இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமம்தான் முத்துராமலிங்கத் தேவரின் சொந்த ஊர்.
------------------------------------------------------------------------------------------------------------------
"பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் இறப்பு ஓர் சரித்திர நிகழ்வு. அந்த சரித்திரத்தைப் பற்றி அனைவருமே தெரிந்து கொள்ளுங்கள்:"
************************************************
************************************************
"2) உடல் நிலை மோசம் அடைந்தது அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் மிகவும் முயன்றும் பலன் இன்றி காலமானார்."
"3) கடைசி விருப்பம் என் உடலை சொந்த ஊரான பசும்பொன் கிராமத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று இறப்பதற்கு முன் தேவர் விருப்பம் தெரிவித்திருந்தார்."
"4) அதன்படி மதுரையில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பசும்பொன் கிராமத்துக்கு தேவரின் உடல் கொண்டு போகப்பட்டது."
"5) தேவர் மரணம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியது."
"6) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் பசும்பொன் கிராமத்துக்கு வந்து கண்ணிர் அஞ்சலி செலுத்தினர்."
"7) கள்ள நாட்டைக் காத்த கர்த்தாவே எங்களை அனாதை ஆக்கிவிட்டுப் போய்விட்டாயா? என்று தாய் ஒருத்தி தலையில் அடித்துக் கொண்டு கீழே விழந்து புரண்டு அழுதது அனைவருடைய கண்களையும் குளமாக்கிவிட்டது."
"8) தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்துக் கட்சிக் கொடிகளும் காங்கிரஸ் கொடி உட்பட நடுக்கம்பத்தில் பறந்தது."
"9) தமிழகத்தில் உள்ள மக்கள் ரயில்களிலும், பஸ்களிலும், லாரிகளிலும், கார்களிலும் சாரை சாரையாகப் பசும்பொன் நோக்கி வந்து கொண்டிருந்தனர். தேவரது தெய்வ உடலை காண்பதற்கு."
"10) மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிற வகையில் மாலை அணிவிக்க வருகிறவர்களை போலீசார் கியூவில் நிற்க வைத்தனர்."
"11) தேவரை காண வந்த மக்கள் கூட்டமத்தின் வரிசை (அந்த கியூ) மூன்று மையில் நீளம் இருந்தது. மேலும் கியூ கூடிக்கொண்டே இருந்தது.."
"12) 30. 10. 63 மாலை ஊர்வலம் புறப்படும் வரை மாலைகள் அணிவித்ததுக் கொண்டும் அஞ்சலி செலுத்திக் கொண்டும் இருந்தனர். எங்கும் அழுகுரல் யாருமே இரண்டு நாளும் பச்சைத் தண்ணீர்கூட குடிக்கவில்லை."
"14) பசும்பொன்னில் எறத்தாழ 10 லட்சம் மக்கள் அந்த சிறிய கிராமத்தில் கூடி தெய்வத் தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.."
"15) அங்கு வந்திருந்த கூட்டத்தைக் கண்டு எல்லா அரசியல் கட்சித் ததலைவர்களும் "மக்கள் உள்ளத்தில் தேவர் நீக்கமற நிறைந்து விட்டார்" எனக் கூறினர்."
"16) 30.10.63 அன்று மாலையில் தேவரது தெய்வ உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் வைத்துக் பசும்பொன் கிராமத்தில் ஊர்வலமாகச் சென்று மீண்டும் தேவர் வீட்டுக்கே கொண்டு வரப்பட்டது."
"17) தேவர் புளிச்சிகுளத்தில் தேவரது எஸ்டேட்டில் அன்புடன் வளர்த்த இரண்டு மயில்கள் தேவரது உடல் புஷ்ப பல்லாக்கில் ஊர்வலம் வருகிறபோது உயரப் பறந்து சத்தமிட்டு கூவிக்கொண்டே வந்தது. அனைவரும் அந்த மயில்கள் கத்திக் கதறுவதைக் கண்டு கண்கலங்கினர். அதன்பின் தேலரது உடல் யோகிகளை அடக்கம் செய்யப்பட்டது. தேவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதும் அந்த மயில்கள் இரண்டும் பொத்தென்று கீழே விழந்து இறந்தது."
"18) இறுதி ஊர்வலத்தில் பல முக்கியத் தலைவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்."
"19) ஊர்வலம் தேவரின் தோட்டத்தை அடைந்தது அங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது."
"20) பிறந்த நாளிலேயே இறந்த அதிசயப் பிறவி. தான் இறக்கப்போகும் நாளை முன்னரே கணித்துக் கூறிய மகான்."