Tamil Cut Jokes


ஆசிரியை - டேய் நான் இங்க நாய் மாதிரி கத்திட்டிருக்கேன். அங்க லாஸ்ட் பென்ச்ல எங்கடா ஒருத்தனை காணோம்...

லாஸ்ட் பென்ச் மாணவர்களில் ஒருவர் - உங்களுக்குப் பிஸ்கட் வாங்கிட்டு வரப் போயிருக்கான் மிஸ்...

---------------------------------------------------------------------------------------------------------

குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம்....

அதுக்காக உடனே என்னைய சிரிக்க சொல்லி தொல்லை செய்ய கூடாது.
சரியா....? :P LOL

------------------------------------------------------------------------------------------------------




குடிய ஒழிக்குறது எல்லாம் அப்புறம் இருக்கட்டும்

குடிக்காமலே அடுத்தவன் குடிய கெடுக்கற

பயபுள்ளைகள மொதல்ல ஒழிங்க.....

- Tamil Kudimagan.SSLC

-----------------------------------------------------------------------------------


பத்தாயிரம் ரூவாய பறிகொடுத்தாலும் பதறாத பாழும்மனசு

பத்து வரி ஸ்டேட்டஸ களவாண்டுட்டா

'சங்கி..மங்கி..அடங்கோ...'னு கெடந்து கதறுது....

Tamil Kudimagan.SSLC

---------------------------------------------------------------------------------------
சச்சினின் ஓய்வுக்கு பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் ஒருநாள் போட்டி,சச்சின் இல்லாத இந்திய அணியைப் பார்த்து வானம் அழுதது,சென்னை நனைந்தது.

--------------------------------------------------------------------------------------------


நாட்டில் எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரிடம் போனால் கவலை எல்லாம் போய் விடுகிறது - ரஞ்சிதா

#இந்த ரணகலத்துளையும் எங்கேயோ உக்காந்து "மிச்சர்" சாப்பிட்டுகிட்டு இருக்காரே ,உங்க கணவர்,அவருக்கு முதல கோவில் கட்டி கும்பிடனும் :)

- Unmaya Sonnen

--------------------------------------------------------------------------------------------------


நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்...!

1.வரிசை விதி-

நீங்கள் நிற்கும் வரிசையை மாற்றினால் நீங்கள் விட்டுச் சென்ற வரிசை நீங்கள் இப்போது நிற்கும் வரிசையை விட வேகமாக நகரும்.

2.தொலைபேசி விதி

நீங்கள் தற்செயலாக பிழையான இலக்கத்தைச் சுழற்றினால் ஒரு போதும் அந்த இலக்கம் வேறு அழைப்பில் இருக்காது. உடனடியாகவே உங்களுக்கு இணைப்புக் கிடைத்துவிடும்.

3.இயந்திர பழுதுபார்ப்பு விதி-

உங்கள் கைகள் முழுவதும் கிறீஸ் பட்ட பின்னர் உங்கள் முதுகு அரிக்கத் தொடங்கும்.

4.தொழிற்சாலை விதி-

நீங்கள் தவறவிட்ட எந்தவொரு திருத்தும் கருவியும் எப்போதுமே எடுக்க முடியாத ஒரு இடத்தில் உருண்டு சென்று தஞ்சமடைந்திருக்¬கும்.

5.பொய்க்காரண விதி-

நீங்கள் வேலைக்கு பிந்தி வந்ததற்கு காரணம் உங்கள் வாகன டயர் ஒட்டையானது என நீங்கள் உங்கள் முதலாளியிடம் சொல்வீர்களாயின ¬் அடுத்த நாள் உண்மையாகவே உங்கள் டயர் ஓட்டையாகும்.

6.குளிப்பு விதி-

நீங்கள் குளிக்கத் தொடங்கி உங்கள் உடல் முழுவதும் நீரால் நனைந்த பின்னர் உங்கள் தொலைபேசி சிணுங்கும்.

7.சந்திப்பு விதி-

உங்களுக்கு தெரிந்தஒருவரை சந்திப்பதற்கான நிகழ்தகவானது அந்த நபர் உங்களை யாரொடு சேர்த்து காணக் கூடாது என நினைக்கிறீர்களோ அவரோடு இருக்கும் போது அதிகம்.

8.வெளிப்படுத்து ¬ ¬கை விதி-

ஒரு இயந்திரம் தொழிற்படவில்லை ¬¬ என ஒருவருக்கு நிரூபிக்க முற்படுகையில் அந்த இயந்திரம் தொழிற்பட ஆரம்பிக்கும்.

9.திரையரங்க விதி-

நீங்கள் திரையரங்கில் வாசல் ஓரத்தில் அமர்ந்திருக்கைய ¬ில் உங்கள் வரிசையில் கடைசியாக ஓரத்தில் இருப்பவர்கள் அனைவரும்படம் ஆரம்பித்து நீங்கள் இரசிக்க ஆரம்பித்த பின்னரே வருவார்கள்.

10.காஃப்பி விதி-

உங்கள் அலுவலகத்தில் சூடான கோப்பி ஒன்றை பருக அமரும் தருணத்தில் தான் உங்கள் முதலாளி உங்களை அழைத்து பெரிய வேலையொன்றை தருவார். காஃப்பி சூடாறி குளிரும் வரையாவது அந்த வேலை கட்டாயம் நீடிக்கும்.

-----------------------------------------------------------------------------------------------------------

பேஸ்புக்கில் உள்ள நன்பர்கள்
மூன்று வகை....

1) பேஸ்புக்க ஒபன் பன்ன
உடனே கன்னுல படுற
எல்லா ஸ்டேட்டஸ்க்கும்
லைக்கு போடுறது முதல் வகை.
..
2)படிச்சுட்டு நல்லா இருந்தா மட்டும்
லைக் போடுறது ரெண்டாவது வகை..

3)படிச்சுட்டு நல்லா இருந்தாலும்
உள்ளுக்குல்லையே
சிரிச்சிட்டு ஒன்னுமே போடாம
போறது தான்.

அந்த மூனாவது வகை.......
கொய்யால நீங்க
உள்ளுகுள்ளையே சிரிச்சா எப்படி தான் தெரியும் பதிவு போடுரவனுக்கு.

---------------------------------------------------------------------------------------------------------


சிந்திக்க வேண்டிய விடயம்...!

1. ஒரு ஏக்கர் கரும்பு போட்டா - 6,000 ரூபாய்.
2.ஒரு ஏக்கர் வாழை போட்டா - 9,000 ரூபாய்.
3.ஒரு ஏக்கர் நெல் போட்டா - 15,000 ரூபாய்.
4.ஒரு ஏக்கர் பிளாட்டா (PLOTS) போட்டா - 1.6 கோடி ரூபாய்

நானும் நீயும் படித்து விட்டதால் இதில் உள்ள நான்காம் திட்டத்தை தேர்ந்து எடுத்து, கணக்கு போட்டு பட்டா (patta) போடுவோம்...

அவன் படிக்காததாலோ என்னவோ அதில் தன் வியர்வையை போட்டு நமக்கு சோறு போடுகிறான்.

அங்கீகரிக்கப் பட்ட தகவலின் படி வருடத்திற்கு 17500 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு.

சோறு போடும் விவசாயியை அங்கீகரிக்காத சமூகம், அழிவை நோக்கி செல்வது உறுதி.

டாலருக்காக அடகு வைக்கப் படும் படிப்பும் அறிவும், என்றுமே இவன் வியர்வைக்கு முன் மண்டி இடும்...!

-------------------------------------------------------------------------------------------------------