Showing posts with label chennai. Show all posts
Showing posts with label chennai. Show all posts

kadi jokes in tamil

 "வீட்ல கொஞ்சம் வேலையா இருக்கேன்,ஆபிஸ் போயிட்டு ஃப்ரீயா பேஸ்புக் வரேன்"ன்னு ஒருத்தர் சொல்லிட்டு போறாரு.

அப்பறம் எப்படி இந்தியா வல்லரசு ஆகும்?

------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு 'அம்மா மாளிகை' என பெயர் சூட்டப்படும் - மேயர்.

அங்கேயே அம்மா உப்பு,அரிசி எல்லாம் வச்சு வியாபாரம் பண்ணி 'அம்மா மளிகை'ன்னே பெயர் வச்சுடலாம்..வியாபாரம் பிச்சுக்கும்

--------------------------------------------------------------------------------------------------------------------
 
உன்னை பார்க்கும்போதெல்லாம் உள்மனது கேட்கிறது...

"மீண்டும் லவ்தீக வாழ்கையில் விழத்தான் போகிறாயா?" 

--------------------------------------------------------------------------------------------------------------------
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில் நண்பர் ஒருவர் என்னை சுற்றி சுற்றி போட்டோ எடுத்தார்,"ச்ச இவ்வளவு பாசமா?" என்று நானே அசந்து போயிட்டேன்.அவர் தான் எடுக்கிறாரே என்று நான் என் மொபைலில் கூட ஒரு போட்டோ எடுக்கவில்லை.

நேற்று போன் செய்து அந்த போட்டோக்களை அனுப்புங்க என்று கேட்டேன்,அதற்கு அவர்,"நெட் கார்டு தீந்துருச்சு,ஒரு 2GB போட்டு விடு அனுப்புறேன்,இன்னைக்குள்ள போட்டு விடு,இல்லைனா போட்டோவெல்லாம் அழிச்சுடுவேன்" என்று மிரட்டுகிறார்.

இது என்னடா புது டிரெண்டா இருக்கு

-------------------------------------------------------------------------------------------------------------------
 

true love sms in tamil

இன்று நீ ஒரு பெண்ணை.......
காதலியாக அடைய நினைப்பதற்கு முன்....
அவளை உனக்கு ஒரு நல்ல தோழியாக மாற்று,,,,,
நாளை அவள் உனக்கு.....
ஒரு நல்ல காதல் மனைவியாய் ஆவாள் ....
-----------------------------------------------------------------------------------
மனைவியானவள் தன் கணவனை வெட்கபட்டு.
ஓர பார்வையில் பார்க்கும்போது உண்டாகும்
அவள் முக அழகிற்க்கு முன்

எந்த .அழகியும் ஈடாக மாட்டாள்...
----------------------------------------------------------------------------------------
ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வரும் போது
இன்னொருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தால்
அந்த உறவைவிட இந்த உலகத்தில் பெரிய உறவு இல்லை
-------------------------------------------------------------------------------------

kadi jokes in tamil

மச்சி கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரெண்டு பொண்ணுங்க தொல்ல பண்றாங்கன்னு சொன்னியே.....

யார்ரா அந்த பொண்ணுங்க.?..
.
.
.
.

ஒன்னு எங்க அம்மா,
இன்னொன்னு எங்க ஆயா..

?????
--------------------------------------------------------------------------------------------
புருஷன் :டார்லிங் உன் பிறந்தநாளுக்கு நான் நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு .

மனைவி: கார் வாங்கிட்டு வந்ததிருக்கலாமில்ல

புருஷன் : கார் கவரிங்கல வராது மா,

மனைவி ???
--------------------------------------------------------------------------------------------
குறைவான பரபளவில் அதிகமாக பெயிண்ட் அடிக்கும் இடம் ?
???
??
?

பெண்ணின் முகம்
-----------------------------------------------------------------------------------------
சினம் கொண்ட சிறுத்தையை ஒரு பிளாஸ்டிக் கூண்டில் அடைக்க முடியும். எப்படி தெரியுமா?
.
.
.
.
.
.

வந்து என் Identity Cardஐ பாருங்க
------------------------------------------------------------------------------------------------

True Love SMS in Tamil

ஒரு பையன் அவன் காதலிகிட்ட கேக்குறான்
Boy : நா அழகா இருக்கேனா?
Girl: இல்லை
Boy : நீ என்னைய விரும்புறியா?
Girl: இல்லை
Boy: நா உன்னை விட்டு போயிட்டா நீ அழுவியா?
Girl: இல்லை
The boy was so sad!!!!
அந்தப் பொண்ணு ஓடி வந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னாள்.
நீ அழகா இல்லை, ரொம்ப அழகா இருக்க...
எனக்கு உன் கூட வாழ விருப்பம் இல்லை, உனக்காகவே வாழ விரும்புறன்....
நீ என்னை விட்டு போனா நா அழமாட்டேன் டா!!!என்னைச் சுற்றி எல்லோரும் அழுவாங்கடா!!!


-----------------------------------------------------------------------------------------------------------------------
 
ஆசைகள் இல்லாத
வாழ்க்கையை நீ
எப்போது தேடி செல்கிறாயோ அப்போது துன்பங்கள்
இல்லாத
வாழ்க்கை உன்னை தேடி வரும் 


-----------------------------------------------------------------------------------------
 
என் காதலை
உனக்கு புரியவைக்க
நினைத்தேன்
ஆனால்
நீ அடிக்கடி
புரியவைக்கிறாய்
நான் உன்
மனதில்
இல்லை
என்பதை

-----------------------------------------------------------------------------------------------
 
அவன்
என்
நினைவில் இன்றும்
இருக்கிறான்

என் இதயத்தை உடைத்தவனாக அல்ல

உடைந்த இதயத்தோடு வாழ கற்றுத்தந்தவனாக 

--------------------------------------------------------------------------------------
 
உன் உயிரில் பாதி தந்தாய்
அம்மா...
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கிறேன்..
என் சிரிப்பினிலே
நீ பட்ட துன்பம் காண்கிறேன்...
உலகானவளே
உன்னையும் ஒரு தரம்
சுமக்கக் கேட்க்கிறேன்
இறைவன் வரம் தருவாரோ....??!!!

------------------------------------------------------------------------------------------
 
உனக்கும் எனக்குமான
உறவு
உடலுக்கும் உயிருக்கும்
உள்ள உறவு என்றாய்
ஏன் என் உயிரை மட்டும் பறித்துக்கொண்டு
என்னை ஜடமாக்கி விட்டு சென்றாய்

-----------------------------------------------------------------------------------

உனக்கு என்னுடன் பேசுவதற்கு
விருப்பமில்லாமல் இருக்கலாம்
ஆனால் எனக்கு
உன்னைதவிர யாருடனும்
பேசுவதற்கு விருப்பமில்லை...


-----------------------------------------------------------------------------------------
 
கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே


-------------------------------------------------------------------------------------------------
 
நீ-
வசந்தத்தை தொலைத்திருக்கலாம்!
அன்பைத் தூக்கி வீசாதே!
அது-
ஆயுள் முழுவதும்
உன்னைக் கொல்லும்!

நிச்சயமாய்
நீ என்னை
இதயத்தில் இருந்து
அகற்றவில்லை என்பது!
எனக்கு நன்றாகத் தெரியும்

-----------------------------------------------------------------------------------
 
உன் நினைவுகள் மட்டுமே
நிஜம் என்பது புரியாமல்
உன் நிழலை
தேடிக்கொண்டு
இருக்கிறேன் நீ
யாருக்காகவோ
எழுதப்பட்டவன்
வாழ்ந்துவிட்டு போ
எனக்கும் சேர்த்து...!!!

---------------------------------------------------------------------
 

Love SMS in Tamil


#நானும் ஒவ்வொரு புது பிகரை காதலிக்கும்போதும் முருகன் கோவிலுக்கு போய் "முருகா இந்த புள்ளைய கல்யாணம் பண்ணி அடுத்த முறை ஜோடியா உன் கோவிலுக்கு வரணும்"ன்னு வேண்டிட்டு வரேன்.

என்னைக்கு முருகன் காரி துப்ப போறாருன்னு தெரியல,துப்புனாலும் ஓகே கடுப்பாகி வேல விட்டு எறியாம இருந்தா சரி :-(

-------------------------------------------------------------------------------------------------------------சென்னை ஜெயிச்சாலும் சரி,பெங்களூர் ஜெயிச்சாலும் சரி 12 மணிக்கு சரியா கரண்ட் கட் ஆயிடும்.

#தமிழன்டா.

-----------------------------------------------------------------------------------------------------------

சென்னை பிகருகள் எல்லாம் ஐ.பி.எல்-ல புறக்கணிச்சுட்டாங்களா?இல்லை சென்னைல பிகருகளே இல்லையா?

க்ரௌண்டுல அண்ணிய(அதான் தோனி பொண்டாட்டி) தவிர ஒரு பிகர் கூட பார்க்க சகிக்கல.இது என்னடா பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை :-(
---------------------------------------------------------------------------------------------------------

அன்புக்கு நான் அடிமை'ன்னு சொல்றவங்க மனைவி பெயர் பெரும்பாலும் அன்புக்கரசி,அன்புச்செல்வி என்றே இருக்கிறது.

அவதானிப்பு.

-----------------------------------------------------------------------------------------------------

ஸ்டாலின் கட்டிய மேம்பாலங்களால் கொசுதொல்லை அதகரித்துள்ளது-சைதை துரைசாமி.

ஓ அப்படியா,நான் ராமர் கட்டிய பாலத்தால் தானோன்னு நினச்சேன்.

(நீங்க கரண்ட் கொடுத்தா எதுக்கு சார் கொசு கடிக்க போகுது.இந்த உண்மைய சொன்னா நம்மள பைத்தியம்ன்னு சொல்லுவாங்கே)

-----------------------------------------------------------------------------------------------------------





உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது,
அதை எழுதி அனுப்பினால் உங்க அம்மா திட்டுது :-(

----------------------------------------------------------------------------------------------------------

பொம்பளையாச்சேன்னு பார்க்குறேன்" என்று ஒரு ஆண் சொல்வதில் இரக்கம் இல்லை,ஆணாதிக்கமே அதிகம் இருக்கிறது.

"ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம இப்படி பேசுறியே" என்று பெண் கேட்பதிலும் கூட மறைமுகமாக ஆணாதிக்கமே அதிகம் இருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------

போகோ பார்ப்பவர்கள் மட்டுமல்ல,
ஈகோ பார்க்கும் என்னவளும் குழந்தை தான்.

அடடே...!

-----------------------------------------------------------------------------------------

முதல்முறையா பள்ளி காலத்தில் ஒரு பெண்ணை காதலித்தேன்,

நான் லூசாகி விட்டேன்,
அவள் பாசாகி விட்டாள்.

பயபுள்ள என்னை ஸ்கூலில் தவிக்கவிட்டு காலேஜ் போயிட்டா :-(

-----------------------------------------------------------------------------------------------

#வாழ்கையில் முதல் காதல் பிரியும் போது ஒருவித விரக்தியும்,சோகமும் ஏற்படும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அப்பறம் அதுவே பழகிரும் ;-)

----------------------------------------------------------------------------------------------------------

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே,
.
.
அண்ணா என்றழைக்கின்ற பிகர் தொல்லையே :-(

-----------------------------------------------------------------------------------------------------

இப்போ ஒரு மெஸ்சேஜ் வந்துருக்கு.

Dear subscriber,you have been subscibed to bollywood gossips on Rs.30 per month.
.
.
.
.
.
நைட்டு 12 மணிக்கு நாங்க எதுக்குடா சுடுகாட்டுக்கு போகப்போறோம்? :-(

---------------------------------------------------------------------------------------------------
காதல் ஐஸ்கிரீம் மாதிரி ரொம்ப உருகிட்டா டேஸ்ட் போய்டும் :-(

-------------------------------------------------------------------------------------------------

காதலில் உங்களை மட்டும் எண்ணாமல் உங்களை சுற்றி இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு காதலியுங்கள்,

வாழ்கையில் உங்களை சுற்றி இருப்பவர்களை நம்பாமல் உங்களை மட்டும் கருத்தில் கொண்டு முயற்சி செய்யுங்கள்.

இனி காதலிலும் சரி,வாழ்க்கையிலும் சரி ஏமாற்றமும் இல்லை,ஏப்ரல் ஃபூலும் இல்லை.

------------------------------------------------------------------------------------------------------------

இர‌வில் உற‌ங்கும் முன்
உன் பெய‌ரை ஒரு முறை சொல்லிவிட்டு தான் உற‌ங்குகிறேன்.
உறங்கிய‌வ‌ன் உற‌ங்கியே விட்டால்
க‌டைசியாய் உச்சரித‌து உன் பெய‌ர் ஆக‌ வேண்டும் என்று.

----------------------------------------------------------------------------------------------------