Our social:

2

Latest Post

Sunday, October 4, 2015

விலைவாசி

  

political sms in tamil

காரில் கெத்தா போயிட்டு இருந்த ஸ்டாலின்,
அப்பறம் பைக்ல போனார்,
அப்பறம் ஸ்கூட்டர்,
அப்பறம் சைக்கிள்,இப்ப நடந்து போறார்.

திமுகவுக்கு ஓட்டு போட்டா உங்க வாழ்க்கை எப்படி மாறும்ன்னு தெளிவா காட்றார்
தோல்வியை கண்டு பயப்படுவதில்லை - இளங்கோவன்.
அப்ப விஜய்ய வச்சு புலி-2 எடுக்குறது?

ஸ்டாலினுக்கு கவர்ச்சி உள்ளது - ஜூனியர் விகடன்.
லெக்கின்ஸ் போட்டு சுத்துறாரா?


மோடி பேஸ்புக்,ட்விட்டர் நிறுவனர்களை அடிக்கடி சந்திப்பதிலுள்ள நல்லவிசயம்...
இந்தியாவில் பேஸ்புக்,ட்விட்டருக்கு தடை வராதுஸ்டாலின் நியூ கெட்அப்...

டாடி கட்சி நிதிலருந்து ஒரு 10 லட்சம் தாங்க..மலேசியா போய் அங்கிருக்க தமிழர்கள் ஆதரவ கேட்க போறேன்..

Sunday, September 20, 2015

Parent insulting friend joke

நண்பன் 1:
டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன், அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு" எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா

நண்பன் 2:
அது கூட பரவாயில்லை மாப்பிலே நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா...

Thursday, August 27, 2015

Mind voice jokes in tamil


நண்பர் : எனக்கு கம்யூனிச சிந்தனை அதிகம்.ஹோட்டல் போனா சர்வருக்கு 20ரூபாய் டிப்ஸ் கொடுத்து தொழிலாளர்களை ஊக்குவிப்பேன்.
நான் : எனக்கும் கூட கம்யூனிச சிந்த்கனை அதிகம்.நான் ஹோட்டல் போனா பில் கொடுக்காம முதலாளித்துவத்தை ஒழிப்பேன்.

------------------------------------------------------------------------------

போன ஆட்சியில் ஆளுங்கட்சிகாரன் 2G'ல அடிச்சத விட,
இந்த ஆட்சியில் ஏர்டெல்காரன் 3G'ல அடிச்ச தொகை அதிகம்.


-----------------------------------------------------------------------

அம்மன் கோவில் ஆடி திருவிழானு காசு வசூல் பண்ணி மைக்லாம் கட்டி போதைல "கோவிந்தா கோவிந்தா"ன்னு கத்திட்டுருக்கானுங்க.
அம்மன் கோவிலில் என்னடா 'கோவிந்தா'ன்னு யோசிச்சா..இந்த கோவிந்தா நான் கொடுத்த காசுக்கு

Thursday, August 13, 2015

tasmac jokes in tamil

பசங்களா இன்னும் யாரெல்லாம் 'மதுவிலக்கு' கேட்டு போராடல?


ரமேஷ் அப்பாவும்,சுரேஷ் அப்பாவும்...


Friendship day Joke in tamil

கொரியரில் பரிசு அனுப்புபவனை விட,
அரியரில் கூட அமர்ந்திருப்பவனே சிறந்த நண்பன்.
Happy Friendship Day

Saturday, May 23, 2015

Exam result sms

பரீட்சையில முதல்ல வரவன் மனுசன்...
பரீட்சை ஹாலை விட்டு முதல்ல எந்திரிச்சு வரவன் பெரிய மனுசன்...
----------------------------------------------------------------------------------------------------------
எப்பவும் ஒருத்தன்,ரெண்டு பேர் தான் முதல் ரேங்க் வருவான்..
இந்த தடவை 'விஜய் அவார்ட்ஸ்' ஜூரிஸ் பேப்பர் திருத்துனாங்களா?
பரீட்சை எழுதுன எல்லாருக்கும் அவார்டு கொடுத்துருக்காங்க.
---------------------------------------------------------------------------------------------------------
10வது ரிசல்ட் பார்த்துட்டு எங்க அப்பாட்ட,"மார்க் குறைவா வந்துருக்கு, ரீவேலியூசன் போடனும் காசு தாங்க"ன்னு கேட்டேன்..
"எவனோ நல்லவன் கையில் பேப்பர் போனதால இந்த மார்க்கு,ரீவேலியூசன் போட்டு வேறவன் திருத்துனா இந்த மார்க்கும் போய்டும் மூடிட்டு இரு"ன்னு சொன்னாரு.
பட் அவரு சொன்னதுல ஒரு நியாயம் இருந்துச்சு...
--------------------------------------------------------------------------------------------------------------------------
'மே' மாசம் வர ரிசல்ட்ல பொண்னுங்க ஜெயிப்பாங்க...பசங்க கணக்குல சொதப்புவாங்க...
12வது ரிசல்ட் - பொண்ணுங்க முதலிடம், நெறையா பசங்களுக்கு கணக்குல போச்சு.
10வது ரிசல்ட் - பொண்ணுங்க முதலிடம், நெறையா பசங்களுக்கு கணக்குல போச்சு.
பெங்களூர் வழக்கு ரிசல்ட் - அம்மா விடுதலை,குமாரசாமிக்கு கணக்குல போச்சு...
---------------------------------------------------------------------------------------------------------------------

Friday, May 15, 2015

Exam SMS in tamil

பக்கத்து வீட்டு பொண்ணு 1080 மார்க். அவங்கம்மா எங்கம்மாட்ட "உங்க பையன் +2ல எவ்ளோ மார்க்?"ன்னு கேட்டு அவமானபடுத்திடாங்க...

எப்படியாவது பழிவாங்கனும்ன்னு யோசிச்சுட்டு இருக்கும்போது

 அந்த பொண்ணு அப்பா ஒரு ஆண்ராய்டு போன் பரிசா கொடுத்துருக்கார்ன்னு கேள்விப்பட்டேன்.

இனி நாம என்னத்த பழிவாங்க,அதுவே நாசமா போய்டும்

Tuesday, March 31, 2015

tamil Mind Voice sms

பெற்றோர் திட்டியதால் கிணற்றில் குதித்த மாணவி - செய்தி
அப்படி பார்த்தா நாங்கல்லாம் கடல்ல தான் குதிக்கணும்.

--------------------------------------------------------------------------


இந்தியா தோற்றுவிட்ட கிரிக்கெட் போட்டியின் ஹைலைட்ஸ் பார்க்கும்போது,
கழட்டிவிட்ட காதலியை கணவனுடன் பார்ப்பது போன்ற ஒரு பீலிங்..

Saturday, February 28, 2015

Funny Jokes in tamil

பசங்க எந்த பொண்ண கல்யாணம் கட்டப்றோமோன்னு அதிகம் யோசிக்கிறாங்க,
பொண்ணுங்க எந்த புடவைய கல்யாணத்துக்கு கட்டப்றோமோன்னு தான் அதிகம் யோசிக்கிறாங்க...
-----------------------------------------------------------------------------------------------------------------
காங்கிரஸ் ஆட்சியில் குஷ்பு அமைச்சராவது உறுதி - இளங்கோவன்.
கேக்குறவன் கேனையன்னா 'தோனிக்கு சொந்த ஊரு தேனி'ன்னு சொல்லுவாங்களாம்...

-----------------------------------------------------------------------------------------------------------

தமிழகதிற்கு புதிய ரயில் இல்லை - விஜயகாந்த் அதிருப்தி.
அட்லீஸ்ட் ஒரு சரக்கு ரயிலாவது விட்ருக்கலாம்லயா...

------------------------------------------------------------------------------------------------

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை சிறையில் வைத்து கொலை செய்ய முயற்சி : செய்தி.
ஜெயிலுக்குள்ள கைதிகள்ட்ட "நான்லாம் பௌலிங் போட்டா டீவில்லியர்ஸே சும்மா நடுங்குவான்"ன்னு பொய் சொல்லி ஏமாத்திருக்கான்..ராஸ்கல்..

--------------------------------------------------------------------------------------------------------------------------
Thursday, January 29, 2015

2015 latest Tamil SMS

'என்னை அறிந்தால்' திரைப்படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் : செய்தி.
மைக் 1,மைக் 2,மைக் 3,மைக் 4 பாம் எங்கடா வச்சிங்க?


-------------------------------------------------------------------------------------------------------------இந்த ஹிந்திக்காரனுங்க நம்ம ஊர்ல வந்து அடகுக்கடை வைக்கிறானுங்க,அணு உலை வைக்கிறானுங்க...எக்ஸ்ட்ரா ஒரு பானிப்பூரி கேட்டா வைக்க மாட்றானுங்க...
விழித்துக்கொள் தமிழா

---------------------------------------------------------------------------------------------------------


என் தாலியை யாருக்கும் காட்ட முடியாது - குஷ்பு
பாவம் அடகுல இருக்கும்போல

-----------------------------------------------------------------------

வீடு கொடுங்கன்னு கேட்டா "பேச்சுலருக்கு தர மாட்டோம்"ன்னு சொல்றாங்க.அப்ப முதல்ல பொண்ண கொடுங்கன்னு கேட்டா அடிக்க வாராங்க...
என்ன வாழ்கைடா...?

---------------------------------------------------------------------------------------------------------
 அமெரிக்க மாப்பிளைகள் கடைசி நேரத்தில் என்ட்ரி ஆகி நாங்க காதலித்த பெண்களை கட்டிட்டு போகாமல் தடுக்கும் புதிய ஒப்பந்தத்திலும் ஒபாமா - மோடி கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்...