Our social:

2

Latest Post

Friday, December 20, 2013

Timing Jokes Tamil

 அமெரிக்காவில் இந்திய துணைத் தூதுவர் கைது : செய்தி.

ஆறு வருசமா ரீசார்ஜ் பண்ணவன கழட்டிவிட்டு அமெரிக்க மாப்பிள்ளைய கட்டிட்டு போற ஒவ்வொரு இந்திய பிகருக்கும் இது ஒரு பாடமா அமையும்ன்னு நம்புறேன்.

புடிங்க சார் புடுச்சு ஜெயிலில் போடுங்க சார்

---------------------------------------------------------------------------------------------------------------------

அஜீத் தான் நல்லா இருக்காரு,விஜய் தான் நல்லா இருக்காருன்னு பசங்க அடிச்சுக்குறானுங்களே,அதே மாதிரி நயன்தாரா தான் நல்லா இருக்கு,நஸ்ரியா தான் நல்லா இருக்குன்னு பொண்ணுங்க என்னைக்காவது சண்டை போட்டு பார்த்திருக்கிங்களா?

மாட்டாங்க...

பொண்ணுங்களுக்கு தான் இன்னொரு பொண்ணு நல்லா இருந்தா பிடிக்காதே

------------------------------------------------------------------------------------------------------------------------
 
தி.மு.க வுடன் கூட்டணி இல்லை என்பது நிம்மதி அளிக்கிறது - இளங்கோவன் காட்டமான பதில்.

திருடர்களுக்குள் போட்டி இருக்கலாம்,பொறாமை இருக்கக் கூடாது...

-------------------------------------------------------------------------------------------------------------------------
 
Sunday, December 15, 2013

Friendship SMS in Tamil

"நைட்டு கால் பண்றேன்"னு சொன்னா,"டாட்டா"னு சொல்றா.

"நைட்டு கூப்பிடுறேன்"னு சொன்னா,"பேட்டா பிஞ்சுரும்"ன்னு சொல்றா.

இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை

----------------------------------------------------------------------------------------------------
நண்பன் பிறந்த நாளுக்கு போன் அடிச்சு "சரக்கடிக்க வா"ன்னு சொல்றவனும்,

நடிகன் பிறந்த நாளுக்கு போஸ்டர் அடிச்சு "அரசியலுக்கு வா"ன்னு சொல்றவனும்.

இந்த சமுதாயத்துக்கு எதோ சொல்ல நினைப்பவர்கள்...

-------------------------------------------------------------------------------------------------------
முகம் தெரியாம ரெண்டுபேரும் ஹெல்மெட் போட்டுட்டு பைக்லையே வச்சு எல்லா சில்மிசமும் பண்ணிட்டு போகுது ஒரு ஜோடி.

ஒருவேளை 'பாதுகாப்பான உடலுறவு'ன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டங்களோ?

-----------------------------------------------------------------------------------------------------

Saturday, December 14, 2013

Miss u sms in tamil

தான்தான் அழகு என் மார்தட்டிய மலர்களிடம் சண்டையிட்டேன் ஏன் தெரியுமா ? பெண்ணே உன் புன்னகைக்கு முன்னால் பூக்கள் எல்லாம் காய்ந்து போன காகிதம...

-------------------------------------------------------------------------------------------------------------------------
 தான்தான் அழகு என் மார்தட்டிய மலர்களிடம் சண்டையிட்டேன் ஏன் தெரியுமா ?
பெண்ணே உன் புன்னகைக்கு முன்னால்
பூக்கள் எல்லாம் காய்ந்து போன காகிதம்தான்

------------------------------------------------------------------------------------------------------------

Friday, December 13, 2013

Tamil Funny Pictures (Facebook)

Boys Marriage

Tuesday, December 10, 2013

Customer Care SMS in Tamil

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்..

ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு .. . . "ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !! .

"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ? .

"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் போட்டிங்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"

"கோவப்படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா ?"

"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?" .

"இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.." .

".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! " .

"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்னை லவ் மேரேஜ் பண்ணா... ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்... அரேஞ்சுடு மேரேஜ்ன்னா பாரிஸ் போலாம்!! .

"சார்..!! நான் தான் இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டேன்ல .. என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..? .

இப்ப புரிதா !!.. நான் இஷ்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்குன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!!!

Thursday, December 5, 2013

Tamil Mokka

'காதல்' என்பது காது குடையிற மாதிரி,பல்லு குத்துற மாதிரி,மூக்கு நோண்டுற மாதிரி நமக்கு தான் சுகமா இருக்கும்,சுத்தி நின்னு பாக்குறவனுக்கு கடுப்பா இருக்கும்.

Wednesday, December 4, 2013

கடலை டிப்ஸ்....Kadalai Tips

கடலை டிப்ஸ்....

ஆண்: (புதிதாக ஒரு பெண்ணிடம்) ஹலோ... எப்புடி இருக்கீங்க.. ஒரே ஒரு ரிப்ளை குடுங்க..

பெண் : நான் மத்த பொண்ணுங்க மாதிரி கெடயாது.. எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்...

ஆண் : வாவ்... சேம் பிஞ்ச்...நானும் உங்கள மாதிரி தான்,,, எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்..

பெண் : ஹா ஹா... என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது ??

ஆண் : ஏர்டெல்லுக்கு போன் பண்ணி, இருக்குறதுலே அழகான ஒரு பொண்ணு நம்பர் குடுங்கன்னு கேட்டேன்... உங்க நம்பர் தான் குடுத்தாங்க.,,

பெண் : ஸ்மார்ட்.... ஆனா, இதுக்கு மேல நீங்க கால் பண்ணா நான் எடுக்க மாட்டேன்,, இது தான் கடைசி..

ஆண் : வெரி ஸ்மார்ட்.. நானும் இதுக்கு மேல உங்களுக்கு கால் பண்ண மாட்டேன்.. இது தான் கடைசி. இன்னைக்கு மட்டும் பேசுங்க...

பெண் : ஏன் இதுக்கு பிறகு கால் பண்ண மாட்டீங்க ??

ஆண் : எனக்கு சக்கர வியாதி.. ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.. உங்க குரல் வேற நெம்ப ஸ்வீட்டா இருக்கு.. அதான்.

பெண் : ஹா ஹா.. யூ ஆர் நாட்டி..

ஆண் : நோ.. நோ.. ஐம் பிட்டி..

(இதுக்கு மேல தொடர்வது உங்க சாமர்த்தியம்.. )

Friday, November 22, 2013

Funny Tamil Sms

காதலிப்பவர்கள் உங்களை ஏமாற்றி சென்றால் கவலை படாதீர்கள்,நீங்கள் இழந்தது அன்பான ஒருவரை அல்ல,ஒரு நம்பிக்கை துரோகியை...!

-----------------------------------------------------------------------------------------------------

பொறுப்பில்லாம பியூட்டி பார்லர்,லேடிஸ் க்ளப்'ன்னு சுத்துற பொண்டாட்டி மாதிரி கரண்டு எப்போ போகுது எப்போ வருதுன்னே தெரிய மாட்டுதே

-----------------------------------------------------------------------------------------------

சின்ன வயசுல எங்க அப்பா அட்வைஸ் பண்ணி கேக்கலைனா "நல்லது என்னைக்கும் கசக்க தாண்டா செய்யும்"ன்னு சொல்லுவாரு.

அப்போ எனக்கு அது புரியவே இல்ல.அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு பீர் சாப்டேன் அப்ப தான் அவர் சொன்னது உண்மைன்னு புரிஞ்சது.

நல்லது என்னைக்கும் கசக்கத் தான் செய்யும்

---------------------------------------------------------------------------------------------------

அத்தைகிட்ட "பொண்ணு தாங்க"ன்னு கேக்குறது வேஸ்டு - தூக்கிறனும்

அம்மா(CM)கிட்ட "கரண்டு தாங்க"ன்னு கேக்குறதும் வேஸ்டு - தூங்கிறனும்

-------------------------------------------------------------------------------------------------------

80% இந்திய இளைஞர்களுக்கு பேஸ்புக் அக்கௌண்ட் இருக்கிறது :செய்தி.

மிச்சம் 20% இந்திய இளைஞர்களுக்கு ஆபிசில் வேலை இருக்கிறது.

இதுக்குத்தேன் வேலைக்கு சேரும்போதே இதெல்லாம் கேட்டு சேரனும்

------------------------------------------------------------------------------------------------------

அ.தி.மு.க நந்தவனம்,
ம.தி.மு.க சுடுகாடு - நாஞ்சில் சம்பத்.

நந்தவனத்தில் நாயா இருக்குறத விட,
சுடுகாட்டில் பேயா இருக்கலாம்.

-----------------------------------------------------------------------------------------------
"நைட்டு கால் பண்றேன்"னு சொன்னா,"டாட்டா"னு சொல்றா.

"நைட்டு கூப்பிடுறேன்"னு சொன்னா,"பேட்டா பிஞ்சுரும்"ன்னு சொல்றா.

இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை

----------------------------------------------------------------------------------------------------------
ஒருத்தரு இன்று 'சகிலா பிறந்தநாள் சிறப்பு கவர்ச்சி படம்'ன்னு அந்த வெள்ளை சேலை படத்தை போட்ருக்காரு.

போயா யோவ்...!,இதெல்லாம் நான் ஸ்கூலில் படிக்கும்போதே லேபிலுக்கு பதில் ஓட்டிட்டு போனேன்,சிறப்பு கவர்ச்சி படமாம்..கடுப்புகள கிளப்பிகிட்டு

-------------------------------------------------------------------------------------------------------
#தள்ளாத வயதில் ஏடிஎம் வாசலில் காவல் பணிபுரியும் முதியவர்,இளவயதில் பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி விடுகிறார்.

-----------------------------------------------------------------------------------------------------

இப்போ சச்சினை பார்த்து அழுவுறதா..சச்சின் பொண்ணை பார்த்து சிரிக்கிறதா...ஒன்னும் புரியல

----------------------------------------------------------------------------------------------

சிறுவயதில் சச்சின் கையெழுத்திட்ட பூஸ்ட் பேட்டில்(Boost Bat) கிரிக்கெட் பழகிய மகிழ்ச்சியை,இப்பொழுது கவர்னர் கையெழுத்திட்ட கரன்சியால் பெற முடியாது.

அது ஒரு அழகிய 'சச்சின்' காலம்..Bye Bye Sachin

------------------------------------------------------------------------------------------------------------
Tuesday, November 12, 2013

Love Advice Sms In Tamil

தப்பு தப்ப லவ் பண்ண ஆளு செலக்ட் பண்ண வேண்டியது அப்புறம் உடகாந்து அழுவுறது இதே வேலைய போச்சி இவிங்களுக்கு டோன்ட் பீல் ப்ரோ

##காக்கா போனால் என்ன கிளி வரும்

-----------------------------------------------------------------------------------------------------------
நீர் அண்ணன் செஞ்சி குடுத்துச்சி ஈஈஈஈஈஈ
குழந்தைகள்
இதயம் பாதிக்க பட்டவர்கள்
பிரகனண்ட் லேடிஸ் பர்ர்க்க வேணாம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

----------------------------------------------------------------------------------------------------
இப்படி ஒரு ஆண் கிடைத்தால்
அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
==============================

1) எந்த ஒரு கடும் கோபத்திலும்
எல்லை மீறி தகாத வார்த்தைகளை
வாய் தவறி கூட சொல்லமாட்டார்.

2) உங்களின் மோசமானச்
சமையலையும் சிரித்துக்
கொண்டே சாப்பிடுவார்.

3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார்.ஒவ்வொர சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.

4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர
மாட்டார்.உங்கள் குறைகளை நிறைகளாக்க
முயற்சிப்பார்.

5) உங்கள் மனதை ஆழமாய்
நேசிப்பதால் ,எத்தனை அழகான பெண்கள்
முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு
அழகாய் தெரிவீர்கள்.

6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில் ,
அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய
முடியாது.வேறு எந்த வேலையிலும்
கவனம் செல்லாது .

7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும்
ஒப்பிட்டுப் பேச மாட்டார்.எந்த ஒரு பெண்ணைப்
பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.

8)உங்களை தொலைவில் இருந்துப்
பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள்
மௌனங்கள் அனைத்தையும் அழகாய்
மொழி பெயர்ப்பார்.

9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும்
பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார்.
எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள்
நடந்துக் கொள்ள உதவுவார்.

10) உங்களை வேலைக்காரியாய் ,
சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு ,
குழந்தையாய் , தோழியாய் , தாரமாய் ,
தாயாய் பார்ப்பார்.

11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு , உங்கள்
அழுகை பார்த்து அதிகம் வருந்துவார்.நீங்கள்
சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்....

-----------------------------------------------------------------------------------------------------

Friday, October 25, 2013

Political jokes Tamil

இந்தியாவின் நன்மைக்காக எந்த அணி அமைந்தாலும், அந்த அணியை நான் வரவேற்கிறேன் : கலைஞர்.

இப்போதைக்கு தலைவரு இந்திய கிரிக்கெட் அணி,ஹாக்கி அணி கூப்டா கூட போய்டுவாரு..நெலமை அப்படி

(அதுவும் மகளீர் அணியா இருக்கணும் )

------------------------------------------------------------------------------------------------------------

கலைஞர் ஒரு யுகபுருஷன் - துரைமுருகன்.

புருஷன் இல்ல...புருஷர்ர்ர்ர்....மரியாத..மரியாத..

-------------------------------------------------------------------------------------
பிரபுதேவா - நயன்தாராவுக்கு அடுத்து துக்கப்பட்டு,துயரப்பட்டு, வெக்கப்பட்டு,வேதனைப்பட்டு பிரிஞ்ச ஒரு ஜோடினா அது தி.மு.க - காங்கிரஸ் தான்

------------------------------------------------------------------------------------------------

இன்னும் மூன்று மாதத்தில் மின்வெட்டு சரி செய்யப்படும் - நத்தம் விஸ்வநாதன்.

உங்களுக்கு ஓவர் ஆயிடுச்சு,ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போய்டுங்க..குட் நைட்..

-----------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசே காரணம்-தா.பாண்டியன்.

அருமையா சொன்னிங்க,அந்த மைக்கையும்,இன்னோவா கார் சாவியையும் அவருகிட்ட கொடுங்க...
-------------------------------------------------------------------------------------------------------
Thursday, October 17, 2013

Romantic Tamil SMS 2014

#தோழியிடம் என்ன பேச வேண்டும்,காதலியிடம் என்ன பேச வேண்டும்,எனத் தெரிந்த ஆணும்,தோழியும் காதலியும் ஒருத்தியாய் அமைந்துவிட்டால் குழம்பி போவான்

----------------------------------------------------------------------------------------------------------

நிஜத்தில் கிஸ் பண்ணா மூக்கும் மூக்கும் இடிக்கிறது இருக்கட்டும்,மொபைலில் கிஸ் பண்ணா மூக்கு பட்டு கால் கட்டாயிடும்

------------------------------------------------------------------------------------------------------

உன் நண்பன் யார் என்று சொல்,
நீ யார் என்று சொல்கிறேன்.
(பழமொழி)
.
உன் நண்பி யார் என்று சொல்,
நானும் ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுக்குறேன்
(பூபதி)

-------------------------------------------------------------------------------------------------------

நைன்டி(90ml) போட்டு இளைஞன் ஓட்டும் பல்சரை விட,

நைட்டி போட்டு ஆண்டி ஓட்டும் ஸ்கூட்டியே சாலையில் அதிக விபத்தை ஏற்படுத்துகிறது.

அவதானிப்பு

----------------------------------------------------------------------------------------------------------
உன் கண்களை கடந்து சென்ற ஆணுக்கும்,
கசாப்புக்கடை முன் நடந்து சென்ற ஆட்டுக்கும்...

நிச்சயம் உயிர்வதையே...

---------------------------------------------------------------------------------------------

Sunday, October 13, 2013

ஜெய் ஹிந்த்...! Friends..........

இந்தியா பிரச்சனையிலே இருக்கு. 
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்

Visit

 XciteFun.net
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)

Visit XciteFun.net
 
1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)
Visit XciteFun.net
 
25 கோடி பள்ளில படிப்பவர்கள்
Visit XciteFun.net
 
1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்
Visit XciteFun.net
 
15 கோடி வேலை தேடுவோர்
Visit XciteFun.net
 
1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
Visit
 XciteFun.net

ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி
  
மிச்சம் இருப்பது நீயும் நானும்

நீ எப்போ பார்த்தாலும் மெயில் அனுப்பறது/படிக்கிறதுல பிஸி

Visit XciteFun.net 

அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்

Visit XciteFun.net 

?ui=2&view=att&th=1256889301c88c70&attid=0.1&disp=attd&realattid=ii_1256889301c88c70&zw
   
Monday, October 7, 2013

2014 Mokka Tamil SMS

என்று ஒரு பெண் இரவு 12 மணிக்கு மேல்,சாட்டில் பச்சை லைட்டை எரியவிட்டு 'Hi','How r u','Saptingala?','Thoongalaiya?','Enna pandringa?' என ஆண்கள் தொல்லையின்றி பேஸ்புக்கில் உலவமுடிகிறதோ,அன்று தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம்.

காந்தி சொல்லல நானே கண்டுபிடிச்சேன்

--------------------------------------------------------------------------------------------

நோக்கியா தயாரித்த லூமியா மொபைல்கள் நீண்ட பேசினாலும் சூடாவது இல்லையாம்.எனவே பெண்களுக்கு 'லூமியா' பிடிக்கிறது,

கட்டிய கணவரைப் பெற்ற மாமியா கொஞ்ச நேரம் பேசுனாலும் சூடாகி சண்டை போடுதாம்,எனவே பெண்களுக்கு 'மாமியா' பிடிப்பதில்லை.

நானே ஜிந்திச்சேன்

------------------------------------------------------------------------------------------------------------

Timing SMS in Tamil

இலங்கை சுட்டுக் கொண்டே இருக்கிறது,நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி.

ஆட்சில இருக்கும்போது காசை சுட வேண்டியது,ஆட்சியில இல்லைனா வாய்லையே வடை சுட வேண்டியது,நீங்களும் சுட்டுக் கொண்டே தான் இருக்குறிங்க,நாங்களும் வேடிக்கை தான் பார்க்கிறோம்

----------------------------------------------------------------------------------------------------
அடேய் ஹாலிவூட் டைரக்டர்களா...!

டைட்டனிக் படத்துல கப்பலுக்கு டூப் போட்டு ஆஸ்கர் வாங்கிட்டோம்ன்னு ரொம்ப பீத்திகாதிங்க.

நாங்கெல்லாம் நஸ்ரியா தொப்புளுக்கே டூப் போட்டவிங்க.

பீ கேர்புல்

------------------------------------------------------------------------------------------------------

"கல்யாணம் பண்ணி வைங்க"ன்னு பொண்ணு கேட்டா பொண்ண பெத்த மாமனாரு "போய் வேலை வாங்கிட்டு வா"ன்னு சொல்லுவாரு.

சரி தங்கி வேலை தேடலாம்ன்னு சென்னைல போய் வீடு கேட்டா வீட்டு ஓனரு,"பேச்சுலருக்கு வீடு இல்ல,போய் கல்யாணம் பண்ணிட்டு வா"ன்னு சொல்லுவாரு.

அப்பறம் எப்படி இந்தியா வல்லரசு ஆகும்?

--------------------------------------------------------------------------------------------------------

'நான்' என்ற எண்ணத்துடன் சக மனிதனை நோக்குபவன் வாழ்கையும்,

'ஆண்' என்ற எண்ணத்துடன் பெண்ணினை நோக்குபவன் வாழ்கையும்,

எல்லாம் இருப்பது போலத் தோன்றி ஏதும் இல்லாமல் அழிந்து விடும்...!

-----------------------------------------------------------------------------------------------------
நமீதா அரசியலுக்கு வருகிறார் - செய்தி.

'சதை'ய தெய்வம் 'கவர்ச்சி'த்தலைவி வாழ்க...!

--------------------------------------------------------------------------------------------------
கன்னியாஸ்திரியாக நயன்தாரா முடிவு-செய்தி.

சிம்பு 'லூசுப் பெண்ணே'ன்னு ஆரமிச்ச போதே எனக்கு தெரியும் இது 'ஏசுப் பெண்ணே'ன்னு தான் முடியும்ன்னு

----------------------------------------------------------------------------------------------------------

நாளையை நினைத்து கவலைப்படாதீர்கள்...!
.
.
.
.
.
.
ஏன்'னா நாளைக்கு சனிக்கிழமை லீவு
நாளைக்கழிச்சும் லீவு
திங்கக்கிழமைய நினச்சா தான் கவலையா இருக்கு

------------------------------------------------------------------------------------------------------
என்னதான் சூரியகாந்தி பூ சூரியனை திரும்பி திரும்பி சைட் அடிச்சாலும்,அதனால் சூரியனுடன் சேர்ந்து வாழ முடியாது.

இதான் வாழ்க்கை...!

------------------------------------------------------------------------------------------------------

Wednesday, September 25, 2013

2013 Tamil SMS

ஒரு ஆணுக்கு திருமணம்
நிச்சயக்கப்படும் போது
இன்பாக்ஸல் உள்ள மெசேஜ எல்லாம்
டெலிட் செய்கிறான்.....
ஒரு பெண்ணுக்கு
திருமணம் நிச்சயிக்கப்படும் போது
"சிம்"
கார்டையே மாற்றி விடுகிறாள்.....!!!

Friday, August 30, 2013

Life SMS in tamil

மாசக்கடைசி ஒரு ஒத்த ரூபாய் காயின் தான் மிச்சம் இருக்கு,டாஸ் போடப்போறேன்.

பூ விழுந்தா பூப்பாதை,எதாவது பூ போன்ற பொண்ணுட்ட கடன் கேக்குறோம்,

சிங்கம் விழுந்தா சிங்கப்பாதை சிங்கம் மாதிரி இருக்கா ஆம்பளைட்டா கடன் கேக்குறோம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

#நல்ல நண்பர்களால் காதலராக மாற முடியும்,அவ்வாறு மாறிய காதலர்களால் மீண்டும் நல்ல நண்பர்களாக மாற முடியாது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பனிடம் 'காஞ்சூரிங்கு' செம பேய் படம்டா'ன்னு சொன்னா,

"நம்ம 'காஞ்சனா'வை விடவா பெரிய பேய்ப்படம்?"ன்னு கேக்குறான்.

திருத்த முடியாதுடா,திருத்தவே முடியாது 

-----------------------------------------------------------------------------------------

Tuesday, August 20, 2013

Raksha Bandhan SMS in Tamil

பேக் ஐடி எல்லாம் சாட்ல வந்து 'அண்ணா ரக்சா பந்தன் வாழ்த்துகள்'ன்னு சொன்னா சப்புன்னு அறைஞ்சுடுவேன்.

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு 

--------------------------------------------------------------------------------------------------------

ராக்கி கட்டிட்டா 'ராக்கி சவந்த்'தா இருந்தாலும் தங்கச்சி தானாம் 

---------------------------------------------------------------------------------------

ராக்கி பண்டிகையின் போது தமிழனாய் இரு

-புறக்கணித்து விடு.
.
.
ஹோலி பண்டிகையின் போது இந்தியனாய் இரு
-புடிச்சு கலர்பொடியை அப்பி விடு.

ஜெய் ஹிந்த் 

-------------------------------------------------------------------------------------

நான் தாலிகயிறு போட்டோ போட்டு உன்னை டேக் பண்ணி பொண்டாட்டின்னு சொன்னா ஒத்துக்குவியா?

அப்பறம் என்ன தைரியத்துல ராக்கி கயிறு போட்டோ போட்டு என்னை டேக் பண்ணி அண்ணான்னு சொல்றா?

போத்தா போ காமெடி பண்ணாம 

----------------------------------------------------------------------------------------------------

Saturday, August 3, 2013

Comedy sms in tamil

எல்லாபிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி ..!

-------------------------------------------------------------------------------------------------------------------------------
சாட்டர்டே னா சரக்கு மட்டும் இல்ல சரக்கு வாங்கித்தராதவன கூட அடிக்கலாம்.....

ஏலேய் ஒழுங்கு மருவாதயா சரக்க வாங்கு; நா சைட் டிஸ்ச வாங்குறேன்.
டீலா.... டீலா (நோ டீலுக்கு இங்க இடம் கிடையாது)

-------------------------------------------------------------------------------------------------------------------------------

லீவு போட்டு தூங்குறவன் மனுசன்....
எவ்ளோ டயர்டா இருந்தாலும் ஆபீசுக்கு போய் தூங்குறவன் பெரிய மனுசன்....

-------------------------------------------------------------------------------------------------------------------------------
அழகான பொண்ணு சிரிச்சிட்டு போனஅடுத்த ரெண்டு செகன்ட்குள்ளபையன் கட்டுறமனக்கோட்டை இருக்கே!ராஜராஜசோழனால கூட கட்ட முடியாது!...-------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, April 25, 2013

Tamil Love SMS (Boopathy Murugesh)

எனக்கு காதல் பாடம் சொல்லி தந்த ஹை பை(Hi-Fi) மேடம் நீ,

உனக்கு தொலைவில் இருந்து சிக்னல் தரும் வை பை(Wi-Fi) மோடம் நான்.

அடடே...!

-----------------------------------------------------------------------------------------------------

நேத்து மீனாட்சி திருக்கல்யாணம்ன்னு சொன்னா,

"சரவணன்-மீனாட்சிலையா? நான் அந்த சீரியல் பார்க்குறது இல்லையே"ன்னு சொல்றவங்க இருக்க வரை நாட்ல மழை வராது.

சத்தியமா வராது :-(

------------------------------------------------------------------------------------------------------------

#பௌர்ணமி அப்டேட்:

வானத்துக்கு அழகு நிலவு,
காதலுக்கு அழகு களவு,
உன் அப்பனுக்கு தெரிஞ்சா எழவு :-(

----------------------------------------------------------------------

அவள் பேஸ்புக்கில் வந்தால் :-)
.
.
.
.
.
இன்று அவளுக்காகவே பேஸ்புக் வருகிறேன் :-(

------------------------------------------------------------------------------------

இயற்கையின் வலிமையை சுனாமி,பூகம்பத்தில் தான் தெரிஞ்சுகனும்ன்னு இல்ல,

மேக் அப்-க்கு ஆயிரக் கணக்குல செலவு பண்ணியும் சில பிகருகள் மொக்கையா தெரியும்,அது தான் இயற்கை.

இயற்கைய மாத்தவும் முடியாது,ஏமாத்தவும் முடியாது ;-)

-------------------------------------------------------------------------------------------------------

மழை பெய்யுதேன்னு சந்தோசமா தான் இருக்கு,இனி 'பராமரிப்பு பணி'ன்னு ரெண்டு நாள் கரண்டை கட் பண்ணுவாங்களே அத நினச்ச தான் பயமா இருக்கு.

மின்சார வாரியம் தன் கடமையை செய்யும் :-)
-------------------------------------------------------------------------------------------------------

Thursday, April 18, 2013

Love SMS in Tamil

#நானும் ஒவ்வொரு புது பிகரை காதலிக்கும்போதும் முருகன் கோவிலுக்கு போய் "முருகா இந்த புள்ளைய கல்யாணம் பண்ணி அடுத்த முறை ஜோடியா உன் கோவிலுக்கு வரணும்"ன்னு வேண்டிட்டு வரேன்.

என்னைக்கு முருகன் காரி துப்ப போறாருன்னு தெரியல,துப்புனாலும் ஓகே கடுப்பாகி வேல விட்டு எறியாம இருந்தா சரி :-(

-------------------------------------------------------------------------------------------------------------சென்னை ஜெயிச்சாலும் சரி,பெங்களூர் ஜெயிச்சாலும் சரி 12 மணிக்கு சரியா கரண்ட் கட் ஆயிடும்.

#தமிழன்டா.

-----------------------------------------------------------------------------------------------------------

சென்னை பிகருகள் எல்லாம் ஐ.பி.எல்-ல புறக்கணிச்சுட்டாங்களா?இல்லை சென்னைல பிகருகளே இல்லையா?

க்ரௌண்டுல அண்ணிய(அதான் தோனி பொண்டாட்டி) தவிர ஒரு பிகர் கூட பார்க்க சகிக்கல.இது என்னடா பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை :-(
---------------------------------------------------------------------------------------------------------

அன்புக்கு நான் அடிமை'ன்னு சொல்றவங்க மனைவி பெயர் பெரும்பாலும் அன்புக்கரசி,அன்புச்செல்வி என்றே இருக்கிறது.

அவதானிப்பு.

-----------------------------------------------------------------------------------------------------

ஸ்டாலின் கட்டிய மேம்பாலங்களால் கொசுதொல்லை அதகரித்துள்ளது-சைதை துரைசாமி.

ஓ அப்படியா,நான் ராமர் கட்டிய பாலத்தால் தானோன்னு நினச்சேன்.

(நீங்க கரண்ட் கொடுத்தா எதுக்கு சார் கொசு கடிக்க போகுது.இந்த உண்மைய சொன்னா நம்மள பைத்தியம்ன்னு சொல்லுவாங்கே)

-----------------------------------------------------------------------------------------------------------

உன்னை எண்ணி பார்கையில் கவிதை கொட்டுது,
அதை எழுதி அனுப்பினால் உங்க அம்மா திட்டுது :-(

----------------------------------------------------------------------------------------------------------

பொம்பளையாச்சேன்னு பார்க்குறேன்" என்று ஒரு ஆண் சொல்வதில் இரக்கம் இல்லை,ஆணாதிக்கமே அதிகம் இருக்கிறது.

"ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம இப்படி பேசுறியே" என்று பெண் கேட்பதிலும் கூட மறைமுகமாக ஆணாதிக்கமே அதிகம் இருக்கிறது.

--------------------------------------------------------------------------------------------------------

போகோ பார்ப்பவர்கள் மட்டுமல்ல,
ஈகோ பார்க்கும் என்னவளும் குழந்தை தான்.

அடடே...!

-----------------------------------------------------------------------------------------

முதல்முறையா பள்ளி காலத்தில் ஒரு பெண்ணை காதலித்தேன்,

நான் லூசாகி விட்டேன்,
அவள் பாசாகி விட்டாள்.

பயபுள்ள என்னை ஸ்கூலில் தவிக்கவிட்டு காலேஜ் போயிட்டா :-(

-----------------------------------------------------------------------------------------------

#வாழ்கையில் முதல் காதல் பிரியும் போது ஒருவித விரக்தியும்,சோகமும் ஏற்படும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அப்பறம் அதுவே பழகிரும் ;-)

----------------------------------------------------------------------------------------------------------

அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே,
.
.
அண்ணா என்றழைக்கின்ற பிகர் தொல்லையே :-(

-----------------------------------------------------------------------------------------------------

இப்போ ஒரு மெஸ்சேஜ் வந்துருக்கு.

Dear subscriber,you have been subscibed to bollywood gossips on Rs.30 per month.
.
.
.
.
.
நைட்டு 12 மணிக்கு நாங்க எதுக்குடா சுடுகாட்டுக்கு போகப்போறோம்? :-(

---------------------------------------------------------------------------------------------------
காதல் ஐஸ்கிரீம் மாதிரி ரொம்ப உருகிட்டா டேஸ்ட் போய்டும் :-(

-------------------------------------------------------------------------------------------------

காதலில் உங்களை மட்டும் எண்ணாமல் உங்களை சுற்றி இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு காதலியுங்கள்,

வாழ்கையில் உங்களை சுற்றி இருப்பவர்களை நம்பாமல் உங்களை மட்டும் கருத்தில் கொண்டு முயற்சி செய்யுங்கள்.

இனி காதலிலும் சரி,வாழ்க்கையிலும் சரி ஏமாற்றமும் இல்லை,ஏப்ரல் ஃபூலும் இல்லை.

------------------------------------------------------------------------------------------------------------

இர‌வில் உற‌ங்கும் முன்
உன் பெய‌ரை ஒரு முறை சொல்லிவிட்டு தான் உற‌ங்குகிறேன்.
உறங்கிய‌வ‌ன் உற‌ங்கியே விட்டால்
க‌டைசியாய் உச்சரித‌து உன் பெய‌ர் ஆக‌ வேண்டும் என்று.

----------------------------------------------------------------------------------------------------
Tamil Mokka SMS 2013 (Boopathy Murugesh)

உலகில் உள்ள மொத்த ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் இருப்பதாக உலக வங்கி கூறியுள்ளது.

இதுக்கு சுவிஸ் வங்கி என்ன சொல்லுது?

--------------------------------------------------------------------------------------------------------

தாண்டவம் படத்தில் வர மாதிரி கல்யாணத்துக்கு பிறகு,பேசணுமாம்,பழகணுமாம்,காதலிக்கனுமாம் அப்பறம் தான் எல்லாமாம்.

நீ வேணா அனுஷ்காவா இருக்கலாம்,நான் விக்ரம் இல்ல....எஸ்.ஜே.சூர்யா :-P

---------------------------------------------------------------------------------------------------------

கொங்கு தனி மாநிலத்தை உருவாக்குவோம் - பெஸ்ட்ராமசாமி.

தனி நாடா உருவாக்குங்க,நானும் (கோயம்புத்தூர்)வெளிநாட்டில் வேலை பார்க்குறேன்னு பரமக்குடில பொண்ணாவது தருவாங்கே :-P

-------------------------------------------------------------------------------------------------------

நான் இங்கிலீசில் கொஞ்சம் வீக்கு,எழுத்து கூட்டி வாசிக்க லேட் ஆகத் தான் செய்யும்.

உனக்கு கஷ்டமா இருந்தா நீ தமிழ் வார்த்தைகள் உள்ள டீசர்ட் போடு.
-----------------------------------------------------------------------------------------------------

காங்கிரசுக்கு ஆதரவளிக்க தயார் - டி.ராஜேந்தர்.

அப்போ நரேந்திர மோடி வாழ்க்கை :-(
---------------------------------------------------------------------------------

ஒலிம்பிக்ல 'துப்பாக்கி சுடுதலை' எடுத்துட்டு 'தோசை சுடுதல்' வச்சா இந்திய பெண்கள் அணி பதக்கத்தை அல்லும்.

தொடர்ந்து ஒருவாரமா தோசை...தொட்டதுக்கெல்லாம் தோசையா :-(

-------------------------------------------------------------------------------------------------------

இன்பாக்ஸில் 'பியுட்டி' இருக்கலாம்,
பேஸ்புக்கே 'ட்யூட்டி'யா இருக்க கூடாது :-)

நிஜ வாழ்க்கைக்கு கொஞ்சம் அதிகமாக மெனெக்கெடனும்,குறிப்பா நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------

கோவிலில் அழகான ஆண்டி தனியா நின்னா கொஞ்சம் பொறுமையா தேடுங்க,அவங்க பொண்ணும் பக்கத்தில் தான் எங்கயாவது தான் நிக்கும்.

கிடைக்கலைனா விட்ருங்க,ரொம்ப நேரம் தேடதிங்க அவங்க புருசனும் அங்க தான் நிப்பாரு.

------------------------------------------------------------------------------------------------------------

I Miss you'ன்னு சொன்னா.

I Mrs you'ன்னு ரிப்ளே அனுப்பிட்டேன்.

கான்பிடண்ட் பாஸ் கான்பிடண்ட் :-)

-------------------------------------------------------------------------------------------------

கெயில் நிறுவனம் யார் பேச்சையும் கேட்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது- கருணாநிதி

கேப்டன் வீரட் கோலி பேச்சை கூட கேக்கலையா தலைவா,வெஸ்ட்இண்டிஸ்க்கே திரும்ப அனுப்பி விடனும் அவனை :-
------------------------------------------------------------------------------------------------------

அறிவை அழிக்கும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தாதீர்கள் - இஸ்ரோ விஞ்ஞானி வேண்டுகோள்.

இனி ராக்கெட் விட பீர் பாட்டில் கேட்டு வீட்டு பக்கம் வா...அப்போ இருக்கு உனக்கு.

---------------------------------------------------------------------------------------------------

பேஸ்புக்ல டாக் (Tag) பண்ணி லைக் வாங்குனவன விட திட்டு வாங்குனவன் தான் அதிகம்.

உங்களுகெல்லாம் வேற வேலையே இல்லையா.

-------------------------------------------------------------------------------------------

ஐ.பி.எல்'ல 'சியர் லீடரை' பார்க்கும்போது என் நான்காம் வகுப்பு 'கிளாஸ் லீடர்' சரண்யா தான் நியாபகம் வருது.

அந்த பொண்ணும் இப்படி தான் செம ஆட்டம்,பேசுனேன்னு என் பெயரை எழுதி அடிவாங்கி கொடுக்கும் :-(

-----------------------------------------------------------------------------------------------------------

ஒரு அட்டை 'கத்தி'யாகலாம்,அத்தை 'சித்தி'யாக முடியாது.

நெவெர்...நான் உனக்கு அண்ணனும் இல்ல,நீ எனக்கு தங்கச்சியும் இல்ல.

---------------------------------------------------------------------------------------------------------

கல்லூரி காதலில் பசங்க தான் மாஞ்சு மாஞ்சு லவ் லெட்டர் எழுதுவாங்க,பொண்ணுங்க அதிகபட்சமா ரெக்கார்ட் நோட் மட்டும் தான் எழுதி தருவாங்க.

அவதானிப்பு :-)

-----------------------------------------------------------------------------------------------------------

அமெரிக்காவில் குண்டுவெடிப்பு - கத்தாரில் பூகம்பம்.

உலகை யார் முதலில் அழிக்கிறோம் என்பதில் மனிதனுக்கும் இயற்கைக்கும் போட்டி :-(

----------------------------------------------------------------------------------------------------------

எதற்கும் அடிமையாகி விடாதீர்கள்.

முக்கியமாக அன்பிற்கு.

------------------------------------------------------------------------------------------------------

ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்கும் அபாயம்? - செய்தி.

தோனிக்கு முன்னாடி இவிங்க ஹெலிக்காப்டர் ஷாட் அடிச்சுருவாங்கே போல :-(

------------------------------------------------------------------------------------------------------

அதிமுகவில் கட்சி நிர்வாகிகள் கருத்தை கூற முடியுமா? -மு.க.ஸ்டாலின்.

தல வாக்கிங் போன நம்ம ஆளுங்க ரெண்டு பேரை காணோம் தல.
-----------------------------------------------------------------------------------------------------

கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கொடியேற்றும் காலம் வரும் - திருமாவளவன்.

ஆமா மழைகாலம் வந்தா கோட்டைகுள்ள கொடி கட்டுங்க துணி காயப்போடலாம் :-P

--------------------------------------------------------------------------------------------------

பேஸ்புக் வெப்சைட்டை டெவெலப் பண்றவன் கூட தொடர்ந்து இந்த பக்கத்தை இவ்வளவு நேரம் பார்த்துட்டு இருக்க மாட்டான்.

திங்கக்கிழமை அதுவுமா தீயா வேலை செய்றிங்க :-)

------------------------------------------------------------------------------------------------

எப்பவும் சண்டை போடும் சக்கை பிகருடன் ஒத்துபோவதை விட,

எப்பவும் பாசமா இருக்கும் ஒரு சப்பை பிகருடன் செத்து போகலாம் :-)

---------------------------------------------------------------------------------------------------

ச்சீ...நீயெல்லாம் அண்ணன்,தம்பி கூட பிறக்கல?
உன் அப்பாவும் ஒரு ஆம்பள தானே...? :-(

---------------------------------------------------------------------------------------------------

இப்போதெல்லாம் பேருந்தில் இரண்டு பயணச்சீட்டு வாங்குகிறேன்,
இதயத்தில் நீயும் இருப்பதனால்.

அடடே...!

---------------------------------------------------------------------------------------------------

நண்பன் சோகமா வந்து சொன்னான்,
"மச்சான் என் ஆளு தொட்டதுக்கு எல்லாம் சண்ட போடுறாடா"
.
.

நான் பொறுமையா கேட்டேன்,
"அது இருக்கட்டும்,நீ எங்கடா தொட்ட?"
.
.

இப்ப என்ன தப்பா கேட்டுட்டேன்?சாயங்காலம் சரக்குக்கு கரெக்ட் பண்ணி வச்சுருந்தேன் பயபுள்ள கோச்சுட்டு போய்ட்டான் :-(
--------------------------------------------------------------------------------------------------------

நீ கெட்டவன்.
நான் மட்டுமா கெட்டவன்,நீயும் தான் கெட்டவன்.

நீ என்ன கிழிச்ச?
நான் கிழிச்சது இருக்கட்டும்,நீ என்ன கிழிச்ச?

பெரும்பாலான பேஸ்புக் அரசியல் சண்டைகள் இவ்வாறே நடக்கின்றன,இப்ப தான் நோட் பண்ணேன் :-)

-------------------------------------------------------------------------------------------------------------

Saturday, March 16, 2013

life sms in tamil (Boopathy Murugesh)

கத்தி குத்து பட்டவன்கூட தூங்கிவிடுவான், ஆனால்
பசியோடு இருப்பவனால் தூங்கமுடியாது !!

-------------------------------------------------------------------------
கூட்டணியில் இருப்பதால்தானே மிரட்ட முடிகிறது:
கருணாநிதி # அதாவது , சுருட்ட முடிகிறது

-----------------------------------------------------------------------------------------------------

#பேச்சு வழக்கில் "நேரம் இருந்தால் பார்க்கலாம்" என்ற சொற்றொடர் நாம் அறிந்ததே,அதே போல புதிதாக இப்பொழுது ஒரு சொற்றொடர் இந்த நூற்றாண்டில் இணைந்துள்ளது.
.
.
.
.
.
.
"கரண்ட் இருந்தா பார்க்கலாம்"

----------------------------------------------------------------------------------------------------

நான்:அன்பே...! ஒரு காதல் கவிதை எழுதி உன்னை டேக் பண்ணவா?

அவள்:வேணாம்.

நான்:ஏன் என்னை பிடிக்கலையா?

அவள்:இல்ல உங்க ப்ரெண்ட்ஸ் அதுல மொக்க கமெண்ட் போட்டு என்னை அசிங்க படுத்துவாங்க.

அப்போ இங்க உள்ள பொண்ணுங்க பயப்படுறது என் காதலுக்கு இல்லை,கமெண்டுகளுக்கு தான்...சிலரை ப்ளாக் பண்ற நேரம் வந்துருச்சு :-)

--------------------------------------------------------------------------------------------------------
#லவ் பண்ற புள்ளைன்னு அது போடுற எல்லா ஸ்டேடஸ்க்கும் லைக் போட கூடாது,ஒரு நாள் கல்யாண போட்டோ போடலாம் அதுக்கும் தெரியாம லைக் போடுற நிலைமை வரும் :-(

----------------------------------------------------------------------------------------------------------

#நீ கீழே விழும்போது தலையில் அடிக்க ஒரு எதிரியின் கை வருகிறது என்றால்,உன்னை தாங்கி பிடிக்க நூறு நண்பர்களின் கைகள் வர வேண்டும்.

அதுவே விழும்வரை நீ வாழ்ந்த வாழ்விற்கான அர்த்தம்.

----------------------------------------------------------------------------------------------------------

உனக்கு லைக்கு போட தெரியாது,
கமெண்ட்டு போட தெரியாது.
டேக்-கு மட்டும் பண்ண தெரியுமோ?

(எங்க இருந்து தாண்டா வரிங்க நீங்க எல்லாம்?)

--------------------------------------------------------------------------------------------------------

#ஒரு அரசியல் ஸ்டேடஸ் போட்டா அதில் கமெண்ட் போடுற 86 பேரில் 76 பேரு 66Aன்னு கமெண்ட் போட்டா நல்லாவா இருக்கு?

தரித்தினியம் பிடிச்ச பக்கிகளா.ஓடிருங்க.

-------------------------------------------------------------------------------------------------------

#தமிழகத்தில் இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் அரசு ஊழியர்கள் மின்சார வாரியத்தினர் மட்டுமே,நைட்டு 12 மணிக்கு ஒருத்தரு அலராம் வச்சு எந்திருச்சு போய் கரண்டை புடுங்கி விட்டுறார்.

இந்தா இப்ப போயிரும் :-(

----------------------------------------------------------------------------------------------

#காலைல பைக் ஸ்டார்ட் ஆகல,ஒரு மூனு கிலோ மீட்டர் உருட்டிட்டு போய் ஒரு மெக்கானிக்ட்ட கொடுத்துட்டு சொன்னேன்,"இப்ப தான்'னே புதுசா சர்விஸ் பண்ண பைக்,என்னனு தெரியல ஸ்டார்ட் ஆகல".

அவரு கொஞ்ச நேரம் சில விசயங்களை செக் பண்ணிட்டு சொன்னாரு,
.
.
.
.
.
.
.
.
.
"தம்பி புதுசா சர்விஸ் பண்ண பைக் இல்ல,புது பைக்'காவே இருந்தாலும் பெட்ரோல் இல்லைனா ஸ்டார்ட் ஆகாதுப்பா"

எண்ணெய் நிறுவனங்கள் ஒழிக,இந்திய அரசு ஒழிக :-(

---------------------------------------------------------------------------------------------------

#சிலர் பகலில் போடும் ஸ்டேடஸ்க்கு எல்லாம் நான் நைட்டு வந்து லைக் போட்டுறேன்,ஆனான் நான் நைட் போடுற ஸ்டேடஸ்க்கு அவங்க பகலில் வந்து லைக் போடுவதில்லை.

நீதி:நல்லவங்க நைட்டில் தான் பேஸ்புக் வாறாங்க.

(24 மணி நேரமும் இருக்கவங்க-அவிங்க ரெம்ப நல்லவிங்க)

-----------------------------------------------------------------------------------------------------

#ட்விட்டரில் என்னைய ஒரு பொண்ணு ரொம்பநாளா பாலோ பண்ணுதுன்னு மெயில் வருது.

ஒருவேள அவ லவ்வை சொல்ல நினைக்கிறாளோ?

இருக்காதா பின்னே,அவளும் பெண் தானே :-)

---------------------------------------------------------------------------------------------------------

#தேமுதிக என்பது ஆலமரம்: பிரேமலதா.

அதான் ஒரே பஞ்சாயத்தா இருக்கா :)

-------------------------------------------------------------------------------------------------

#இத்தாலி சென்ற கொலைகார மாலுமிகள் திரும்ப வர மாட்டார்கள் என அறிவிப்பு.

இப்ப ஏன்யா கத்திகிட்டு இருக்கீங்க?உங்களுக்கு என்ன இத்தாலிகாரங்க தான வேணும்?

எனக்கு தெரிஞ்சு ஒரு இத்தாலி குடும்பம் இருக்கு,ஆனா கொலைகாரர்கள் இல்லை கொள்ளைக்காரர்கள் :P

------------------------------------------------------------------------------------------------------
#நீ பேசுற இங்கிலீஸ்லயே தெரியுது நீ பேக் ஐ.டின்னு,நானா கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுரதுகுள்ள நீயா போயிடு :(

---------------------------------------------------------------------------------------------------------
#ஐஸ்வரியா என்ற அழகான பெயரை ஐஸ் 'வரியா' என்று பிரித்து கூப்பிடுபவன் அய்யோக்கியன்,அத்தகையவர்களை இந்த சமுதாயம் இனம் காண வேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------

எப்பவும் சிடு சிடுன்னு இருக்கனும்ன்னும் அவசியமும் இல்லை,

எப்பவும் சிரிச்சுகிட்டு இருக்கனும்ன்னும் அவசியமும் இல்லை.

இயல்பா இருங்க...இரவு வணக்கம்.

--------------------------------------------------------------------------------------------

செருப்பு பழசா ஆயிடுச்சு,காங்கிரஸ் கொடியோட மாணவர்கள் போராடுற இடத்துக்கு போகப்போறேன்

ஐ ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி :-)

-------------------------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண்.
-வாழ்கையில்.

ஒவ்வொரு ஆணின் தோல்விக்கு பின்னும் ஒரு பெண்.
-காதலில்.

எப்படியோ மகளீர் தின வாழ்த்துக்கள் :-)

---------------------------------------------------------------------------------------------

#ஒரு பொண்ணு "ஹேப்பி"ன்னு மட்டும் தான் ஸ்டேடஸ் போட்டுச்சு,அதுக்கு 40 பேரு லைக் போட்டு "ஹேப்பி தீபாவளி"ன்னு கமென்ட் போட்டு முடிச்சு வைக்கிறாங்கே.

நல்லா வருவிங்க தம்பிகளா...!

-----------------------------------------------------------------------------------------------------------

Monday, January 14, 2013

2013 Mokka sms

#தமிழன் காசு வந்தால் 'ஜோஸ் ஆலுக்கா'சில் நகை வாங்குறான்,கஷ்டம் வந்தால் அதை 'முத்தூட் பைனான்'சில் அடகு வைக்கிறான்.

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ;-)

(குறிப்பு:மேற்சொன்ன இரண்டு நிறுவனமும் தமிழன் உடையது இல்லை)

---------------------------------------------------------------------------------------------------------

பொய்யான காதல் கோவிலுக்கு வெளிய ஒரு கலட்டி போட்ட ஷூ, சேருபவன் எடுத்து மாட்டிட்டு போவான்.

ஆனா உண்மையான காதல் கிழிஞ்ச சாக்ஸ் மாதிரி,
எவனும் எடுக்கவும் மாட்டான்,நாமளும் மாத்த மாட்டோம்.

----------------------------------------------------------------------------------------------------

சரி எத்தனை நாள் தான் சாட்ல மொக்கையே போடுறது,பெண் விடுதலை பத்தி பேசலாம்ன்னு ஒரு பொண்ணுட்ட 'அருந்ததி ராய் தெரியுமா?'ன்னு கேட்டேன்.

'தெரியுமே!!!அனுஷ்காவை தான சொல்றிங்க?'ன்னு சொல்லுது.

(வேணாம்,நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்?வழக்கம் போல மொக்கையே போடலாம்)
---------------------------------------------------------------------------------------------------------

காதல் என்னும் குற்றம் செய்து,உன் மனமென்னும் நீதிமன்றத்தில் முறையீடு செய்தேன்,

விடுதலை தந்து என்னை விட்டு விடாதே,ஜாமீன் மட்டும் தந்து உன் அரவணைப்பிலே வைத்துக்கொள்.
----------------------------------------------------------------------------------------------------------

இந்தியா டீம் ஜெயிக்கலைன்னா பிட்சை குறை சொல்றது மாதிரி,
இவருக்கு பிகரு செட் ஆகலைனா நம்மை குறை சொல்றது.

இதெல்லாம் கேக்கணும்ன்னு,காட் ரோட்டு இன் மை ஹெட்டு :-(

--------------------------------------------------------------------------------------------------

To all Mummies ...!!

ஹார்லிக்ஸ் பாட்டிலில்
சீனியை கொட்டி வைங்க,வேணாம்ன்னு சொல்லல,தயவு செஞ்சு பூஸ்ட்
பாட்டிலில் மிளகாய்
பொடியை கொட்டி வைக்க வேணாம்.

கலர் வித்தியாசம் தெரியாமல்
பூஸ்ட்ன்னு நினச்சு ஒரு ஸ்பூன்
எடுத்து வாய்ல போட்டேன்..

ஐயோ போச்சே .. :(

--------------------------------------------------------------------------------------------------

Girls Reaction after seeing Power Star in
Kanna Ladu Thinga Asaiya
.
.
.
.
.
Kattina Iwana than kattanum....! :P

---------------------------------------------------------------------------

படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன
செய்யணும்...?"" படிப்புதான் வரல,
தூக்கமாவது வருதேன்னு தூங்கிடணும்!

---------------------------------------------------------------------

ஒரு பொண்ணு சாட்டில்:டிமிட்ரி மதுரையா?சென்னையா?

நான்:ஹெலோ என்னமோ நீங்க பெயர் வச்ச மாதிரி கூப்பிடுரிங்க?வயசுல மூத்தவங்களை மரியாதையா கூப்பிட்டு பழகுங்க.

அந்த பெண்:சாரி!!!டிமிட்ரி அண்ணன் மதுரையா?சென்னையா?

பொங்கலோ பொங்கல் ;-)

----------------------------------------------------------------------------------------------------

பேஸ்புக்கால் புரட்சி ஏற்படுமா?

வேலை வெட்டிக்கு போகாம இப்படியே உக்காந்து பேசிட்டு இருந்தோம் புரட்சி ஏற்படாது,வறட்சி தான் ஏற்படும்.

------------------------------------------------------------------------------------------------------------

டூ:மை மம்மி.

ஹார்லிக்ஸ் பாட்டிலில் சீனியை கொட்டி வைங்க,வேணாம்ன்னு சொல்லல,தயவு செஞ்சு பூஸ்ட் பாட்டிலில் மிளகாய் பொடியை கொட்டி வைக்க வேணாம்.

கலர் வித்தியாசம் தெரியாமல் பூஸ்ட்ன்னு நினச்சு ஒரு ஸ்பூன் எடுத்து வாய்ல போட்டேன்.ஐயோ போச்சே :(

----------------------------------------------------------------------------------------------------------Real Jokes

#நான் எல்லாம் ஒரு காலத்தில் மஞ்சுவிரட்டில் சாம்பியன்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆறாவதுல இருந்து எட்டாவது வரை மஞ்சுளாவை விரட்டி விரட்டி காதலிச்சேன்.

'மஞ்சு'விரட்டு ;-)

------------------------------------------------------------------------------------------------------

#பேஸ்புக்கால் புரட்சி ஏற்படுமா?

வேலை வெட்டிக்கு போகாம இப்படியே உக்காந்து பேசிட்டு இருந்தோம் புரட்சி ஏற்படாது,வறட்சி தான் ஏற்படும்.

------------------------------------------------------------------------------------------------------------

சுடு தண்ணி வைக்க தெரியாத பெண்களிடம் பொங்கல் பற்றி விசாரிப்பதும் குடிபோதையில் இருப்பவனை சபரிமலைக்கு மாலை போட சொல்வதும் ஒன்றுதான்
பாவம் அந்த பச்சை புல்லைக்கு என்னையா தெரியும் ??

---------------------------------------------------------------------------------------------------------

#டூ:மை மம்மி.

ஹார்லிக்ஸ் பாட்டிலில் சீனியை கொட்டி வைங்க,வேணாம்ன்னு சொல்லல,தயவு செஞ்சு பூஸ்ட் பாட்டிலில் மிளகாய் பொடியை கொட்டி வைக்க வேணாம்.

கலர் வித்தியாசம் தெரியாமல் பூஸ்ட்ன்னு நினச்சு ஒரு ஸ்பூன் எடுத்து வாய்ல போட்டேன்.ஐயோ போச்சே :(

------------------------------------------------------------------------------------------------------------

எம்.ஜி.ஆர்-சிவாஜி
ரஜினி-கமல்
அஜித்-விஜய்

இதெல்லாம் போய்,பவர் ஸ்டாரா?-ராக் ஸ்டாரா?ன்னு சண்டை போடுற நிலைமை வரும்ன்னு நான் கனவில் கூட நினைக்கல.

மாயா இன்னும் உலகத்தை அழிக்கலை ஏயா?
-----------------------------------------------------------------------------------------------------

#இந்த நிஜ வாழ்கையில் கல்யாணம் பண்ணனும்னா என்ன ஜாதி?என்ன மதம்?என்ன படிச்சா?எங்க வேலை பார்க்குற?எவ்வளவு சம்பளம்?அது இதுன்னு மனுசன கொல்லாம கொல்றாங்க :-(

சினிமாவை எல்லாம் பாருங்க ஊர்ல ஒரு வில்லன் இருப்பான்,அவனை கொன்னோன அல்லது ஜெயிலுக்கு அனுப்புனோன ஹீரோயினை ஹீரோக்கு கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க :-)

தமிழ் சினிமா ராக்ஸ்.
-----------------------------------------------------------------------------------------------------------