Header Ads

2014 election india comedy

1) அம்மா பிரதமரானால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடுங்குவார்கள் : நாஞ்சில் சம்பத்.

2) ஆடு குட்டி போடும்,டிவி குட்டி போடுமா : ராமராஜன்.

3) டேய் ராஜபக்சே உனக்கு தைரியம் இருந்தால் தமிழகத்தில் வந்து போட்டியிடு : சிங்கமுத்து.

4) அம்மா பிரதமரானால் நீங்கள் ஹெலிகாப்டரில் சென்று மீன் பிடிக்கலாம் : விந்தியா.

இதை விடவா விஜயகாந்த் உளறிட்டாறு?
----------------------------------------------------------------------------------------------------------
காங்கிரஸ் அலுவலகத்திற்குள் நுழையும் போது கோவிலுக்குள் நுழைவது போல் உணர்ந்தேன்- கார்த்திக்.

ஏன் வாசல்ல வரிசையா பிச்சைக்காரங்களா உக்காந்துருந்தாங்களா?

----------------------------------------------------------------------------------------------------
தின்டிவனத்தை தாண்டுணா பாமக இல்லை,சங்கரன் கோவிலை தாண்டுணா மதிமுக இல்லை : நாஞ்சில் சம்பத்.

இப்ப என்ன 'இன்னோவா'ல டீசல் இல்லை...கைல காசு இல்லை...நேர கேக்க வேண்டியது தான...

--------------------------------------------------------------------------------------------------------
வைகோவின் பெயரை உச்சரித்தால் என் தரம் போய்விடும் - ஸ்டாலின்.

ஆமா தல அவரு சொத்து மதிப்பு வெறும் 1 கோடி தானாம்,நீங்க ராசா பெயரை உச்சரிங்க...1,76,000 கோடி...

தரமான ஊழல்

---------------------------------------------------------------------------------------------------------
தி.மு.க.,வில் உள்ள 80 லட்சம் உறுப்பினர்களும்,கட்சி உறுப்பினர் அல்லாத மற்றொருவரை அழைத்து சென்று, ஓட்டு அளிக்க செய்ய வேண்டும்' - கலைஞர்.

லட்சிய திமுகவில் உள்ள 80 கோடி வாக்காளர்கள் மட்டும் வாக்களித்தாலே டி.ராஜேந்தர் நிச்சயமாக பிரதமர் ஆவார்...

-----------------------------------------------------------------------------------------------------------
கரண்ட் கொடுக்க முடியாதவர் பிரதமர் ஆவதை விட,
கரண்ட் பிரதமர் மன்மோகன் சிங்கே பெட்டர்...

காலையிலருந்து 3 தடவை மின்வெட்டு....
சொல்வீர்களா...?இனி பிரதமர்ன்னு சொல்வீர்களா...?
----------------------------------------------------------------------------------------------------------
ஜெயலலிதா தான் பிரதமர் சிவபெருமான் என் கனவில் வந்து சொன்னார் - மதுரை ஆதீனம்.

அடுத்த தடவை கனவுல வந்தா பெங்களூர் கேஸ் எப்ப முடியும்னு கேட்டு சொல்லுங்க...

---------------------------------------------------------------------------------------------------------
வீரமணி தெருவில் நின்று உரக்க பேசுகிறார் :
பெரியார் பிறந்த மண்ணில் இந்து மதத்திற்கு என்ன வேலை?

கலைஞர் வீட்டிலிருந்து ஒரு குரல் சத்தமாக கேட்கிறது :
காபிதூள் வாங்க கடைக்கு அனுப்புனா அங்க என்ன வெட்டி வேலை?

வீரமணி : இந்த வந்துட்டேன்மா.. (சுயமரியாதையுடன் கிளம்புகிறார்)
-----------------------------------------------------------------------------------------------------------
கடந்த இரண்டு வருடங்களில் தென் தமிழகத்தில் நடந்த திடீர் சாதி சண்டைகளால் கண்டிப்பா சாதி பெயரை சொல்லி தேர்தலில் நிற்பவர்களுக்கு மற்ற சாதியினர் ஓட்டளிக்க போவதில்லை.சொந்த சாதி ஓட்டையும் மற்ற கட்சிகள் பிரிக்கும்,இதில் காங்கிரஸ்,திமுக மீதான பொதுமக்கள் வெறுப்பு வேறு.

எனவே காங்கிரஸ் ஆதரவில் மதுரையில் போட்டியிடும் நடிகர் கார்த்திக்,திமுக ஆதரவில் தென்காசியில் போட்டியிடும் டாக்டர்.கிருஷ்ணசாமி ஆகியோரின் தேர்தல் முடிவுகள் இப்போதே தெளிவாக தெரிகிறது.உண்மையில் இந்த விசயத்தில் சரத்குமாரை ஆண்டவன் காப்பாற்றிவிட்டார்.

-------------------------------------------------------------------------------------------------------
நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து அணிகள் களமிறங்குவதால் இளைஞர்கள் யாருக்கு ஓட்டளிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்,எனவே நயன்தாரா தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியாக வேண்டியது காலத்தின் கட்டாயம்...
-------------------------------------------------------------------------------------------------------
கார்த்தி சிதம்பரம் அமெரிக்காவில் படித்தவர்- ப.சிதம்பரம்

உங்கள் மகன் அமெரிக்காவில் படித்தது பெரிய விஷயம் என்றால் அதற்காக பெருமைப்படாமல்,சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆட்சியிலிருந்தும் காங்கிரசால் அத்தகைய தரமான கல்வியை சராசரி இந்தியனுக்கு சொந்த நாட்டில் தர முடியவில்லை என வெட்கப்படுங்கள்.

--------------------------------------------------------------------------------------------------------
அம்மா பிரதமரானால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடுங்குவார்கள் : நாஞ்சில் சம்பத்.

உள்ளூர் திருடன் பட்டப் பகலில் செயினை அத்துட்டு ஓடிட்டு இருக்கான் அதை தடுக்க சொல்லுங்க முதல்ல...
--------------------------------------------------------------------------------------------------------
தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் ஆதரவு கேட்டால் தருவோம் - கருணாநிதி.

அறிக்கி-LC112 கூட்டு...
----------------------------------------------------------------------------------------------------
நாங்கள் டெல்லியிலிருந்து பணம் அனுப்புகிறோம்.ஆனால் அது மக்களிடம் வந்து சேரவில்லை : ராகுல்.

அது எப்படி நீங்க டெல்லில இருந்து அனுப்புற நாராயணசாமி மட்டும் கரெக்டா வந்துறாரு?
-----------------------------------------------------------------------------------------------------------
இத்தாலியிலிருந்து வெறுங்கையுடன் வந்த சோனியாவிற்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது ? - சோனியாவின் உறவினர் மேனகா கேள்வி.

அந்த அம்மாவாச்சும் இத்தாலியிலிருந்து ப்ளைட்ல டிக்கெட் எடுத்து வந்துருக்கும்,இங்க ஒருத்தரு...
-----------------------------------------------------------------------------------------------------------
வேட்பாளரை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ஆர்பாட்டம் : செய்தி.

இதுல என்ன விசேசம்னா இந்த ஆர்பாட்டத்தில் அந்த அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் கலந்துகிட்டாராம்
-------------------------------------------------------------------------------------------------------
கேப்டனுக்காவது தண்ணிய போட்டா தான் வாய் குளறுது,அ.தி.மு.க அமைச்சர்களுக்கு அம்மா பக்கத்துல நின்னாலே பயத்துல வாய் குளறும்.

பேக்டு..பேக்டு..பேக்டு..
-------------------------------------------------------------------------------------------------------

No comments