லீவு நாள்ல 10 மணிக்கு எழும்பனும்ன்னா கூட
அலாரம் வச்சி தான் எழும்ப வேண்டுயதுள்ளது
#
பேச்சுலர் வாழ்க்கை
----------------------------------------------------------------------------------------------------
முடி கொட்டுது கொட்டுதுன்னு சொல்லுறாங்க,
ஆன முடி கொட்டி யாரு மண்டயும் வீங்குன மாதிரி இல்லயே!
#
டவுட்
-------------------------------------------------------------------------------------------------
மன்மோகன்சிங் முன்னாடி “மௌனமோகன்”சிங்கா இருந்தாரு
இப்ப வர வர “மைக் மோகனா” மாறிட்டுவாரார்.
#
பதில்லாம் சொல்லுறாராம்.
------------------------------------------------------------------------------------------------
நூறு பெண்களிடம் காதலை சொல்வது
உண்மையான காதல் இல்லை.
நூறு முறை ஒரே பெண்ணிடம் சொல்வது தான்
உண்மையான காதல்.
--------------------------------------------------------------------------------------------------
இனிமை - தனிமை - கொடுமை
அவள் வந்த பின் சேர்ந்தது
அவள் சென்ற பின் வந்தது
அவள் செல்லும் போது சிரித்தது
சும்மா.....ஹி ஹி ஹி !!!
--------------------------------------------------------------------------------------------------
பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
#
ஏற்கனவே கரண்ட் கட் அதிகமா இருக்கு,
இதுல தலைவர வேற கைது பண்ணிட்டாங்க,
இனிமேல் என்ன நடக்க போகுதோ?
------------------------------------------------------------------------------------------------------------
ஏன்ல பொம்பல பேருல ஃபேக் ஐடி ஓப்பன் பண்ணி நீ என்ன பண்ண போற,
இல்ல ஆம்பல கூட சாட் பண்ணி நான் தான் என்ன பண்ண போறேன்.
#
ஃபேக் ஐடி தொந்தரவு
--------------------------------------------------------------------------------------------------
டீசல் விலையுயர்வைத் திரும்பப் பெறவேண்டும் - சரத்குமார்
#
ஏன்ணே நேரா பெறக் கூடாதா “திரும்ப” தான் பெறனுமா
(பெட்ருமாஸ் லைட்டே தான் வேணுமா)
----------------------------------------------------------------------------------------------------
டீசல் விலை உயர்வு
#
நடத்துங்கடா இன்னும் கொஞ்சம் நாள் தான்
பூமா தேவி பிளக்க போறா எல்லாரும் உள்ள போகபோறோம்,
நடத்துங்க.
---------------------------------------------------------------------------------------------------
பஸ்டாண்டுல பஸ்க்கு வெயிட் பண்ணுறத விட
ஃபிகருக்காக வெயிட் பண்ணுற இளைஞர்கள் தான் அதிகம்.
#
நான் பொதுவா சொன்னேன்.
---------------------------------------------------------------------------------------------------
தெரியாத மாணவன்
வீட்டில் பண கஷ்டம் தெரியாது
பேருந்தில் அமரும் இருக்கை தெரியாது
கல்லூரியில் வகுப்பறை தெரியாது
தேர்வில் கேள்விக்கு பதில் தெரியாது
தேர்ச்சியில் பதிவு எண் தெரியாது
வாழ்க்கையில் வசந்தம் தெரியாது !!!
-----------------------------------------------------------------------------------------------------
சொந்த காசுல வெறும் பிரியாணி கூட சாப்பிடாதவன்,
நண்பன் ட்ரீட் வைக்கும் போது டபுள் பிளேட் சிக்கன் பிரியாணி சாப்பிடுறான்.
-----------------------------------------------------------------------------------------------------------
தினமும் குடிக்காதன்னு டாக்டர் அட்வைஸ் பண்ணிருக்கார்.
அதனால நான் இப்ப தினமும் குடிக்கிறது இல்ல
#
வாரத்துக்கு 7 நாள் மட்டும் தான் குடிக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------
புகழ்
தித்திக்கும் கரும்பு அது
அனைவரும் சுவைக்க விரும்புவது
மிகக் கடினம் கிட்ட நெருங்குவது !!!
-------------------------------------------------------------------------------------------------------
அண்ணா வளைவை எனக்கே தெரியாமல் இடித்துள்ளனர்: ஜெயலலிதா
#
நீங்க தான் தமிழ்நாட்டோட முதல்வர், அதாவது தெரியுமா எப்படி?
---------------------------------------------------------------------------------------------------
முன்னாடி தமிழ்நாட்டுல உயிர் காக்கும் திட்டம் இருந்து
#
இப்ப அந்த திட்டம் உயிர் பலிக்கு நிவாரணம் வழங்கும் திட்டமா மாறிட்டு வருது.
----------------------------------------------------------------------------------------------------
காக்கி சட்ட போட்டுட்டு பஸ்ல போகமுடியலப்பா
#
தம்பி ஒரு டிக்கட்ன்னு கேக்குறாங்க.
---------------------------------------------------------------------------------------------------