Our social:

2

Latest Post

Monday, June 30, 2014

facebook comments in tamil

காதல் தோல்வியால் வாழ்கையில் தன்னம்பிக்கை இழந்து தவித்த கிராமத்து நண்பனுக்கு பேஸ்புக் அக்கௌண்ட் துவக்கி கொடுத்தேன்..

பின்பு ஒரு முறை சந்தித்த போது உற்சாகமாக பேசினான்,"மச்சான் அந்த பேஸ்புக்ல அவிங்கள பொண்ணு போட்டோ காட்டி ப்ரெண்டா சேர்த்துக்குறியான்னு கேக்குறாங்கடா...இது பரவல்ல தினம் ஒரு ஃபாரின் ஃபிகர் வந்து லவ் பண்றேன்னு சொல்லுதுங்கடா...வெளிநாட்டு பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராதுன்னு நான் வேணாம்ன்னு சொல்லிட்டேன்...நெசமா அவளை மறந்துட்டு சந்தோசமா இருக்கேன்டா" என்றான்...

பேஸ்புக் வாழ்க...!ஆப்பிரிக்க அழகிகள் வாழ்க...!!

-----------------------------------------------------------------------------------------------------------
எனக்கு தெரிஞ்சு ஒரு பிரபலத்துக்கு 30 பேக் ஐடி இருக்கு...அது எனக்கு பிரச்சனை இல்ல...ஆனா அவருக்கு மட்டும் லைக் போட்டுகுறாரு...

இப்ப அதுல 15 பேக் ஐடியாவது இந்த ஸ்டேடஸ்க்கு லைக் போடணும்...இல்லைனா உண்மைய போலீஸ்ல சொல்லிடுவேன்...

---------------------------------------------------------------------------------------------------------
 எந்த அரசும் சினிமாவிற்கு நல்லது செய்யவில்லை - கமலஹாசன்.

நீங்க செஞ்ச ஒரே நல்லது 'சுருதிஹாசன்' தான்

---------------------------------------------------------------------------------------------------------------
 ஒருமுறை இன்டெர்வீயூவில் "Tell me about yourself"ன்னு கேட்டாங்க.

"சொல்லிக்கிற அளவு நான் பெரிய ஆளு இல்லை"ன்னு சொன்னேன்...

வெளிய போ...உனக்கு வேலை இல்லேன்னு சொல்லிட்டாங்க.

இந்த தன்னடக்கம் தான் என்கிட்டே பிரச்சனையே

-----------------------------------------------------------------------------------------------------------
 
"சார் நான் பேஸ்புக்'குக்கு புதுசு,ஒருத்தனை ப்ளாக் பண்ணனும் எப்படின்னு கொஞ்சம் சொல்லித்தாரிங்களா?"ன்னு ஒரு பொண்ணு சாட்ல கேட்டுச்சு.

நானும் சரின்னு சொல்லிக்கொடுத்தேன்,கடைசில "அந்த ஒருத்தனே நீ தாண்டா"ன்னு சொல்லிட்டு ப்ளாக் பண்ணிட்டு போய்ட்டா..கிர்ர்ர்...

---------------------------------------------------------------------------------------------------------------
 
ஸ்பெயின்,இத்தாலிய பார்க்கும்போது திமுக,காங்கிரஸ் தான் நியாபகத்துக்கு வருது...

என்ன ஆட்டம் ஆடுனிங்க...கெட்அவுட்

---------------------------------------------------------------------------------------------------------------------
 
இப்பெல்லாம் சினிமாவில் தான் குடும்ப சண்டை எல்லாம் காட்றாங்க,மெகா சீரியல்களில் ஒன்லி கிட்னாப்,ப்ளாக்மெயில்,கார் சேஸ்,மர்டர் தான்... 
---------------------------------------------------------------------------------------------------------------
 
husband wife jokes in tamil

பக்கத்து வீட்டுக்காரர் பொண்டாட்டி அவரோட சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு போய் ஆறுமாசம் ஆச்சு.

நேத்து புதுசா WIFI கனெக்சன் வாங்கிருப்பாரு போல,சிக்னல் காட்டுச்சு,சரி யூஸ் பண்ணலாம்ன்னு பார்த்தா பாஸ்வர்ட் லாக் போட்டு வச்சுருக்காரு.

WIFE போனத பத்தியெல்லாம் கவலைப்படாதிங்கயா...WIFI'க்கு மட்டும் லாக் போட்டு வைங்க 

---------------------------------------------------------------------------------------------------------

Tuesday, June 24, 2014

Funny SMS

27 பெண்களை மயக்கி ஆபாச படமெடுத்த 'காதல் மன்னன்' கைது : செய்தி.

இதுக்கு பேரு காதல்,அவரு காதல் மன்னனா?இப்படி செய்தி போட்டா நாட்ல எப்படிடா உண்மையான காதல் இருக்கும்?

இந்தியா டல்லரசா தான் ஆகும்...
------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்திடம் மின்சாரம் கேட்க சீமந்திரா முடிவு : செய்தி.

நீரு எவரு நாக்கு தள்ளுதே...
-------------------------------------------------------------------------------------------------
நைட்டு முழிச்சு புட்பால் மேட்ச் பாக்குற நமக்கே இப்படி கண்ணகட்டுதே விளையாடுற அவனுக்கு எப்படி இருக்கும்?

பகலில் விளையாடுங்கடான்னு சொன்னா எவன் கேக்குறான்...
-----------------------------------------------------------------------------------------------------
பழைய பேப்பர் காரரிடம்...

நான் : அண்ணே இதெல்லாம் இன்ஜினீயரிங் புக்'ண்ணே புதுசு விலை ரூ.2000 வரும் பார்த்து போட்டு கொடுங்கண்ணே...

அவர் : தம்பி இந்த புக் ரூ.300 தான் வரும்,நானும் இன்ஜினீயரிங் படிச்சுட்டு தான் வேலை கிடைக்காம வீதி வீதியா சைக்கிள் உருட்டுறேன்..போங்க தம்பி...
--------------------------------------------------------------------------------------------------------
முன்பெல்லாம் குடும்ப பொண்ணுங்க காலைல 5 மணிக்கு எழுந்து கோலம் போடுவாங்க,இப்பெல்லாம் மத்தியானம் 12 மணிக்கு எழுந்து 'Good Morning' ஸ்டேடஸ் போடுறாங்க
-----------------------------------------------------------------------------------------------------

feeling sms in tamil

நண்பர் ஒருவரின் வீட்டில் அவங்க செல்ல நாய் எப்பவும் வீட்டுக்குள்ளயே தான் சுத்தும்,கேட்டா நாய் வெளியில் சுத்துனா நாய்க்கு ஒத்துகாதாம்.

ஆனா அவரு அம்மாவை கூட்டி போய் தங்கச்சி வீட்ல விட்டுட்டாரு, கேட்டா அம்மா வீட்ல இருந்தா அவரு மனைவிக்கு ஒத்துகாதாம்.

-----------------------------------------------------------------------------------------------------
ரயில் கட்டண உயர்வு பற்றி கவலையில்லை என்று வட இந்திய நண்பன் சொன்னான்.

"டேய் அதெல்லாம் டிக்கெட் எடுக்குற நாங்க கவலைப்பட வேண்டியதுடா." என்றேன்.
-----------------------------------------------------------------------------------------------------
பொதுவா பசங்க அப்பா பேச்சை கேட்டா தான் நல்லா இருப்பாங்க...

சில பசங்க அப்பா பேச்சை கேக்கலைனா தான் நல்லா இருப்பாங்க...
-----------------------------------------------------------------------------------------------------
நான்லாம் சின்ன வயசுலேயே அந்நிய மொழி நமக்கு புரியத் தேவையில்லை என்று உலகிற்கு உரக்க கூறியவன்...

"வசனமாடா முக்கியம் படத்தை பாருடா"
------------------------------------------------------------------------------------------------------------
இந்த பொண்ணுங்க ஒரு சாட்டில் பேசும்போது,

நீங்க எந்த ஊரு?
என்ன படிச்சிங்க?
எந்த காலேஜ்ல படிச்சிங்க?
எங்க வேலை பார்க்குறிங்க?
என்ன வேலை பார்க்குறிங்க?
எவ்வளவு சம்பளம்?
வயசு என்ன?
கல்யாணம் ஆயிடுச்சா?

இப்படி 1008 கேள்வி கேக்குறாங்க..ஆனா பசங்க மனசுல எப்பவும் ஒரே கேள்வி தான்..

"இது பேக் ஐடியா? ஒரிஜினல் ஐடியா?"
---------------------------------------------------------------------------------------------------------
வெளிநாட்டிலிருந்து மிஸ்டு கால் தரும் நண்பருக்கு எப்படி சொல்லி புரியவைப்பேன்...

என்னிடம் இருக்கும் பேலன்ஸ்க்கு லோக்கல் கால் கூட போகாது என்பதை
---------------------------------------------------------------------------------------------------------
கலைஞர் எனக்கு தந்தை போல,வேறு கட்சியில் சேர மாட்டேன் - குஷ்பு.

இந்தாம்மா இது என் டையலாக்கு...நீ வேற சொல்லு - அழகிரி.
----------------------------------------------------------------------------------------------------

Sunday, June 8, 2014

Latest SMS Jokes in tamil

ஆர்யா,சூர்யா,சிம்பு,தனுஷ் படத்தில் எல்லாம் ஹீரோயினை விரட்டி விரட்டி லவ் பண்றாங்க கண்டுக்காம போகுதுங்க,

ஆனா இந்த விஜயகாந்த்,டி.ஆர் படத்தில் ஹீரோயின் அவங்கள விரட்டி விரட்டி வெறித் தனமா லவ் பண்ணுதுங்க.

ச்சை..என்னடா இந்த பொண்ணுங்க ரசனை...

--------------------------------------------------------------------------------------------------
வீட்டில்,
அவள் : யேம்மா..நைட்டு சாப்பிட என்ன இருக்கு?
அவளின் தாய் : பழைய சோறு இருக்கு போட்டு சாப்பிடுடி...

உடனே தொலைபேசியை எடுத்து மெசேஜ் அனுப்பினால்,
"கார்த்திக் ஃபீலிங் லோன்லிடா,கொஞ்சம் பேசணும்...கேஎஃப்சி(KFC) கூட்டி போறியா?"
--------------------------------------------------------------------------------------------------
கோச்சடையான் பார்க்க வாருங்கள் - கருணாநிதிக்கு ரஜினி அழைப்பு.

அடப் போப்பா...நான் பெத்ததுங்க செய்ற கொடுமையே தாங்கல..இதுல நீ பெத்தது செஞ்ச கொடுமைய வேற தாங்கனுமா?

----------------------------------------------------------------------------------------------------

யாரும் வேண்டுமென்று கற்பழிப்பதில்லை - சத்தீஸ்கர் அமைச்சர்.

"கற்பு வேண்டாமென்று தான் கற்பழிக்கிறார்கள்" இப்படி புரியிறமாதிரி தெளிவா சொல்லுங்க பாஸ்...

--------------------------------------------------------------------------------------------------
"புருஷன் பொண்டாட்டி சண்டைல ஈசியா தூக்கி புருஷன் தலைலையே அடிக்கலாம்...அதனால தான் நான்...டொக் டொக்...டேபிள் மேட் வாங்குனேன்"

--------------------------------------------------------------------------------------------------------

"பேஸ்புக்கை தாண்டி ஒரு அழகான உலகம் இருக்கு"ன்னு நண்பனிடம் சொன்னேன்.

"மச்சான் சூப்பர் ஸ்டேடஸ்டா,நாளைக்கு போடறேன்"னு சொல்லிட்டு போறான்...

வளருங்க டா...!!!

--------------------------------------------------------------------------------------------------------

அழைப்பு வந்தால் அதிமுகவில் இணைவேன். - பண்ருட்டி. வேல் முருகன்.

மூனு வேலையும் நம்ம ஆத்துலையும் சாப்பாடுன்னு சொல்லிருப்பாங்களே....

----------------------------------------------------------------------------------------------------------

முட்டாள்களை ஜெயிக்க முயற்சிக்காதீர்கள்,
முட்டாள்தனத்தை ஒருநாளும் ஜெயிக்க முடியாது,
ஜெயித்தும் லாபம் இருக்காது...!!!

-----------------------------------------------------------------------------------------------------------

புலி துரத்தும்போது ஓடும் மான்களின் வேகத்தை, பொண்ணுங்க ஸ்டேடஸ்களில் லைக் போடும் ஆண்களிடம் பார்க்கிறேன்.

---------------------------------------------------------------------------------------------------------

ராமநாதபுரம் மாணவி அபிநயா 498 மதிப்பெண் எடுத்து,மாநிலத்தில் 2வது இடம்.

வாழ்த்துக்கள் சகோதரி...

(எங்கூர்லயும் ஸ்கூல் இருக்கு,நாங்களும் படிப்போம்...)

------------------------------------------------------------------------------------------------------------

சிக்கன் குழம்பு கேட்ட கணவரை கொலை செய்த மனைவி - செய்தி.

இதைத் தான் கீதையிலே கிருஷ்ணர் "சைவ உணவுகள் சாப்பிடுவது நன்மை தரும்" என்று குறிப்பிடுகிறார்.

------------------------------------------------------------------------------------------------------------