Saturday, May 23, 2015

Exam result sms

பரீட்சையில முதல்ல வரவன் மனுசன்...
பரீட்சை ஹாலை விட்டு முதல்ல எந்திரிச்சு வரவன் பெரிய மனுசன்...
----------------------------------------------------------------------------------------------------------
எப்பவும் ஒருத்தன்,ரெண்டு பேர் தான் முதல் ரேங்க் வருவான்..
இந்த தடவை 'விஜய் அவார்ட்ஸ்' ஜூரிஸ் பேப்பர் திருத்துனாங்களா?
பரீட்சை எழுதுன எல்லாருக்கும் அவார்டு கொடுத்துருக்காங்க.
---------------------------------------------------------------------------------------------------------
10வது ரிசல்ட் பார்த்துட்டு எங்க அப்பாட்ட,"மார்க் குறைவா வந்துருக்கு, ரீவேலியூசன் போடனும் காசு தாங்க"ன்னு கேட்டேன்..
"எவனோ நல்லவன் கையில் பேப்பர் போனதால இந்த மார்க்கு,ரீவேலியூசன் போட்டு வேறவன் திருத்துனா இந்த மார்க்கும் போய்டும் மூடிட்டு இரு"ன்னு சொன்னாரு.
பட் அவரு சொன்னதுல ஒரு நியாயம் இருந்துச்சு...
--------------------------------------------------------------------------------------------------------------------------
'மே' மாசம் வர ரிசல்ட்ல பொண்னுங்க ஜெயிப்பாங்க...பசங்க கணக்குல சொதப்புவாங்க...
12வது ரிசல்ட் - பொண்ணுங்க முதலிடம், நெறையா பசங்களுக்கு கணக்குல போச்சு.
10வது ரிசல்ட் - பொண்ணுங்க முதலிடம், நெறையா பசங்களுக்கு கணக்குல போச்சு.
பெங்களூர் வழக்கு ரிசல்ட் - அம்மா விடுதலை,குமாரசாமிக்கு கணக்குல போச்சு...
---------------------------------------------------------------------------------------------------------------------

Friday, May 15, 2015

Exam SMS in tamil

பக்கத்து வீட்டு பொண்ணு 1080 மார்க். அவங்கம்மா எங்கம்மாட்ட "உங்க பையன் +2ல எவ்ளோ மார்க்?"ன்னு கேட்டு அவமானபடுத்திடாங்க...

எப்படியாவது பழிவாங்கனும்ன்னு யோசிச்சுட்டு இருக்கும்போது

 அந்த பொண்ணு அப்பா ஒரு ஆண்ராய்டு போன் பரிசா கொடுத்துருக்கார்ன்னு கேள்விப்பட்டேன்.

இனி நாம என்னத்த பழிவாங்க,அதுவே நாசமா போய்டும்

Tuesday, March 31, 2015

tamil Mind Voice sms

பெற்றோர் திட்டியதால் கிணற்றில் குதித்த மாணவி - செய்தி
அப்படி பார்த்தா நாங்கல்லாம் கடல்ல தான் குதிக்கணும்.

--------------------------------------------------------------------------


இந்தியா தோற்றுவிட்ட கிரிக்கெட் போட்டியின் ஹைலைட்ஸ் பார்க்கும்போது,
கழட்டிவிட்ட காதலியை கணவனுடன் பார்ப்பது போன்ற ஒரு பீலிங்..

Saturday, February 28, 2015

Funny Jokes in tamil

பசங்க எந்த பொண்ண கல்யாணம் கட்டப்றோமோன்னு அதிகம் யோசிக்கிறாங்க,
பொண்ணுங்க எந்த புடவைய கல்யாணத்துக்கு கட்டப்றோமோன்னு தான் அதிகம் யோசிக்கிறாங்க...
-----------------------------------------------------------------------------------------------------------------
காங்கிரஸ் ஆட்சியில் குஷ்பு அமைச்சராவது உறுதி - இளங்கோவன்.
கேக்குறவன் கேனையன்னா 'தோனிக்கு சொந்த ஊரு தேனி'ன்னு சொல்லுவாங்களாம்...

-----------------------------------------------------------------------------------------------------------

தமிழகதிற்கு புதிய ரயில் இல்லை - விஜயகாந்த் அதிருப்தி.
அட்லீஸ்ட் ஒரு சரக்கு ரயிலாவது விட்ருக்கலாம்லயா...

------------------------------------------------------------------------------------------------

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை சிறையில் வைத்து கொலை செய்ய முயற்சி : செய்தி.
ஜெயிலுக்குள்ள கைதிகள்ட்ட "நான்லாம் பௌலிங் போட்டா டீவில்லியர்ஸே சும்மா நடுங்குவான்"ன்னு பொய் சொல்லி ஏமாத்திருக்கான்..ராஸ்கல்..

--------------------------------------------------------------------------------------------------------------------------
Thursday, January 29, 2015

2015 latest Tamil SMS

'என்னை அறிந்தால்' திரைப்படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் : செய்தி.
மைக் 1,மைக் 2,மைக் 3,மைக் 4 பாம் எங்கடா வச்சிங்க?


-------------------------------------------------------------------------------------------------------------இந்த ஹிந்திக்காரனுங்க நம்ம ஊர்ல வந்து அடகுக்கடை வைக்கிறானுங்க,அணு உலை வைக்கிறானுங்க...எக்ஸ்ட்ரா ஒரு பானிப்பூரி கேட்டா வைக்க மாட்றானுங்க...
விழித்துக்கொள் தமிழா

---------------------------------------------------------------------------------------------------------


என் தாலியை யாருக்கும் காட்ட முடியாது - குஷ்பு
பாவம் அடகுல இருக்கும்போல

-----------------------------------------------------------------------

வீடு கொடுங்கன்னு கேட்டா "பேச்சுலருக்கு தர மாட்டோம்"ன்னு சொல்றாங்க.அப்ப முதல்ல பொண்ண கொடுங்கன்னு கேட்டா அடிக்க வாராங்க...
என்ன வாழ்கைடா...?

---------------------------------------------------------------------------------------------------------
 அமெரிக்க மாப்பிளைகள் கடைசி நேரத்தில் என்ட்ரி ஆகி நாங்க காதலித்த பெண்களை கட்டிட்டு போகாமல் தடுக்கும் புதிய ஒப்பந்தத்திலும் ஒபாமா - மோடி கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்...

Wednesday, August 27, 2014

latest sms for girlfriend

சாட் பண்ற பொண்ணு நம்மை கட்டிக்குவான்னு நம்பி காதலில் குதிக்கிறதும்,
சக்திமான் நம்மள காப்பாத்துவாருன்னு நம்பி மாடியிலிருந்து குதிக்கிறதும் ஒன்னு தான்...
சாவு உறுதி...
---------------------------------------------------------------------------------------------------------------
"வாட்ஸ் அப்?" என்று கேட்டதும்,நலம் விசாரிக்கிறோம் என்று பதில் சொல்பவள் சாதா பிகர்.
"வாட்ஸ் அப்?" என்று கேட்டதும் வாட்ஸ் அப் போன் நம்பர் தருபவளே மாடர்ன் பிகர்...
 -------------------------------------------------------------------------------------------------------


நான் : சரி இப்ப நான் உன்னைய லவ் பண்றேன்னு சொன்னா என்ன செய்வ?
அவள் : உன் மூஞ்சிக்கு நான் கேக்குதா?உன்னைய கொன்னுருவேன்...ஹாஹாஹா...
நான் :
அவள் : சரி உன்னைய நான் லவ் பண்ண முடியாதுன்னு சொன்னா என்ன செய்வ?
நான் : இந்த மூஞ்சிக்கே என்னைய பிடிக்கலையே..நானே போய் செத்துருவேன்...ஹாஹாஹா...
அவள் :
(பழிவாங்குதல் பரமசந்தோசம்
 
-------------------------------------------------------------------------------------------------------------
 திருவிழாவில் வாளியில மஞ்ச தண்ணி எடுத்து அத்த மக ஐஸ்வரியா மேல அவ அப்பனுக்கு தெரியாம ஊத்துறது தான் உண்மையான "ஐஸ் பக்கெட் சேலஞ்ச்"...
----------------------------------------------------------------------------------------------------------------

சாட்டில் ஒரு பெண் : "சார் உங்கள பார்த்தா ரவுடி மாதிரி இருக்கு"
நான் : .... (அமைதி)
அந்த பெண் : "ரிப்ளே பண்ண மாட்ரிங்க..சாரி சார், கோவிச்சுகிட்டிங்களா"
நான் : அட அதெல்லாம் இல்லமா,நீயாவது என்னைய ரவுடின்னு நம்புனியே,அதான் ஆனந்த கண்ணீர்
----------------------------------------------------------------------------------------------------------------
 
 

Sunday, August 10, 2014

Break Up SMS

ஒரு பொண்ணோட துப்பட்டா அவ பைக் சக்கரத்தில் சிக்குவது போல இருந்ததால் கூப்பிட்டு சொன்னேன்...கண்டுக்காம திமிரா போறா.

அப்பவே முடிவு பண்ணிட்டேன் கல்யாணம் பண்ணா அவளைத் தான் கல்யாணம் பண்றதுன்னு.

ஆமா அவங்க நல்லதுக்கே சொன்னாலும் நீ என்ன சொல்றதுன்னு கண்டுக்காம திமிரா போனா தான பொண்டாட்டிக்கு அழகு .

-----------------------------------------------------------------------------------------------------------
 என் கூட படிச்ச பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் பண்ணி குழந்தை போட்டோவ பேஸ்புக்ல போட்டுட்டு இருக்குதுங்க... நான் உக்காந்து அதுக்கும் லைக் மட்டும் போட்டுட்டு இருக்கேன்...

லைக் போட்டே லைப் போய்டும் போலவே

-----------------------------------------------------------------------------------------------------
இனிமேல் ஷேவ் பண்ணா மீசைய மட்டும் எடுக்கவே கூடாது...

பக்கத்துக்கு வீட்டு ஆண்டி பொரிகடலை வாங்கிட்டு வா'ன்னு சொல்லி பொட்டிக்கடைக்கு அனுப்புது

------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் தான் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் - ஜெயலலிதா.

ஆமா...ஏதோ ஒரு ஸ்டேட்டில் 3 மாணவிகளை பஸ்ஸோட வச்சு கொளுத்திட்டாங்களாம்

---------------------------------------------------------------------------------------------------------------
 முதல்வர் ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை காவேரி மரணம் : செய்தி.

அடேய் ராஜபக்சே அடுத்தது நீ தான்...!!! (பேனர் வாசகம் ரெடி)

------------------------------------------------------------------------------------------------------------------
நீங்க ஃப்ரெண்ட்ஷிப் டே கொண்டாடுங்க தப்பில்ல...

'தளபதி' படத்தில் வரும் ரஜினி - மம்முட்டி போட்டோ போட்டு டேக் பண்ணிங்க பொறுத்துகிட்டேன்...

ஆனா 'வேட்டையாடு விளையாடு' படத்தில் வரும் அமுதன் - இளமாறன் போட்டோ போட்டு டேக் பண்றதா எல்லாம் ஏத்துக்க முடியாது...

------------------------------------------------------------------------------------------------------------------