Showing posts with label mind voice jokes in tamil. Show all posts
Showing posts with label mind voice jokes in tamil. Show all posts

Mind Voice sms

இங்கிலீஷ் கத்துக்க ஐடியா குடுடான்னா, தினமும் இங்கிலீஷ் பேப்பர் வாங்கி படிக்கவாம்..
அது புரிஞ்சா நான் ஏன் உன்ட ஐடியா கேக்குறேன்..



---------------------------------------------------------------------------------------------------


ஆபிஸ்ல டீம் லன்ச்..
ரெஸ்டரண்ட்ல இருக்க எல்லா ஐட்டத்துலயும் ஒன்னு ஆர்டர் பண்ணிருக்கேன்..
தக்காளி இருங்கடா.. அப்ரைசல்ல விட்டத இதுல புடிக்கிறேன்..

Mind voice jokes in tamil






நண்பர் : எனக்கு கம்யூனிச சிந்தனை அதிகம்.ஹோட்டல் போனா சர்வருக்கு 20ரூபாய் டிப்ஸ் கொடுத்து தொழிலாளர்களை ஊக்குவிப்பேன்.
நான் : எனக்கும் கூட கம்யூனிச சிந்த்கனை அதிகம்.நான் ஹோட்டல் போனா பில் கொடுக்காம முதலாளித்துவத்தை ஒழிப்பேன்.

------------------------------------------------------------------------------









போன ஆட்சியில் ஆளுங்கட்சிகாரன் 2G'ல அடிச்சத விட,
இந்த ஆட்சியில் ஏர்டெல்காரன் 3G'ல அடிச்ச தொகை அதிகம்.










-----------------------------------------------------------------------









அம்மன் கோவில் ஆடி திருவிழானு காசு வசூல் பண்ணி மைக்லாம் கட்டி போதைல "கோவிந்தா கோவிந்தா"ன்னு கத்திட்டுருக்கானுங்க.
அம்மன் கோவிலில் என்னடா 'கோவிந்தா'ன்னு யோசிச்சா..இந்த கோவிந்தா நான் கொடுத்த காசுக்கு

life sms in tamil

நண்பர் ஒருவர் மாடர்ன் கேர்ள் தான் வேணும்ன்னு தேடி பிடிச்சு கட்டுனாரு,அது வீட்லயே தங்குறது இல்ல
அடிக்கடி போன் மட்டும் பண்ணி "துணிய துவச்சு போட்ருங்க,
குழம்பு வச்சுருங்க,
 டாய்லெட்டை கழுவிடுங்க"ன்னு
ஆர்டர் போடுதாம்,இதுல இதெல்லாம் சொல்லிட்டு
 ஜெயலலிதா ஸ்டைலில் "செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா"ன்னு வேற மிரட்டி கேக்குதாம்...
===============================================================
யாரும் செல்லாத வழியில்...

தனியே ஒருவன் நடந்து சென்றால் அவனுக்கு போதை என்பார்கள்.

அவனைத் தொடர்ந்து நான்கு பேர் சென்றால் அதை பாதை என்பார்கள்.
----------------------------------------------------------------------------------------------------
எந்த பட்டனை அழுத்தினாலும் காங்கிரசுக்கு ஓட்டு விழுந்தது,புனேயில் வாக்குப்பதிவு நிறுத்தம்,எந்திரம் மாற்றம் : செய்தி.

சிதம்பரம் கொடுத்த ஐடியா போல...தமிழக வாக்காளர்களே கவனம்...
----------------------------------------------------------------------------------------------------------
உங்கள் வாக்கு உங்க வீட்டில் திருமணவயதில் உள்ள பெண் போல,உங்களை மதித்து கேட்பவர்களில் யார் நல்லவரோ அவருக்கு வழங்குங்கள்,பணத்தை வாங்கிக் கொண்டு அனுப்பி விடாதீர்கள்.அவன் சீரழித்து விடுவான்...
---------------------------------------------------------------------------------------------------------
'ஈஸ்டர்' என்றால் - அது இறைவன் உயிர்த்தெழுந்த நாள்.

"நான் உன் சிஸ்டர்" என்றாள் - அது என் உயிர் பிரிந்த நாள்.

ஹேப்பி ஈஸ்டர்
-------------------------------------------------------------------------------------------

Mind Voice tamil sms

பெண்களின் திருமண வயது ....21
.
ஆனால் பல ஆண்களின் திருமண வயது..
அவர்களின் தங்கையின் திருமணத்தை வைத்தே
தீர்மானிக்கப் படுகிறது.....


------------------------------------------------------------------------------------------

மூவர் தூக்கு தண்டனை ரத்து தீர்ப்பு திமுக முயற்சிக்கு கிடைத்த வெற்றி - கருணாநிதி.

இதுக்கு பேசாம தூக்குலையே போட்ருக்கலாம்..

--------------------------------------------------------------------------------------------------------
உன்னை எண்ணி பார்க்கையில் கழுதை கத்துது,
அதை எழுத நினைக்கையில் எருமை முட்டுது...!

கருப்பாயி..கருப்பாயி...

-----------------------------------------------------------------------------------------
பிரதமரை கைகாட்டும் பொறுப்பு கருணாநிதிக்கு உள்ளது - திருமாவளவன்.

2ஜி கேஸ்ல என்னைய கை காட்டி விட்றாதிங்கயா.(மன்மோகன் சிங் மைண்ட் வாய்ஸ்)

----------------------------------------------------------------------------------------------------------
விஜயகாந்த் மாநாடு-டாஸ்மாக்கில் 2 கோடி மதிப்புள்ள சரக்குகள் விற்பனை-டாஸ்மாக்கிற்கு லாபம்.

மோடி மாநாடு-டாஸ்மாக்கில் 2 கோடி மதிப்புள்ள சரக்குகள் விற்பனை. - டாஸ்மாக்கிற்கு லாபம்.

திருச்சி மாநாடு-டாஸ்மாக்கில் 2 கோடி மதிப்புள்ள சரக்குகள் திருட்டு - டாஸ்மாக்கிற்கு நஷ்டம்.

லாபத்தை எப்படி நஷ்டமா திருப்புனோம் பார்த்தியா?

------------------------------------------------------------------------------------------------------
"கடும் மன உளைச்சலில் தற்கொலை முடிவில் இருந்த என்னை உங்கள் பதிவுகள் மாற்றிவிட்டது." என்று ஒருவர் இன்பாக்ஸில் சொல்கிறார்.

ஒன்று என் பதிவுகள் அவருக்கு தன்னம்பிக்கை ஊட்டியிருக்கலாம், அல்லது "இவன்ல்லாம் உயிரோட இருக்கும்போது நாம ஏன் சாகனும்" என்று நினைத்திருக்கலாம்.

------------------------------------------------------------------------------------------------------
பணத்தின் மீது காதல் கொண்டால் அம்பானி,
பெண்ணின் மீது காதல் கொண்டால் அம்போ நீ...

---------------------------------------------------------------------------------------------------
தே.மு.தி.க - காங்கிரஸ் கூட்டணி உருவாகுமா? - செய்தி.

வேணாம் கேப்டன் அவிங்க பல 'குடி'ய கெடுத்தவிங்க...

------------------------------------------------------------------------------------------------
தேவர் திருமகனார் வழியில் காங்கிரசை ஒழிப்போம் : ஜெ.

144 உத்தரவு,கைது,தடைன்னு அத்தனை பேரு போட்டு வெளுத்தானுங்க, அவிங்கள விட்டுட்டு நாளைக்கு சாகப்போற கிழவிய எதுக்கு போட்டுத் தள்ளனும்

---------------------------------------------------------------------------------------------------------
திமுக மாநாடு நாடாளுமன்ற தேர்தலுக்கு வெற்றி படிக்கட்டாக அமையும்: கனிமொழி.

அப்பறம் வாட் அபௌட் லன்ச் மேடம்?

-------------------------------------------------------------------------------------------------------
விஜயகாந்தை கேலி பண்ற யாரும் தண்ணி அடிக்க கூடாதுன்னு சொன்னா அப்போ நித்தியானந்தவை கேலி பண்ண யாரும் இதுவரை....

சரி வேணாம் விடுங்க

------------------------------------------------------------------------------------------------------
பண்ருட்டி ராமச்சந்திரன் : விஜயகாந்த் உரித்தால் ஒன்றுமில்லாத வெங்காயம் போல.

விஜயகாந்த் : இதை ஏன் என் கட்சியில் என் கூட பிரச்சாரத்தில் இருக்கும்போது சொல்லல?

பண்ருட்டி ராமச்சந்திரன் : "சொன்னா உதைப்பீங்க"
------------------------------------------------------------------------------------------------------------

காதலர் தினத்துக்கு காதலை ஆதரிப்பவன் பச்சை சட்டை போடணும்ன்னு எவனோ கிளப்பிவிட்ட புரளியை நம்பி துணிக்கடைகளில் அடிச்சு பிடிச்சு பச்சை சட்டை வாங்கும் காளையர்களே...!

ரெண்டு சட்டை சேர்த்து எடுங்க கீழ்பாக்காத்துலையும் அந்த கலர் தான் யூனிபார்மாம்

----------------------------------------------------------------------------------------------------------