Insulting SMS in tamil

ராமு : வரதட்சணை வாங்குவது தப்புன்னு முன்னாடி சொன்னீங்க. இப்ப சரின்னு சொல்றீங்களே, ஏன்?

சோமு : அப்ப என் பொண்ணுக்குக் கல்யாணம். இப்ப என் பையனுக்குக் கல்யாணம்.
-------------------------------------------------------------------------------
என் மகன் ஜெயில்ல இருக்கான்..

ஏன்?

ஒரு மொழிப் பிரச்சினைல மாட்டிக்கிட்டான்.

அதான்.என்ன மொழிப் பிரச்சினை?

தேன் மொழிய கெடுத்துட்டான்.
-----------------------------------------------------------------------------
அமலா : ஏண்டி, உன்னைப் பெண் பார்க்க திடீரென்று 40 பேர் வந்தாங்கனு சொல்றியே, பையன் பெயர் என்ன ?

விமலா : அலிபாபா
--------------------------------------------------------------------------------------------------
மகன்: அப்பா எனக்கு பைக் வாங்கி தாங்க

அப்பா : கடவுள் நமக்கு எதுக்கு ரென்டு கால் தந்திருக்கிறார்?

மகன் : ஒன்னு கியர் போட ஒன்னு பிரேக் பிடிக்க

----------------------------------------------------------------------------------------------------
Love பண்ணுற பொண்ணுக்கும் சரக்கடிக்கிற பையனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. என்ன தெரியுமா?

இரண்டிலயும் limit அ தாண்டினா வொமிற்றிங் இலதான் முடியும்.
-----------------------------------------------------------------------------------------------------
என்னுடைய இக் காதல் கடிதத்தினை ஏற்றுக்கொள். தயவு செய்து கிழித்து விடாதே. பிடிக்கவில்லையா? No problem. உன் தங்கையிடம் கொடுத்துவிடு
----------------------------------------------------------------------------------------------------
இன்று மழை வரும்ணு செய்தியில சொன்னாங்க.... நீங்க கேட்டிங்களா?

நான் கேக்கல அவங்களாத்தான் சொன்னாங்க.
------------------------------------------------------------------------------------------------------
ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று இப்ப புரிஞ்சுகிட்டன்.

எப்படி?

என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
----------------------------------------------------------------------------------------------------------
பெண் : ஹலோ….. அடே எங்க வீட்ல யாருமே இல்லடா

ஆண் : oh my god! அப்படியா… இதோ உடன வாறன்.

ஆண் : என்னடி …. வீடு பூட்டி இருக்கு

பெண் : அதுதான்ட சொன்னன்ல…. வீட்டுல யாரும் இல்லண்ணு.. நாம எல்லோரும் ஊருக்கு போறம் வீட்ட வடிவா பாத்துக்கோ please.
--------------------------------------------------------------------------------------------------

Trend SMS in tamil

பள்ளி தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் விரக்தி, மனஉளைச்சல் அடைய வேண்டாம்.எதுக்குங்குறேன்?

இந்த காலத்தில் பாஸ் ஆனவன் மட்டும் காலேஜ் போய் படிச்சு வேலை வாங்கவா போறான்?

அவிங்களும் வெட்டியா தான் சுத்த போறானுங்க...சீயர்ஸ்...!!!
---------------------------------------------------------------------------------------------------------
மேகங்கள் ஒன்றாய் கூடும்போது நாம் காதலித்த நியாபகம்,

மழை வராமல் அவை ஏமாற்றி செல்லும்போது,நீ கழட்டி விட்ட நியாபகம்
------------------------------------------------------------------------------------------------------
ஒரு பொண்ணு ஸ்டேடஸ்ல இருக்க பத்து பேரு கமெண்ட்டுக்கும் ஒருத்தன் அந்த பொண்ணுக்கு முன்னாடி லைக் போட்டனா அவன் நமக்கு முன்னாடி அந்த பொண்ணுக்கு ரூட் போட்ருக்கான்னு அர்த்தம்...

நான் ஒருத்தன் இருக்கேன்னு சொல்றாராம்....நல்லா இரு...நல்லா இரு...
------------------------------------------------------------------------------------------------

Feeling SMS in tamil

பைக்ல 'மெதுவா' போயிட்டு 'சீக்கிரமா' வீட்டுக்கு வந்துருப்பா...!!!

இது போன்ற முரண்பாடான அறிவுரை தாயன்பில் மட்டுமே சாத்தியம்
--------------------------------------------------------------------------------------------------
இப்பெல்லாம் கரண்ட் வாரது,யூகேஜி பையன் ஸ்கூல் போறது மாதிரி ஆயிடுச்சு....

நேத்து ஏன் வரல?

-மழை வந்துருச்சு மேம்

இல்லாட்டினாலும்...................

-----------------------------------------------------------------------------------------------
"வட்டி வாங்குவது தான் பாவங்களில் மிகப்பெரிய பாவம்" என்று இறைதூதர் நபி கூறுகிறார்.

இதை எனக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவனிடம் எப்படி சொல்லி புரியவைப்பேன்
------------------------------------------------------------------------------------------------------
'மேக்ஸ்வெல்' அடிக்கிற பந்தை கூட கேட்ச் பிடிச்சுரலாம்,இந்த பொண்ணுங்க கொடுக்குற 'மிஸ்டுகால' கேட்ச் பண்ண முடியலையே...
--------------------------------------------------------------------------------------------------------
நாம பேசுற பொண்ணுக்கு உடனே கல்யாணம் நடந்துடுது,

நம்மள்ட்ட பேசுற பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் நடந்துருக்கு.

அப்போ யாரைத் தான் காதலிக்கிறதாம்!!!
---------------------------------------------------------------------------------------------------

Election comedy sms in tamil

பிரதமராகும் மோடிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து; தொலைபேசியில் பேசினார் - செய்தி.

மோடி பிரதமர் ஆகி என்னத்த சாதிக்க போறாருன்னு கேட்டிங்களே இதுக்கு மேல என்ன சாதிக்கணும்?

பாருங்க மன்மோகன் சிங்கையே பேச வச்சுட்டாரு.
------------------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசு - தமிழக அரசு இடையே ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும் : தமிழக முதல்வர் நம்பிக்கை.

அது தான் எங்களுக்கும் வேணும்...
மின்சாரம் வரணும்,
மீத்தேன் திட்டம் வரக்கூடாது...
வாழ்த்துக்கள்...!!!
------------------------------------------------------------------------------------------------------
புதிய பாரத பிரதமருக்கு ஜெயலலிதா வாழ்த்துக்கள் : செய்தி.

அப்ப நீங்க பாரத பிரதமர் இல்லையா?

பயபுள்ளைக பொய் சொல்லிருக்கானுங்க
------------------------------------------------------------------------------------------------------
ஜெயலலிதா டூ மோடி.

நான் எட்டாவது பாஸ்ணே,நீங்க எஸ்எஸ்எல்சி பெயிலுண்ணே.
-------------------------------------------------------------------------------------------


cute tamil sms

லவ் பண்ற பொண்ணோட குடும்பத்துக்கு ஒரு பிரச்சனைனா 'வீரம்' அஜித் மாதிரி தீர்த்து வைக்கலாம்.

நமக்கு லவ் பண்ற பொண்ணோட குடும்பமே பிரச்சனை, 'களவானி' விமல் தான் நமக்கு சரியா வருவாரு...
----------------------------------------------------------------------------------------------
ஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள் .
ஒரு அழகிய பெண்ணும் லிப்ஃடில் வந்தாள்.
கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க,
திடீரென அழகி அவனை அறைந்தாள்.
கணவன் அதிர்ச்சியடைந்து "ஏன் இப்ப அறைஞ்சே..?"என்று கேட்க
"எதுக்கு என் இடுப்பை கிள்ளினே..?"என்றாள்.
கணவனுக்கோ ஒன்றும் புரியல . மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் .
அதோட பயங்கர குழப்பம் வேற . லிப்ஃட் நின்னு எல்லோரும் வெளியேற,
மனைவி குசுகுசுன்னு சொன்னாள்,
"அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க. உங்க ஜொள்ளைப் பார்த்து எரிச்சல்ல நான் தான் அவளைக் கிள்ளினேன்..!
---------------------------------------------------------------------------------------------------------