"ஆசிரியர்கள் என் தெய்வங்கள்"
----------------------------------------------------------------------
நாங்க அசந்து தூங்குனாலும்,அசராம பாடம் நடத்திட்டு கடைசில மனசாட்சியே இல்லாம கேள்வி கேப்பியே தெய்வமே!
என் தெய்வமே!!
கடைசி பெஞ்சுல இருந்த எங்கள முதல் பெஞ்சுல வந்து உக்கார சொல்லி தினம் கொடுமைப்படுத்துனியே தெய்வமே!
என் தெய்வமே!!
'போடா நாயே கிளாஸ விட்டு'ன்னு சொன்னா காலேஜை விட்டே வெளிய போய் டீ கடைல இருப்போமே தெய்வமே!
என் தெய்வமே!!
உங்க வீட்ல சண்டைனா கோவமா காலேஜ் வந்து அந்த கடுப்புல எனக்கு இம்போசிசன் கொடுத்தியே தெய்வமே!
என் தெய்வமே!!
எந்த புள்ளையவாது சைட் அடிச்சா அந்த பொண்ணு பார்க்குறதுக்கு முன்னாடி நீ பார்த்து முறைப்பியே தெய்வமே!
என் தெய்வமே!!
இந்தியா அணுஆயுதம் வச்சு பாகிஸ்தானை மிரட்டுற மாதிரி,இன்டெர்னல் மார்க்கை வச்சு இந்த பாவியை மிரட்டுனியே தெய்வமே!என் தெய்வமே!!
நீங்க இத்தனை பண்ணலும்,என்னைக்காவது பாடத்துல சந்தேகம்ன்னு கேட்டு உன் மனசை சங்கடப்படுதிருப்போமா தெய்வமே!
யோசி என் தெய்வமே!!
----------------------------------------------------------------------
மறக்க முடியாத கல்லூரி நினைவுகளுடன்...
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெய்வமே!என் தெய்வமே!!
------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment