உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?
பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சு.
--------------------------------------------------------------------
* ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. .. ?
பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.
-----------------------------------------------------------------------------
* உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?
அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு.
-----------------------------------------------------------------
* ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம்
வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?
புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா
இருக்காம்.
----------------------------------------------------------------------------
* டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு
பூச்சிகூட இல்லை.
வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க.
------------------------------------------------------------------------
* உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?
ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்.
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
* டாக்டர், மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களோ ?
அதனாலே என்ன ?
மேலே போகும் வழி-னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே... பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க ?
---------------------------------------------------------------------------------------------
* உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம்
கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. . என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?
வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?
திரும்பவும் இவன் கேட்டான் - அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன்
படைத்தாய் ?
நீ அவளைக் காதலிக்கத்தான். ..
பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?
அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.
எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?- லேசான நகைப்போடு இவன்
கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது
-----------------------------------------------------------------------------------