யார் காதலிச்சாலும்
நான்தான் கஷ்டபடுறேன் !
-இப்படிக்கு மொபைல் போன்
-------------------------------------------------------
ஒருவன் : என் காதலிக்கு தினமும் கடிதம் அனுப்புனது தப்பா போச்சுடா...
மற்றொருவன் : ஏன்டா?
ஒருவன் : அவங்க ஏரியா தபால் காரனோட ஓடி போயிட்டாடா...
-----------------------------------------------------------------------------------------------------
மனைவி:உங்க நண்பர் உங்க கிட்ட கடன் வாங்க வந்திருக்கிறார் போலத் தெரிகிறதே?''
கணவன்:எப்படி அவ்வளவு சரியாகக் கண்டு பிடித்தாய்?'
மனைவி:நான் சீனி போடாமல்,தண்ணீராகக் கொடுத்த காபியை அவ்வளவு புகழோ புகழ் என்று புகழுகிறாரே,
அதனால் தான் கேட்டேன்.
--------------------------------------------------------------------------------------------------------
நாம் விரும்பும் பெண் நம்மை விரும்பாத போது
நம் விருப்பத்திற்கு விரும்ப சொல்வது
நீரே இல்லாத குட்டையில் மீன் பிடிப்பது போல
துண்டில் போட்டு காத்திருந்தாலும் எதுவும் சிக்காது..
--------------------------------------------------------------------------------------------
முதலில் அவள் ஒரு லைக்குக்கு சிரிப்பா நீயும் சிரிப்ப அப்புறம் உன் பொழப்பு சிரிப்பா சிரிக்கும் அதற்க்கு அவள் லைக் போட்டு சிரிப்பா இதற்க்கு பெயர் தான் முகநூல் காதல்.".!..........
------------------------------------------------------------------------------------------------------------
மூன்று செயல்கள் மகிழ்வான வாழ்வுக்குரியது,
அவை சென்றதை மறப்பது,
நிகழ் காலத்தை நேர் வழியில் செலுத்துவது,
வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பது.
-------------------------------------------------------------------------