EB காரனுக்கு போன் பண்ணி கரண்ட் எப்ப வரும்ன்னு கேட்டா “ உன்னோட மொபைல்ல இன்னும் சார்ஜ் இருக்கான்னு” கேக்குறான்........என்ன கொடும சார் இது ! !
--------------------------------------------------------------------------------------------------------
காதல் தோல்வியைவிட அதிகமான வலி எது தெரியுமா ..?
முறுக்கு தின்னும்போது நறுக் என்று நாக்க கடிச்சுக்கிட்டா வருமே அதுதான்
---------------------------------------------------------------------------------------------------------
#ஹீரோ இரட்டை வேடம் சரி,அது என்ன சூர்யாவுக்கு பதில் சசிக்குமார் வராரு?
.
.
.
.
.
.
.
.
.
அடக்கொடுமையே!தண்ணிய போட்டு 'மாற்றானு'க்கு பதிலா 'சுந்தரபாண்டியன்' போயிருக்கேன்.போதைல சசிகுமார் ரெண்டா தெரிஞ்சுருக்காறு...அவ்வ்வ்வ் :-(
------------------------------------------------------------------------------------------------
#'அண்ணன்' என்று அழைத்த பெண்ணை பெண்ணை காதலிப்பது நம் தமிழ் பண்பாட்டுக்கே இழுக்கான செயல் ஆகும்.
நல்ல வேளை!!என்னைய தம்பின்னு தான் சொன்னா..நான் காதலிக்கலாம் :-)
-----------------------------------------------------------------------------------------------------------
காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள் :-
♣- ► நிச்சயமா நல்லவனா நடிக்க தெரியணும்
♣- ► நிறைய பொய் சொல்லணும்
♣- ► நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை இழக்க தயாரா இருக்கணும்
♣- ► நிறைய மொக்கை ஜோக்ஸ் தெரியணும்
♣- ► பொண்ணுங்க போடுற மொக்கைய தாங்கிக்கிற நல்ல மனசு வேணும்
♣- ► பொண்ணுங்க என்னதான் தப்பு பண்ணினாலும் கண்டுக்காத நல்ல மனசும் அவசியம்
♣- ► காதலிக்கும் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ..நடிகர் ..நடிகை .. பாட்டு எல்லாவற்றையும் உங்களுக்கும் பிடிக்கிறது போல மனச மாத்திக்கணும்
♣- ► நைட்டில கண் முழிக்க தயாரா இருக்கணும் ..
♣- ► மொபைல்க்கு பில் கட்ட /ரீச்சார்ச் பண்ண லம்பா ஒரு அமவுண்ட் ரெடி பண்ணனும் ...
அடி வாங்கும் உடல் திறன் மிக அவசியம்
(அவளுக்கு அண்ணன் இருந்தா /அப்பா ரவுடியா இருந்தா )
♣- ► இத்தனையும் நாம பண்ண அவங்க லாஸ்ட்ல டாட்டா காட்டிட்டு இன்னொரு பையனை கலியாணம் பண்ணி போகும் போது
"எங்கிருந்தாலும் வாழ்க " பாட்டு கண்டிப்பா பாடனும் ...
அந்த மனசுதான் வெரி இம்போர்டேன்ட் ...
♣- ► நிச்சயமா ஒரு டைலாக் மனப்பாடம் பண்ணனும் .......
♣- ► "திரிஷா இல்லன்னா திவ்யா..போடி போடி ... "
---------------------------------------------------------------------------------------------
காதலிக்க பொண்ணுங்களுக்கு ஒரே ஒரு விஷயம் போதும் ...
♣- ► "லைட்டா முகத்தை சாய்ச்சு ஒரு கடைக்கண் பார்வை ... அம்புட்டும்தான் ..பையன் அவுட்
( ♣- ► பெண்களுக்கு முக்கிய குறிப்பு :- "என்னை போல " ஆளுங்க இந்த டகால்டி வேலைக்கெல்லாம் செட் ஆகமாட்டம்.. வீணா ட்ரை பண்ணி நேரத்தை வேஸ்ட் பண்ணாதிங்க )
----------------------------------------------------------------------------------------------------------
மனைவி எப்படி இருக்க வேண்டும் ? How to be a wife?
மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.
ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.
பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்களே, அந்த மகாலட்சுமியை போன்ற திருத்தமான அழகு அந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.
காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, மகாலட்சுமி போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.
எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்
கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.
அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.
பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.
மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.
- இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.
நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.
சரி... நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும் அவரே ஐடியா தருகிறார்.
தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.
பெற்றவர்கள் பெண் பார்க்கும் போது, பெண்ணின் குலம், கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள். இத்தகைய நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், 100க்கு 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.
ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்"என்கிறார் கண்ணதாசன்.
தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது....
Mokka Tamil Sms 2012
படத்துக்கு கூட்டி போக பிகர் இல்லைனாலும்,
பாருக்கு கூட்டி போக நண்பன் அவசியம்...!
-------------------------------------------------------------------
தமிழ்பெண்கள்:
ஆங்கிலத்தில் Boys என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டும்.
ஆனால் Girls என்று சொல்லும் போது ஒட்டாது!
இதே தமிழில் பெண்கள் என்று சொன்னால் ஒட்டும், ஆண்களுக்கு ஒட்டாது!!
தமிழ் பெண்களை தான் முதலில் பெருமைபடுத்துகிறது.
.
----------------------------------------------------------------------------------------------------------
இட்லிக்கு வைக்க இல்ல வடகறி...இங்க இந்தியாவ போடுறாங்க கொத்துகறி...
-----------------------------------------------------------------------------------------------------------
gandhi jayanti sms in tamil
இன்று காந்தி ஜெயந்தி என்பதால்.. காந்தியின் படங்களை சேகரிக்க விரும்புகிறேன்.. எனவே உங்களிடமிருக்கும் 500,1000ங்களை என் கலெக்ஷனுக்கு தாராளமாக அளிக்கலாம்.
குறிப்பு :
உங்களிடம் உள்ளதை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------
Hero,Father,Gr8 Legend,Initiator,Motivator Of Nation
Put Your Hands together fa ♥ Gandhi ♥
Happiiee B'day to you Sir .........
-------------------------------------------------------------------------------------
நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நமது ஆலயம் விடுமுறை !!!
முன் எச்சரிக்கையாய் ஸ்டாக் பண்ணி வைத்த மூத்த குடிமகன்களுக்கு என் வாழ்த்துக்கள் -
பொது நலன் கருதி வெளியிடுவோர் -
பெற்றோர் சொன்னால்
பெட்ரோலையும் குடிப்போர் சங்கம்
-----------------------------------------------------------------------------------------------------------
Life Comedy Sms
மாசக் கடைசில பர்ஸும் வெங்காயமும் ஒண்ணுதான். பிரிச்சுப் பாத்தா ஒண்ணுமில்லாததோட கண்ணுல தண்ணியையும் வரவச்சிடுது.!
-------------------------------------------------------------------------------------------------
'யாரிடமும் சொல்லாதே' ...என்றபடியே யாரிடமாவது உளறிக் கொண்டே இருக்கிறோம் உண்மைகளை!
--------------------------------------------------------------------------------------------------------
ஐடியா ஸிம் 160 ரூபாய்க்கு வாங்குனா 1300 ரூபாய்க்கு டாக் டைம் இலவசமாம்.காதல் ஜோடிங்க கள்ளக்காதல் கேடிங்க யூஸ் பண்ணிக்குங்க :P
------------------------------------------------------------------------------------------------------------

நடந்தது என்ன Tamil Mokka Sms
கூடன்குளம் பிரச்சனை போலிஸ் தடியடி
#
கோடிகோடியா ஊழல் பண்ணுறவங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க,
நியாயம் கேக்குறவங்கள அடிங்க.
-------------------------------------------------------------------------------------------
பணம் இல்லாதவன் வயிறை நிறைக்க ஓடுகிறான்,
பணம் உள்ளவன் வயிரை குறைக்க ஓடுகிறான்
#
என்ன வாழ்க்கடா இது?
---------------------------------------------------------------------------------------
ட்விட்டர “பிளாக்” பண்ண போறாங்களாம்
#
முதல்ல நம்ம கைகாச போட்டு வேற கலர்ல பெயிண்ட் வாங்கி கொடுக்கணும்,
கருப்பு கலர் சரியில்ல!
---------------------------------------------------------------------------------------------
நல்லா இருக்குற பையன கெடுக்குற வார்த்த்தை:
“மச்சான் அந்த பொண்ணு உன்ன பாக்குறாடா”
#
நண்பேன்ல
-------------------------------------------------------------------------------------------
ராமராஜ்யம் படத்துல ராமரோட குழந்தைகள் நீல நிறத்துல இல்ல,
நயன்தாரா நடிச்சா படத்துல கூட குழப்பம் தான் போல.
#
குற்றம் நடந்தது என்ன?
---------------------------------------------------------------------------------------------------
பயங்கரமா தலைவலிக்குது-
சத்தியமா இனிமேல் குடிக்கவே கூடாதுடா
#
ஐஸ் வாட்டர சொன்னேன் குடிச்சி தலவலி வந்துட்டுல.
------------------------------------------------------------------------------------------------
சீதை வேடத்தில் நயன்தாரா
#
போற போக்க பாத்தா
“அனிருத்தும் ஆண்டிரியாவும்” அண்ணன் தங்கச்சியா நடிப்பாங்கன்னு நினைக்கிறேன்.
--------------------------------------------------------------------------------------------------
அவள் கொவிலை சுற்றினாள் பக்தியோடு,
நான் அவளை சுற்றினேன் காதலோடு,
அவள் அப்பா என்னை சுற்றினார் “அரிவாளோடு”
#
தங்கச்சி நீ எங்க இருந்தாலும் நல்லா இரு.
---------------------------------------------------------------------------------
இஸ்ரோவின் 100வது ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது
#
இப்பதான் “1000வாலா”லாம் வந்துட்டே ஒரே தடவைல 1000 ராக்கட் அனுப்பலாமே,
இன்னமுமா தனித்தனியா அனுப்புறிங்க?
-------------------------------------------------------------------------------------------------
“எலைட்” மதுக்கடைகள் எப்போது திறக்கப்படும்?-அதிகாரி தகவல்
#
கடவுள் ஒரு கதவ மூடுன (ஒயின்சாப்) இன்னொரு கதவ (எலைட்) திறப்பார்ங்கிறது இதானா?
--------------------------------------------------------------------------------------------------
கொஞ்சம் ஜோக்கர்ஸ் இருப்பது- லொள்ளு சபா
முழுவதும் ஜோக்கர்ஸ் இருப்பது- லோக் சபா
#
வித்தியாசம்
----------------------------------------------------------------------------
ஜீன்ஸ் பேண்ட், டீ-சர்ட்ட கண்டு பிடிச்சவன் நல்லா இருக்கனும்,
வாரத்துக்கு ஒரு நாள் துவச்சா போதும்,அயர்ன் பண்ணவே வேண்டாம்
#
பேச்சுலர்ஸ் வாழ்க்கை
----------------------------------------------------------------------------------------------------
நிலக்கரி முறைகேடு: திமுக அமைச்சர் ஜெகத்ரட்சகன் மீது புகார்!
#
அடுத்த தடவை திமுக ஆட்சிக்கு வந்தா ஆதிமுக மேல புகார் சொல்லுவாங்க,
இதன உலக வழக்கம்.
-----------------------------------------------------------------------------------------------------------
பெட்ரோல், டீசல் விலை தற்போதைக்கு உயராது: அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தகவல்
#
ஏன்டா போன வாரம் தான கூட்டுனீங்க அதுக்குள்ள திரும்பவுமா?
போங்க அடுத்த வாரம் பாத்துக்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------
டாஸ்மாக்
இதில் நல்ல புரிந்துணர்வு
அரசுக்கும் குடிமக்களுக்கும்
அரசு வைக்கும் டார்கெட்-ஐ
எப்போதுமே தாண்டி விடுகிறார்களே !!!
-----------------------------------------------------------------
மெசேஜ்ல கூட 160 எழுத்து அத தாண்டுனா 2 மெசேஜ் கூட டைப் பண்ணலாம்
#
ஆன இந்த டிவிட்டர்ல 140 எழுத்துக்கு மேல எழுத முடியல,
முதல்ல மாத்துக்கப்பா.
--------------------------------------------------------------------------------------------
எல்லா பூட்டுகளையும் திறக்கும் ஒரே திறவுகோல்
#
பணம் மட்டும் தான்
-------------------------------------------------------------------------
ஹோட்டல்லா போய் சாப்பிடும் போது “டபுள் செட்” ஆர்டர் பண்ணுறவன்
கூட்டத்துக்கு ஒருத்தன் இருக்கான்.
------------------------------------------------------------------------------------------------------
பத்து நிமிசத்துக்கு மேல ஃபோன்ல பேசிட்டு இருந்தா பசங்க கூடவே பேசிட்டு இருந்தாலும் வீட்டுல சந்தேகம்மாவே பாக்குறாங்க
#
போன்ல யாரு?
----------------------------------------------------------------------------------------------------------
கரண்ட கூட டைம் சொல்லிட்டு கட் பண்ணுறாங்க,
ஆன இந்த பொண்ணுங்க காதல எதுவும் சொல்லாமலே கட் பண்ணிருதாங்க.
---------------------------------------------------------------------------------------------------------
நாடாளுமன்றம் வழக்கம்போல் ஒத்திவைப்பு
#
விடுப்பா விடுப்பா பூஜை அறைன்னா பத்தி வைக்கிறதும்,
நாடாளுமன்றம்னா ஒத்தி வைக்கிறதும் சகஜம் தான.
-----------------------------------------------------------------------------------
விளையாட வந்தவர்களைத் திருப்பி அனுப்பியது முறையல்ல - மு.கருணாநிதி
#
வேணும்ன்னா பஜ்ஜியும் கொஞ்சம் கெட்டி சட்டினியும் வாங்கி தாறேன் அப்படியே அப்பீட் ஆகிக்காங்கோ.
------------------------------------------------------------------------------------------------
வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு கணவன், மாதாந்திர சம்பளம் வழங்குவதற்கான மசோதா தயாராவதாக அமைச்சர் கிருஷ்ணா திராத் கூறியுள்ளார்.
#
அது சரி ஒரு சில வீட்டுல ஆம்பளைங்க தான் வேலை பாக்குறாங்க, அதுக்கு யாரு மசோதா தயார் பண்ணூவா?
--------------------------------------------------------------------------------------------------------
இக்கரைக்கு அக்கரை பச்சை
#
நம்ம ஊரு ஃபிகரை விட,
பக்கத்து ஊரு பொண்ணு சூப்பர்.
-------------------------------------------------------------------------------------
டாஸ்மார்க் கடையில் பூட்டை உடைத்து 350 மது பாட்டில்கள் திருட்டு
#
கடைய பூட்ட போறேன்னு சொல்லுரதுக்குள்ளே இப்படியா?
பூட்டிட்டா அவ்வளவு தான் காய்ச்ச ஆரம்பிச்சிருவாங்க.
-----------------------------------------------------------------------------------------------------
எனக்கு முதுகெலும்பு உள்ளதா, இல்லையா என்று தமிழகமக்கள் அறிவர்! -கருணாநிதி!
#
அந்த 176000 கோடியை அடிச்சதயும் அனைவரும் அறிவர்.
-------------------------------------------------------------------------------------------------------
பைக்ல போகும் போது தூரத்துல ஸ்கூட்டில ஒரு பொண்ணு போறது தெரிஞ்சா
பசங்கலோட பைக் தானால வேகம் ஏறுது
-----------------------------------------------------------------------------------------------------
பிரபுதேவாவை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்ட நயன்தாரா!...
#
நானும் எவ்வளவு நாள் தான் நல்லவளாவே நடிக்கிறது?
-----------------------------------------------------------------------------------------------------
தண்ணி அடிக்க ஒயின்சாப்க்கு போன ஆம்பளயும்,
தண்ணி பிடிக்க குழாயடிக்கு போன பொம்பளயும்
சண்ட போடம வந்ததா சரித்திரமே இல்ல.
----------------------------------------------------------------------------------------------------
வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா இருக்குறவன் கிடைச்ச உடன அடுத்தவனுக்கு “அட்வைஸ்” பண்ண ஆரம்பிச்சிருதான்
#
திருந்துங்கப்பா
------------------------------------------------------------------------------------------------------
பேருந்து ஓட்டுனர்
விசிலடித்தால் மட்டுமே
வேலை நடக்கும் இவரிடம் !!!
------------------------------------------------------------------------
ATM கார்டுல பேலன்ஸ்சே இல்லாட்டாலும் அத எப்பவும் பர்ஸ்ல வச்சிட்டு தான் சுத்துறாங்க.
-----------------------------------------------------------------------------------------------------------
மழை பெய்தாலும் வெயில் அடிச்சாலும்
“குடை”யை தூக்கிட்டு போறதுதான்
பொண்ணுங்க ஸ்டைல்
#
நமக்கு கொடுமை
------------------------------------------------------------------------------
போலிஸ் ரவி”
அய்யோ இந்த பேர கேட்டாலே வாந்தி வருதுப்பா
#
வேட்டைக்காரன் எபக்ட்
----------------------------------------------------------------------------------------
முன்னாடிலாம் மாப்பிள்ளை என்ன வேலை பக்குறாருனு பொண்ணு வீட்டுல கேப்பாங்க,
இப்ப மாப்பிள்ளைக்கு என்ன என்ன வேலை எல்லாம் செய்ய தெரியும்னு கேக்குறாங்க.
---------------------------------------------------------------------------------------------------------
படம் ரிலிஸ் ஆகதுக்கு முன்னாடியே படத்த பத்தி தெரிஞ்சி தான் பாட்டு எழுதிருக்காங்க போல
#
நிக்காம ஓடு ஓடு ஓடு வரான் பாரு “வேட்டைகாரன்”
------------------------------------------------------------------------------------------------------
குழந்தைகள் மற்றும், மனஅழுத்த நோயாளிகள் இந்த காட்சியை பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்
#
சன் டிவியில் “வேட்டைக்காரன்” படம்
----------------------------------------------------------------------------------------------------------
அதிமுக ஆட்சியில் குறைகளே இல்லை.
மின்தட்டுப்பாடு மட்டுமே உள்ளது- சரத்குமார்
#
வாங்குன காசுக்கு மேல கூவுராருடா
--------------------------------------------------------------------------------------------------------
கோவில் இல்லாத ஊருல கூட பொண்ணு எடுக்கலாம்
ஆன
கொழுந்தியா இல்லாத வீட்டுல பொண்ணு எடுக்க கூடது
#
மச்சினிச்சி ஃபேன்ஸ்
-----------------------------------------------------------------------------------------
“விளம்பரம் செய்யாதீர்கள்” என்று சுவர் முழுவதும் விளம்பரம் செய்து வைக்கிறார்கள் நம் மக்கள்.
---------------------------------------------------------------------------------------------------
2012 Mokka Sms in tamil
லீவு நாள்ல 10 மணிக்கு எழும்பனும்ன்னா கூட
அலாரம் வச்சி தான் எழும்ப வேண்டுயதுள்ளது
#
பேச்சுலர் வாழ்க்கை
----------------------------------------------------------------------------------------------------
முடி கொட்டுது கொட்டுதுன்னு சொல்லுறாங்க,
ஆன முடி கொட்டி யாரு மண்டயும் வீங்குன மாதிரி இல்லயே!
#
டவுட்
-------------------------------------------------------------------------------------------------
மன்மோகன்சிங் முன்னாடி “மௌனமோகன்”சிங்கா இருந்தாரு
இப்ப வர வர “மைக் மோகனா” மாறிட்டுவாரார்.
#
பதில்லாம் சொல்லுறாராம்.
------------------------------------------------------------------------------------------------
நூறு பெண்களிடம் காதலை சொல்வது
உண்மையான காதல் இல்லை.
நூறு முறை ஒரே பெண்ணிடம் சொல்வது தான்
உண்மையான காதல்.
--------------------------------------------------------------------------------------------------
இனிமை - தனிமை - கொடுமை
அவள் வந்த பின் சேர்ந்தது
அவள் சென்ற பின் வந்தது
அவள் செல்லும் போது சிரித்தது
சும்மா.....ஹி ஹி ஹி !!!
--------------------------------------------------------------------------------------------------
பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
#
ஏற்கனவே கரண்ட் கட் அதிகமா இருக்கு,
இதுல தலைவர வேற கைது பண்ணிட்டாங்க,
இனிமேல் என்ன நடக்க போகுதோ?
------------------------------------------------------------------------------------------------------------
ஏன்ல பொம்பல பேருல ஃபேக் ஐடி ஓப்பன் பண்ணி நீ என்ன பண்ண போற,
இல்ல ஆம்பல கூட சாட் பண்ணி நான் தான் என்ன பண்ண போறேன்.
#
ஃபேக் ஐடி தொந்தரவு
--------------------------------------------------------------------------------------------------
டீசல் விலையுயர்வைத் திரும்பப் பெறவேண்டும் - சரத்குமார்
#
ஏன்ணே நேரா பெறக் கூடாதா “திரும்ப” தான் பெறனுமா
(பெட்ருமாஸ் லைட்டே தான் வேணுமா)
----------------------------------------------------------------------------------------------------
டீசல் விலை உயர்வு
#
நடத்துங்கடா இன்னும் கொஞ்சம் நாள் தான்
பூமா தேவி பிளக்க போறா எல்லாரும் உள்ள போகபோறோம்,
நடத்துங்க.
---------------------------------------------------------------------------------------------------
பஸ்டாண்டுல பஸ்க்கு வெயிட் பண்ணுறத விட
ஃபிகருக்காக வெயிட் பண்ணுற இளைஞர்கள் தான் அதிகம்.
#
நான் பொதுவா சொன்னேன்.
---------------------------------------------------------------------------------------------------
தெரியாத மாணவன்
வீட்டில் பண கஷ்டம் தெரியாது
பேருந்தில் அமரும் இருக்கை தெரியாது
கல்லூரியில் வகுப்பறை தெரியாது
தேர்வில் கேள்விக்கு பதில் தெரியாது
தேர்ச்சியில் பதிவு எண் தெரியாது
வாழ்க்கையில் வசந்தம் தெரியாது !!!
-----------------------------------------------------------------------------------------------------
சொந்த காசுல வெறும் பிரியாணி கூட சாப்பிடாதவன்,
நண்பன் ட்ரீட் வைக்கும் போது டபுள் பிளேட் சிக்கன் பிரியாணி சாப்பிடுறான்.
-----------------------------------------------------------------------------------------------------------
தினமும் குடிக்காதன்னு டாக்டர் அட்வைஸ் பண்ணிருக்கார்.
அதனால நான் இப்ப தினமும் குடிக்கிறது இல்ல
#
வாரத்துக்கு 7 நாள் மட்டும் தான் குடிக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------
புகழ்
தித்திக்கும் கரும்பு அது
அனைவரும் சுவைக்க விரும்புவது
மிகக் கடினம் கிட்ட நெருங்குவது !!!
-------------------------------------------------------------------------------------------------------
அண்ணா வளைவை எனக்கே தெரியாமல் இடித்துள்ளனர்: ஜெயலலிதா
#
நீங்க தான் தமிழ்நாட்டோட முதல்வர், அதாவது தெரியுமா எப்படி?
---------------------------------------------------------------------------------------------------
முன்னாடி தமிழ்நாட்டுல உயிர் காக்கும் திட்டம் இருந்து
#
இப்ப அந்த திட்டம் உயிர் பலிக்கு நிவாரணம் வழங்கும் திட்டமா மாறிட்டு வருது.
----------------------------------------------------------------------------------------------------
காக்கி சட்ட போட்டுட்டு பஸ்ல போகமுடியலப்பா
#
தம்பி ஒரு டிக்கட்ன்னு கேக்குறாங்க.
---------------------------------------------------------------------------------------------------
Subscribe to:
Posts (Atom)