Advice SMS_Ramanathapuram

சாப்ட்வேர் நிறுவனங்கள் பெங்களூரு கலவரத்தால் கோயம்புத்தூர் போகலாம் பார்த்தாங்களாம்.. இப்போ அங்கயும் கலவரம்ன்னு யோசிக்கிறாங்களாம்..

கவலைய விடுங்க.. ராமநாதபுரம் வாங்க.. அமைதியான பூமி.. அருமையான க்ளைமேட்.. சென்னை மாதிரி வெள்ளம் கூட வராது.. அட மழையே வராதுன்னா பாருங்களேன்..



Lover's Day Sms

கடலை போட தான் வக்கில்ல,
வாங்கி அவிச்சாவது திம்போம்..



கடலை டிப்ஸ்....

ஆண்: (புதிதாக ஒரு பெண்ணிடம்) ஹலோ... எப்புடி இருக்கீங்க.. ஒரே ஒரு ரிப்ளை குடுங்க..

பெண் : நான் மத்த பொண்ணுங்க மாதிரி கெடயாது.. எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்...

ஆண் : வாவ்... சேம் பிஞ்ச்...நானும் உங்கள மாதிரி தான்,,, எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்..

பெண் : ஹா ஹா... என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது ??

ஆண் : ஏர்டெல்லுக்கு போன் பண்ணி, இருக்குறதுலே அழகான ஒரு பொண்ணு நம்பர் குடுங்கன்னு கேட்டேன்... உங்க நம்பர் தான் குடுத்தாங்க.,,

பெண் : ஸ்மார்ட்.... ஆனா, இதுக்கு மேல நீங்க கால் பண்ணா நான் எடுக்க மாட்டேன்,, இது தான் கடைசி..

ஆண் : வெரி ஸ்மார்ட்.. நானும் இதுக்கு மேல உங்களுக்கு கால் பண்ண மாட்டேன்.. இது தான் கடைசி. இன்னைக்கு மட்டும் பேசுங்க...

பெண் : ஏன் இதுக்கு பிறகு கால் பண்ண மாட்டீங்க ??

ஆண் : எனக்கு சக்கர வியாதி.. ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.. உங்க குரல் வேற நெம்ப ஸ்வீட்டா இருக்கு.. அதான்.

பெண் : ஹா ஹா.. யூ ஆர் நாட்டி..

ஆண் : நோ.. நோ.. ஐம் பிட்டி..

(இதுக்கு மேல தொடர்வது உங்க சாமர்த்தியம்.. )