------------------------------------------------------------------------------
நாட்ல நல்ல காதலுக்குத் தான் பிரச்சனை வருது,கள்ளக்காதலர்கள் எல்லாம் சந்தோசமா சுத்துறானுங்க
------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு அ தி மு க தொண்டர்கள் பேசிட்டு போறாங்க.

நபர் 1: இந்த தடவை நம்ம கட்சி சார்பா 52 வேட்பாளர்கள் நிக்கிறாங்க.

நபர் 2: அது எப்படி?மொத்தமே 40 தொகுதி தான?

நபர் 1: விஜயகாந்த் வேற ஒரு 12 பேரை நிறுத்துராராம்,எப்படியும் தேர்தல் முடிஞ்சோன நம்மட்ட தான் வருவாங்க

--------------------------------------------------------------------------------------------------------
பேஸ்புக் காதல் என்பது பேரிங் இல்லாத சக்கரம் போல...

எப்போ கழறும்ன்னு தெரியாது

---------------------------------------------------------------------------------------------------------
பெண்களே...!

அளவான மேக்அப் உங்களை க்யூட்டா(Cute) ஆக்கும்,

அதிகமான மேக்அப் 'திண்டுக்கல் ரீட்டா' ஆக்கும்

---------------------------------------------------------------------------------------------------------
மகளிர் தின வாழ்த்துக்கள் சொன்னா ஒரிஜினல் ஐடிட்ட இருந்து 'நன்றி'ன்னு ரிப்ளே வருது,இந்த பேக் ஐடிக்கள் ஒரு ஸ்மைலி(  ) மட்டும் போடுதுங்க...

தர்ம சங்கடத்தோட சமாளிக்கிறாங்களாமாம்
----------------------------------------------------------------------------------------------------------