Header Ads

Insulting SMS in tamil

காதலித்த பெண்ணை மறப்பது அவ்வளவு கடினமான காரியமில்லை, காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும். ஒருகாலத்தில் சொர்க்கமாக தெரிந்த பேஷன் டிவி இப்போது மொக்கையாக தெரிவது போல
------------------------------------------------------------------------------------------------------------
'பெண்' என்பது வெறும் சதை அல்ல - நீ
உணர்த்தி சென்றுவிட்டாய் அதை மெல்ல...

#மகளிர் தின வாழ்த்துக்கள்...!
------------------------------------------------------------------------------------------------------

"மாப்பிள்ளை குடிகாரனா இருந்தா பெண் கிடைக்காது" என்று சொல்லும் தரகருக்கு அந்த இளைஞன் எப்படி சொல்லி புரியவைப்பான்....

ஏற்கனவே ஒரு பெண் கிடைக்கததால் தான் அவன் குடிகாரன் ஆனானென்று...
----------------------------------------------------------------------------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் இழுபறி,திருமாவளவன் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் பின்வாசல் வழியாக வெளியேறினார். - செய்தி.

அந்தப் பக்கம் பாதாளக் கிணறு...இது வந்த பாதை...
----------------------------------------------------------------------------------------------------
நேற்று நண்பன் போன் பண்ணி "என்னடா பண்ற?"ன்னு கேட்டான்.

"கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் தனியா நிக்கிறேன்"ன்னு சொன்னேன்.

"சொல்லவே இல்ல...வெற்றி பெற வாழ்த்துக்கள்டா"ன்னு சொன்னான்.

"பைக் பஞ்சர் டா...பக்கத்துல கடையும் காணோம் மேட்டுப்பாளையம் ரோட்ல தனியா நின்னுட்டு இருக்கேன்டா"ன்னு சொன்னேன்.

பேசிட்டு இருக்கும்போதே போனை வச்சுட்டான் இடியட்.

----------------------------------------------------------------------------------------------------------

தமிழகத்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் "நமக்கொரு அவமானம் என்றால் சொந்தங்கள் சிரிப்பார்கள்" என்ற டயலாக்கை கேட்டிருப்பீர்கள்.

நமக்கொரு அவமானம் என்றால் சிரிப்பவர்களை எப்படி சொந்தமாக கருத முடியும்?

---------------------------------------------------------------------------------------------------------
"தம்பி ஐடி பீல்டில் இருக்கீங்க,கொஞ்சநாள் அமெரிக்க பக்கம் போயி சம்பாரிச்சுட்டு அப்பறம் வந்து கல்யாணத்தை பத்தி யோசிங்க"ன்னு உறவினர் ஒருவர் வீட்ல எல்லோர் முன்னாடியும் அட்வைஸ் பண்ணாரு.

"ரஜினி சினிமாவுல அமெரிக்கா போயி சம்பாரிச்சு வயசாகி இந்தியா வந்தா அவருக்கு ஸ்ரேயா கிடைக்கும்,நாம நிஜ வாழ்க்கையிலும் அதே மாதிரி பண்ணனும்ன்னு நினச்சா ஸ்ரேயா இல்ல ஆயா கூட கிடைக்காது"ன்னு சொன்னேன்.

முதலில் இவிங்கள எல்லாம் வீட்டுக்குள்ள விடக்கூடாது
----------------------------------------------------------------------------------------------------------
நாட்ல நல்ல காதலுக்குத் தான் பிரச்சனை வருது,கள்ளக்காதலர்கள் எல்லாம் சந்தோசமா சுத்துறானுங்க
------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு அ தி மு க தொண்டர்கள் பேசிட்டு போறாங்க.

நபர் 1: இந்த தடவை நம்ம கட்சி சார்பா 52 வேட்பாளர்கள் நிக்கிறாங்க.

நபர் 2: அது எப்படி?மொத்தமே 40 தொகுதி தான?

நபர் 1: விஜயகாந்த் வேற ஒரு 12 பேரை நிறுத்துராராம்,எப்படியும் தேர்தல் முடிஞ்சோன நம்மட்ட தான் வருவாங்க

--------------------------------------------------------------------------------------------------------
பேஸ்புக் காதல் என்பது பேரிங் இல்லாத சக்கரம் போல...

எப்போ கழறும்ன்னு தெரியாது

---------------------------------------------------------------------------------------------------------
பெண்களே...!

அளவான மேக்அப் உங்களை க்யூட்டா(Cute) ஆக்கும்,

அதிகமான மேக்அப் 'திண்டுக்கல் ரீட்டா' ஆக்கும்

---------------------------------------------------------------------------------------------------------
மகளிர் தின வாழ்த்துக்கள் சொன்னா ஒரிஜினல் ஐடிட்ட இருந்து 'நன்றி'ன்னு ரிப்ளே வருது,இந்த பேக் ஐடிக்கள் ஒரு ஸ்மைலி(  ) மட்டும் போடுதுங்க...

தர்ம சங்கடத்தோட சமாளிக்கிறாங்களாமாம்
----------------------------------------------------------------------------------------------------------

No comments