Header Ads

Last update

Politics sms in tamil

யாரும் எதிர்பாராத வகையில் தேர்தல் முடிவுகள் அமையும்- ப.சிதம்பரம்.

ஏதோ ப்ளான் பண்ணிட்டார்யா
---------------------------------------------------------------------------------------------
ஒரு அதிமுககாரர் அம்மா 'நாமம்' வாழ்கன்னு சொல்லிட்டு போறாரு.

தேர்தலுக்கு முன்னாடியே ரிசல்ட்ட சொல்றாரே...
-----------------------------------------------------------------------------------------------------
மற்ற மாநிலங்களுக்கு இது மற்றுமொரு நாடாளுமன்ற தேர்தல்..ஆனால் தமிழகத்திற்கு மாற்றத்திற்க்கான தேர்தல்...

இத்தனை ஆண்டுகள் தேக்கி வைத்த கோபத்துடன் ஓட்டு இயந்திரத்தை ஓங்கி அழுத்த போகிறேன்..அது உடைந்தாலும் சரி...
---------------------------------------------------------------------------------------------------------
"ஓட்டு போடுவதற்கு பணத்தை எதிர்பார்க்காதீர்கள்.அது மகாபாவம்.

ஊரில் ஒரு திருவிழா நடக்கிறது என்றால் பணத்தை செலவழித்து போய் பார்கிறீர்கள் அல்லவா?

அது போலவே தேர்தலை ஒட்டுமொத்த தேசியத்தின் திருவிழாவாக எண்ணுங்கள்.."

-பசும்பொன்.முத்துராமலிங்கத் தேவர்.
-----------------------------------------------------------------------------------------------------
வீட்டு செலவுக்கு இரண்டு கட்சியிடமும் வாங்கி கொள்ளுங்கள்.

-ஏனெனில் அவர்கள் பணம் உள்ளவர்கள்.

ஓட்டை நாட்டுக்கு யார் நல்லது செய்வார்களோ அவர்களுக்கு போட்டுங்கள்.

-ஏனெனில் நாம் மனசாட்சி உள்ளவர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கங்கே இரண்டு திராவிட கட்சியினரும் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி திறமையாக பணம் கொடுத்து கொண்டு இருக்கிறார்களாம்.

இந்த திறமைய மின்சாரம் உற்பத்தி செய்வதில் காட்டிருக்கலாம்
------------------------------------------------------------------------------------------------------
ஆமா ஜெயலலிதா பிரதமர் ஆயிட்டா எதிரி நாட்டு ஹெலிகாப்டர் நம்ம எல்லைகுள்ள வந்தா சுட்டு வீழ்த்துவாங்களா?இல்லை கும்பிடுவாங்களா?
----------------------------------------------------------------------------------------------------------
வழக்கமா திமுக 40 தொகுதி ஜெயிக்கும்ன்னு சொல்ற நக்கீரனே இந்த முறை 22 தொகுதின்னு சொல்லிருச்சா...

அப்போ முடிஞ்சது...
------------------------------------------------------------------------------------------------------
ஐயோ அம்ம்மா...சொன்னா கேளுங்க..நான் தான் வேலைல இருக்கேன் கால் பண்ணாதிங்கன்னு சொல்லிருக்கேன்ல... உங்களுக்கு ஓட்டு போட முடியாது ப்ளீஸ் விட்ருங்க...எப்ப பாரு சும்மா நொயி நொயின்னு... —
------------------------------------------------------------------------------------------------------------
உண்மையில் மோடி விஜய்யை சந்தித்ததில் அவர் ரசிகர்களுக்கு பெருமை இருக்கலாம்...!!!

ஆனால் தனக்கென்று ஒரு செல்வாக்கிருந்தும் கட்சி,ஜாதி,மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு கலைஞனாக மட்டும் தன்னை முன்னிறுத்துவது தான் 'அஜித்' ரசிகர்களாகிய எங்களுக்கு பெருமை...
------------------------------------------------------------------------------------------------------
'ஆய்தஎழுத்து' சூர்யா மாதிரி என்ட்ரி ஆனா ஆளை அடிச்சு 'பேரழகன்' சூர்யா மாதிரி ஆக்கிட்டானுங்களே...

அர்விந்த் கேஜ்ரிவால் @ அரசியல்.
-----------------------------------------------------------------------------------------------------------
உச்சி வெயிலில் ஒரே ஒரு வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டி தனி நபராக பிரச்சாரம் செய்து செல்லும் 'சுயேச்சை' வேட்பாளரை பார்க்கும்போது அருகிலுள்ள பேன்சி ஸ்டோரில் ஒரு 'சோப்பு டப்பா' வாங்கித் தர தோன்றுகிறது.

அதுலயும் "உங்கள் வெற்றி வேட்பாளர்"ன்னு கத்திட்டு போறாரு..பாவத்த...
---------------------------------------------------------------------------------------------------------
பணம் வாங்கி கொண்டு ஓட்டளித்தால் ஒரு வருடம் தண்டனை - தேர்தல் ஆணையம்.

நீங்கள் ஒரு வருடம் தர தேவையில்லை...பணம் வாங்கி கொண்டு ஓட்டளித்தால் அடுத்த 5 வருடங்களுமே தண்டனை தான்...
-----------------------------------------------------------------------------------------------------

No comments